இலங்கை அதிபரிடம் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு குறித்து பேசினார் பிரதமர் மோடி.. அண்ணாமலை ட்வீட்
சென்னை: இந்தியா- இலங்கை இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தானது மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழக பாரம்பரியமும் ஈழத் தமிழர்களுடனான கலாச்சாரத் தொடர்பும் புதுப்பிக்கப்பட்டுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியா வருகை தந்திருக்கும் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அவர்கள், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தபோது, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து நமது பிரதமர் அவர்கள் வலியுறுத்தினார்.

மேலும், இலங்கையில் 13வது சட்டத் திருத்தத்தை, முழுவதுமாக அமல்படுத்தி, இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்றுமாறு இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி மீண்டும் கோரிக்கை விடுத்தார். மேலும் இலங்கையில் மலையகத் தமிழர்கள் குடியேறி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் ரூ. 75 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதையே, பிரதமர் முன்னுரிமையாகக் கொண்டுள்ளார். ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் உள்ள தொடர்பு சங்க காலம் முதலே தொடர்ந்து வருவது. 1800 ஆண்டு பழமையான சங்க இலக்கியமான பட்டினப்பாலையில், ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் பூம்புகார் துறைமுகத்தில் குவிந்து கிடந்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா வருகை தந்திருக்கும் இலங்கை அதிபர் திரு @RW_UNP அவர்கள், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களை இன்று சந்தித்தபோது, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து நமது பிரதமர் அவர்கள் வலியுறுத்தினார். மேலும்,… pic.twitter.com/N2U5n6gHpo
— K.Annamalai (@annamalai_k) July 21, 2023
அத்தகைய தொன்மையுள்ள தமிழகம் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்துத் தொடர்பு, 1960களில் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்டு, நிறுத்தப்பட்டது. இலங்கை காங்கேசம் துறைமுகத்தை, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ 287 கோடி மதிப்பில் புதுப்பித்து, தற்போது மீண்டும் தமிழகம் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்தைத் தொடங்கவுள்ளது.
நாகப்பட்டினம் காங்கேசன் துறை இடையேயான கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க, பாரதப் பிரதமர் மோடி அவர்கள் மற்றும் இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்கே இடையேயான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம், வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழர்கள் பாரம்பரியமும், ஈழத் தமிழர்களுடனான கலாச்சாரத் தொடர்பும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது சாத்தியமாவதற்கு முழுமுதற் காரணமான பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பாஜக சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

-
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
“கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர்”.. கரூர் ரோபோக்கள் என விமர்சித்த அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் அண்ணாமலையா.. செல்லூர் ராஜு பேச்சால் கொந்தளித்த மாணிக்கம் தாகூர்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications