கறி கடை வைத்திருக்கும் பெரியதுரை மீது துப்பாக்கிசூடு.. பலத்த காயம்.. ரத்தம் கொட்டி.. நெல்லை பரபரப்பு
பாஜக பிரமுகரை துப்பாக்கியால் சுட்டதால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நெல்லை: கறி கடை வைத்திருக்கும் பாஜக பிரமுகரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அடுத்த பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் பெரியதுரை.. இவருக்கு 32 வயதாகிறது.. இவர் அதே பகுதியில் தன்னுடைய அப்பாவுடன் சேர்ந்து கறிக்கடை நடத்தி வருகிறார்.. இவர் பாஜகவின் மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராகவும் இருக்கிறார்.

கறி கடை வைத்திருக்கும் பகுதியில் வசித்து வருபவகிறார் ஒரு முன்னாள் ராணுவ வீரர் ஜெபமணி.. இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.. இந்த கறிக்கடையை வைத்துதான் நிறைய பிரச்சனை வந்திருக்கிறது.
கறிக்கடையின் கழிவுகளை, அந்த ஜெபமணியின் வீட்டுக்கு அருகே கொட்டுவது தொடர்பாக பலமுறை தகராறு வந்துள்ளது.. எப்போதெல்லாம் இவர்களுக்குள் தகராறு வருகிறதோ அப்போதெல்லாம் துப்பாக்கியை காட்டி சுட்டு விடுவேன் என்று ராணுவ வீரர் மிரட்டுவாராம்.
இந்த நிலையில்தான் இன்று ஜெபமணி சிகரெட் பிடிக்கவும், அது தொடர்பாக பெரியதுரையுடன் தகராறு வெடித்துள்ளது.. வார்த்தை மோதலும் ஏற்பட்டுள்ளது.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ஜெபமணி, வீட்டுக்குள் வேகமாக சென்று, துப்பாக்கியை எடுத்து வந்து பெரியதுரையை நோக்கி சுட்டுவிட்டார்.. இதில் பெரியதுரையின் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டி அலறினார்.
இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, உடனடியாக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.. தகவலறிந்த பெருமாள்புரம் போலீசார் ஜெபமணியை கைது செய்து, அந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.. தற்போது பெரியதுரைக்கு தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவினர் பெருமாள்புரம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு வருகின்றனர்.. அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications