வள்ளுவர் படத்தை நீக்குறோம்.. ஆனால் இந்த குறளை தப்பில்லாமல் சொல்வீர்களா.. ஸ்டாலினுக்கு பாஜக சவால்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    BJP Replied Stalin Tweet | ஸ்டாலினுக்கு பாஜக சவால் !

    சென்னை: 'யாகாவார் ஆயினும் நாகாக்க ' குறளை பொருளுடன் பிழை இல்லாமல் திமுக தலைவர் முக ஸ்டாலின் சொன்னால் திருவள்ளுவர் குறித்து பதிவினை நீக்கிவிடுகிறோம் என தமிழக பாஜக டுவிட்டர் பக்கத்தில் சவால் விடுக்கப்பட்டுள்ளது.

    நேற்று (சனிக்கிழமை) தமிழக பாஜக தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், "கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்" 'கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்?"

    "அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும்" என கூறியிருந்தது.

    நெற்றியில் திருநீறு

    அத்துடன் திருவள்ளுவரின் படம் ஒன்றும் பகிரப்பட்டிருந்தது. அந்த படம் சமூக ஊடகத்தில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. அந்தப் படத்தில், வள்ளுவரின் உடை காவி வண்ணத்தில் தீட்டப்பட்டு இருந்தது. திருவள்ளுவரின் கை மற்றும் நெற்றியில் திருநீறு பட்டை இருப்பதைப் போலவும் வரையப்பட்டு இருந்தது. இதற்கு பதிலடியாக பாஜக திருவள்ளூவரை அவமதித்து விட்டதாக டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

    தமிழ்த் துரோகம்

    தமிழ்த் துரோகம்

    திமுக தலைவர் ஸ்டாலின் பாஜகவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் அந்த பதிவில் " 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்!

    திருந்தப் பாருங்கள்

    எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்!" என கூறியிருந்தார்.

    ஸ்டாலினுக்கு சவால்

    இதற்கு பாஜக டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த பதிவில் "யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"

    இந்த எளிய குறளை தப்பும் தவறுமின்றி இரண்டு முறை சரியாக பொருளுடன் உச்சரித்தால், அந்த பதிவை நீக்கி விடுகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+