ஒரு லெவலுக்கு மேல் எடப்பாடியை பாஜக மிரட்ட முடியாது.. ஏன் தெரியுமா? பாயிண்ட்ஸ்களை அடுக்கிய புள்ளி!
ஓ பன்னீர்செல்வத்தை வைத்து அதிமுகவிற்கு உள்ளே பாஜக ஆட்டம் காட்டிக்கொண்டு இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
சென்னை: எடப்பாடியை கட்டுப்படுத்த முடியாது என்பதால் பாஜக தலைவர் ஓ பன்னீர்செல்வம் பக்கம் இருக்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைதேர்தலால் அதிமுகவின் உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒருவழியாக நேற்றுதான் ஓ பன்னீர்செல்வம் தனது தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளர் ஆகிவிட்டார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து கே.எஸ் தென்னரசு இன்று வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார். தாக்கல் செய்ததோடு ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் அவர் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார்.இந்த நிலையில்தான் அதிமுகவில் நடக்கும் மோதல் குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி
அவர் அளித்த பேட்டியில், எம்ஜிஆர் இறந்த போது அதிமுகவில் ஜானகி அணி, ஜெயலலிதா அணி இருந்தது. அப்போது ஜெயலலிதாவிற்குத்தான் பலம் இருந்தது. ஆனால் ஜானகி அணி ஜெயலலிதாவிற்கு செல்ல வேண்டிய வாக்குகளை பிரித்தார். ஜானகி அப்போது வாக்குகளை பிரிக்கும் சக்தியாக இருந்தார். அதேபோல்தான் ஜெயலலிதாவை போல எடப்பாடி இருக்கிறார். அவரால் குறிப்பிட்ட இடங்களை வெல்ல முடியும். ஆனால் அதை ஜானகி தடுத்தது போல ஓபிஎஸ் தடுக்கிறார். ஓபிஎஸ்ஸால் தனியாக வெல்ல முடியாது. அவர் எடப்பாடி வெல்வதையும் தடுக்கிறார். அதனால்தான் எடப்பாடி - ஓ பி எஸ் ஒன்றாக இருக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.

அதிமுக தோல்வி
ஆனால் எடப்பாடியோ அதெல்லாம் இல்லை. அதிமுக தோல்வி அடைந்தால் தோல்வி அடையட்டும். ஆனால் நான்தான் அதிமுக. எனக்கு கீழ்தான் அதிமுக இருக்கும் என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார். தான் செய்வதில் அவர் தெளிவாக இருக்கிறார். ஆனால் ஓ பன்னீர்செல்வத்திற்கு அந்த நம்பிக்கை இல்லை. காரணம் அவரால் ஜெயிக்க முடியாது. அதனால் ஓ பன்னீர்செல்வம் பாஜகவின் ஆதரவை நாடுகிறார். கட்சி எடப்பாடியிடம்தான் இருக்கிறது. வேறு வழியில்லாமல் பாஜகவின் உதவியை ஓ பன்னீர்செல்வம் நாடுகிறார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம் இரண்டு பேரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற தொனியில் தீர்ப்பு வழங்கி உள்ளது. இடைக்கால தீர்ப்புதான். ஆனால் இரண்டு பேருமே திருந்துவது போல இல்லை. ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பார்கள். அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. அந்த கூத்தாடிகள் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். இது அரசியல் பிரச்சனை. இதற்கு கோர்டிற்கு சென்று இருக்கிறார்கள். இதில் கிடைக்கும் தீர்வு எல்லாம் தற்காலிகம்தான். எடப்பாடி - ஓ பன்னீர்செல்வத்தை எப்படியாவது சேர்க்க வேண்டும். அவர்கள் முதுகில் பயணம் செய்ய வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.

வளைக்க முடியும்
பாஜக நினைத்தால் ஓ பன்னீர்செல்வத்தை வளைக்க முடியும். ஆனால் பாஜகவால் எடப்பாடியை வளைக்க முடியாது. அமலாக்கத்துறை, சிபிஐயை வைத்து பாஜக எடப்பாடியை கட்டுப்படுத்த முடியாது. எடப்பாடி நினைத்தால் தூக்கி போட்டுவிட்டு சென்றுவிடுவார். ஒரு லெவலுக்கு மேல் எடப்பாடியை வளைக்க முடியாது. எடப்பாடியை கட்டுப்படுத்த முடியாது என்பதால் அவர்கள் ஓ பன்னீர்செல்வம் பக்கம் இருக்கிறார்கள். தங்களுக்கு விசுவாசமாக இருக்கும் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருக்க வேண்டும். அவரை மூலம் அதிமுகவை கவிழ்க்க வேண்டும். அதிமுகவை பாஜக வசம் கொண்டு வர வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.

ஓ பன்னீர்செல்வம்
அதனால்தான் ஓ பன்னீர்செல்வம் பக்கம் பாஜக இருக்கிறது. ஆனால் எடப்பாடி இதை எதிர்க்கிறார். இதனால்தான் எடப்பாடியை பாஜக சப்போர்ட் செய்வது இல்லை. வேட்பாளரை களமிறக்கிவிட்டு எடப்பாடி அதில் உறுதியாக இருந்தார். ஆனால் ஓ பன்னீர்செல்வமோ.. பாஜக வேட்பாளரை நிறுத்தினால் வாபஸ் வாங்குவேன் என்கிறார். இதிலேயே பாஜகவின் ஆள் யார் என்பது தெரியவில்லையா? எடப்பாடி கையில்தான் அதிமுக இருக்கிறது. அதனால் ஓ பன்னீர்செல்வம் பாஜகவின் பின்னால் சுற்றிக்கொண்டு இருக்கிறார், என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications