யாரை ஏமாத்த பாக்குறீங்க.. ஆளுநர் சொன்னதை பப்ளிக்கா வெளியிடுங்க! முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்
சென்னை: நீட் தேர்வு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தவறு இல்லை. இதற்காக ஆளுநர் வெளியிட்ட காரணங்களை முதல்வர் ஸ்டாலின் பொதுவில் வெளியிட வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டு இருக்கிறார்.
தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி திருப்பி அனுப்பி உள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு கடந்த செப்டம்பர் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சபாநாயகருக்கு இந்த மசோதாவை கடந்த பிப்ரவரி 1ம் தேதி ஆளுனர் ரவி திருப்பி அனுப்பினார். இந்த மசோதா சமூக நீதிக்கு எதிராக இருப்பதாக ஆளுநர் ஆர். என் ரவி குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில் நீட் தேர்வு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தவறு இல்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது, தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் நிராகரித்து இருக்கிறார். தமிழ்நாட்டில் ஆளும் கட்சி புரிதல் இல்லாமல் பொய்களை பரப்புகிறது. பிப்ரவரி 2017ல் நீட் விலக்கு கேட்டு மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் மூலம் இந்த மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது . இதில் 2 முறை தமிழ்நாடு அரசு சார்பாக விளக்கமும் அளிக்கப்பட்டது.

நீட் தமிழ்நாடு
2017 செப்டம்பரில் நீட் விலக்கு கேட்கப்பட்ட மசோதா குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் 2020 செப்டம்பரில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. அது ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இதை கடந்த பிப்ரவரி 1ம் தேதி ஆளுநர் நிராகரித்துள்ளார். இதற்கு விளக்கமான ரிப்போர்ட் ஒன்றை ஆளுநர் அளித்துள்ளார். ஆனால் தமிழ்நாடு அரசு அதை வெளியிடவில்லை.

நீட் அண்ணாமலை
ஆளுநர் தனது செய்தி குறிப்பிட்டு வேலூர் சிஎம்சி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை குறிப்பிட்டுள்ளார். அதோடு இந்த நீட் விலக்கு மசோதா ஏழைகளுக்கும், கிராம மக்களுக்கும் எதிரானது என ஆளுநர் தனது செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். 2010ல் திமுகவை சேர்ந்த அமைச்சர் காந்தி செல்வன் நீட் தேர்வு குறித்து பேசினார். இது நடந்தது காங்கிரஸ் ஆட்சியில். அப்போது சமூக நீதி பற்றி யோசிக்கவில்லையா? அப்போது தூங்கிவிட்டீர்களா?

சமூக நீதி
அப்போது ஏன் காந்தி செல்வனை ரிசைன் பண்ணவில்லை? இதன் பின் பல வழக்குகள் நடத்தப்பட்டு, இதனால் ஏழை மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கவில்லை என்று தெரிந்த பின்பு நீட் தேர்வு அமலுக்கு வந்தது. 48.5 சதவிகிதம் பேர் 2019, 57.4 சதவிகிதம் பேர் 2020 ஆக உயர்ந்தது. 2019ஐ விட 2020ல் தமிழ் வழி கல்வி மாணவர்கள் 17% பேர் அதிகமாக தேர்வாகி உள்ளனர். பல கிராமங்களில் இருந்து மாணவ, மாணவியர், இருளர் சமுதாயத்தினர் நீட் தேர்வு, மருத்துவ கல்லூரி பக்கம் போகாத குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் நீட்டில் பாஸ்ஸாகி வாய்ப்பு பெற்றுள்ளனர்.

காந்தி செல்வன்
இதில் சமூக நீதி இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் எப்படி சொல்கிறார்?. தமிழ்நாட்டில் மருத்துவ சீட்கள் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 11 மருத்துவ கல்லூரிகள் புதிதாக பிரதமர் மோடி உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த போது திமுக இதை செய்யவில்லை. நீட் என்பது தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு எதிரானதுதான். ஆனால் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு எதிரானது இல்லை. போகாத ஊருக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்.

நீட் விலக்கு மசோதா
நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்ப கவர்னர் காரணங்களை சொல்லி இருக்கிறார். கவர்னர் சொல்லி இருக்கும் புள்ளி விவரங்களை முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். கவர்னர் சொன்னதை ஏன் முதல்வர் ஸ்டாலின் இன்னும் வெளியிடவில்லை. ஸ்டாலின் இதை வெள்ளை அறிக்கையாக பொதுவில் வெளியிட வேண்டும். ஆனால் அதை செய்யாமல் நாளை முதல்வர் ஸ்டாலின் கூட்டம் கூட்ட அழைப்பு விடுத்துள்ளார்.

என்ன அர்த்தம்
என்ன அர்த்தம் இது? அவர் யாரை ஏமாற்ற பார்க்கிறார்? எந்த போகாத ஊருக்கு வழி தேடுகிறார்.. எத்தனை பேர் தமிழ்நாட்டில் நீட்டில் பாஸாகி இருக்கிறார்கள். அதில் எத்தனை பேர் அரசு பள்ளியில் படித்தவர்கள், எத்தனை பேர் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தவர்கள், எத்தனை பேர் தமிழ் வழியில் படித்தவர்கள் என்று சொல்ல முடியுமா?. நாங்களே சொல்கிறோம்.. 2021ல் நீட் தேர்வு எழுதியவர்களில் தமிழ்நாட்டில் 58922 பேர் நீட் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 42000 பேர் மாநில அரசு பாட திட்டத்தில் படித்தவர்கள்.












Click it and Unblock the Notifications