16 வயசு சிறுமியை.. வீடு புகுந்து சீரழித்த பாஜக தொண்டர்.. வளைத்து பிடித்த போலீஸ்!
16 வயது சிறுமியை பாஜக உறுப்பினர் பலாத்காரம் செய்துள்ளார்
சென்னை: 16 வயசு பெண்ணை பாஜகவை சேர்ந்த ஒருவர் கொடூரமாக சீரழித்துள்ளார்.. அவருக்கு வயசு 45 ஆகிறதாம்.. பதுங்கி கொண்டு இருந்தவரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளது சென்னை போலீஸ்!
சென்னை ஆவடி அருகே உள்ளது கொள்ளுமேடு என்ற பகுதி.. இங்கு வசித்து வந்த தம்பதியின் மகளுக்கு 16 வயசாகிறது.. ஆவடியில் உள்ள ஒரு தனியார் ஸ்கூலில் இந்த சிறுமி பிளஸ் 1 படித்து வருகிறார்.. அம்மா, அப்பா ரெண்டு பேருமே வேலை பார்த்து வருகின்றனர்.

அப்படித்தான் கடந்த 4-ம் தேதி பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர்.. ஸ்கூல் லீவு என்பதால் சிறுமி மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.. அந்த நேரம் பார்த்து சீனிவாசன் என்பவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
இந்த சீனிவாசன் பாஜகவை சேர்ந்தவர்.. 45 வயசாகிறது.. இவர் ஒரு ஆட்டோ டிரைவர்.. சிறுமி வீட்டில் தனியாக இருப்பது தெரிந்து உள்ளே நுழைந்து மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்... பிறகு அங்கிருந்து தப்பி சென்று தலைமறைவும் ஆகிவிட்டார்.
சாயங்காலம் பெற்றோர் வீட்டுக்கு வந்ததும் நடந்ததை சொல்லி சிறுமி கதறி கதறி அழுதுள்ளார்.. இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஆவடி மகளிர் ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. அதனடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் சீனிவாசனை தேடி வந்தனர்.
இறுதியில் தலைமறைவாக ஒரு இடத்தில் பதுங்கி கொண்டிருந்தவரை தேடி பிடித்து கைதும் செய்துவிட்டனர்.
சீனிவாசன் வீடு செங்குன்றம் சாலையில் இருக்கிறதாம்.. 16 வயசு பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த இந்த பாஜக உறுப்பினர் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications