இன்று கிளைமேக்ஸ்.. அவசரமாக டெல்லி பறக்கும் அண்ணாமலை, எல் முருகன்.. ரெடியான பாஜக வேட்பாளர் லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜக வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதற்காக இன்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் டெல்லி செல்ல உள்ளனர்.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே 195 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக முதல் கட்டமாக அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில், மூன்றாவது முறையாக வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குஜராத்தின் காந்திநகரில் மீண்டும் களமிறங்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

BJP Chief Annamalai and L Murugan to travel to Delhi on candidates list for Tamil Nadu

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவிலும், ஸ்மிருதி இரானி அமேதியிலும் போட்டியிடுவார்கள், ஸ்மிருதி இரானி 2019 இல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக அசத்தல் வெற்றியைப் பெற்றார். ராஜஸ்தானின் கோட்டாவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

28 பெண்கள், 50 வயதுக்குட்பட்ட 47 தலைவர்கள், ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த 57 பேர் என 34 மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் இரண்டு முன்னாள் முதல்வர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 195 பேரில், 51 பேர் அனைத்து முக்கியமான மாநிலமான உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், 20 பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஐந்து பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள்.

இன்று தமிழ்நாடு: இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதற்காக இன்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் டெல்லி செல்ல உள்ளனர்.

மத்தியில் ஆளும் பாஜக தமிழ்நாட்டில் இன்னும் கூட்டணியை அறிவிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது.

2024 லோக்சபா தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்ய மார்ச் வரை மட்டுமே கால அவகாசம் என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவிட்டு இருந்ததாம். மோடி வருவதற்கு முன் கூட்டணியை இறுதி செய்ய வேண்டும்.. நீங்கள் நடைப்பயணம் செய்தது போதும்.. உடனே கூட்டணியை முடிவிற்கு கொண்டு வாருங்கள்.

கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிங்க. 3வது அணி உருவாவதை உறுதி செய்யுங்கள் என்று அண்ணாமலைக்கு டெல்லி பாஜக உத்தரவிட்டு இருந்ததாம். ஆனால் பாஜகவால் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை. கூட்டணி தலைவர்களை மோடி இருக்கும் மேடையில் ஏற்றுவேன் என்று அண்ணாமலை கொடுத்த வாக்கையும் காப்பாற்ற முடியவில்லை.

பாஜக கூட்டணி இல்லை: அதிமுக கூட்டணிக்கு பாமக, தேமுதிக செல்வதாக தகவல்கள் வருவதால்.. பாஜக கூட்டணிக்கு ஆள் வராத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது இரண்டு கட்சிகளும் பாஜக கூட்டணிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதிமுக கூட்டணிக்கு வர திட்டமிட்டு உள்ளன.

ஒரு பக்கம் சிறிய கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் (TMC) பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. 1999ல் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியை கவிழ்ப்பதில் அவரது தந்தை மூப்பனார் முக்கிய பங்கு வகித்தார். தற்போது அவர் மகனே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார். அதே சமயம் தமிழ் மாநில காங்கிரசுக்கு வெறும் 0.5 சதவிகிதம் மட்டுமே வாக்கு உள்ளது. இது போக பாரிவேந்திரன் ஐஜேகே போன்ற சிறிய கட்சிகள் மட்டுமே பாஜக கூட்டணிக்கு வந்துள்ளன.

தமிழ்நாட்டில் இன்னும் கூட்டணியே முடிவாகாத நிலையில்தான், தமிழ்நாடு பாஜக வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதற்காக இன்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் டெல்லி செல்ல உள்ளனர்.

இரண்டாவது தொகுதி: லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி இரண்டு தொகுதியில் போட்டியிடுவாரா? இரண்டாவது தொகுதி எதுவாக இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டின் போட்டியாளர்கள் லிஸ்ட் என்று அறிவிக்கப்படவில்லை.

ஒருவேளை மோடி இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் பட்சத்தில் அவர் தமிழ்நாட்டில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேசிய அளவில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உள்ளது. ஏன் உலக அளவில் அதிக தொண்டர்கள் கொண்ட கட்சியில் பாஜக ஒன்றாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் என்னவோ பாஜகவிற்கு பெரிய ஆதரவு இல்லை.

கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக சார்பாக ஒருவர் கூட எம்பியாக தேர்வாகவில்லை. அந்த அளவிற்கு பாஜகவிற்கு தமிழ்நாட்டில் பலம் இல்லாத சூழ்நிலை உள்ளது. பாஜகவிற்கு சில மாவட்டங்களில் சரியான பூத் கமிட்டி கூட இல்லாத நிலை உள்ளது.

பாஜகவை தென்னிந்தியாவில் வலுப்படுத்தும் விதமாகவும், தமிழ்நாட்டில் பாஜகவின் கால் தடத்தை பதிக்கும் விதமாகவும் பிரதமர் மோடி சில திட்டங்களில் இறங்கி உள்ளாராம். தென்னிந்தியாவின் அரசியல் சூழ்நிலையை, முக்கியமாக தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலையை மொத்தமாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்தில் பாஜக சில ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+