ஏர்ஷோவில் நடந்த திக் சம்பவம்! அமித் ஷாவிற்கு போன ரிப்போர்ட்! அனுப்பியது யாருன்னு தெரியுமா?
சென்னை: ஏர் ஷோ நிகழ்வு சம்பவம் தமிழகத்தில் மட்டும் அல்ல, தேசிய அளவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த விவகாரம் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்து உள்ளது. இந்த நிகழ்ச்சி வெற்றிபெற்றாலும்.. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 5 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. இந்த நிகழ்ச்சியில் யாரும் தள்ளு முள்ளு ஏற்பட்டு மரணம் அடையவில்லை. நிகழ்ச்சி உள்ளே விபத்து ஏற்பட்டு யாரும் மரணம் அடையவில்லை. மாறாக நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு திரும்பிய போது அல்லது திரும்ப முயன்ற போது மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

பறந்த ரிப்போர்ட்: பாஜக தலைவர் அண்ணாமலை, ஏர் ஷோ சம்பவம் பற்றி , தான் திரட்டியத் தகவல்களை ஒரு ரிப்போர்ட்டாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அனுப்பி வைத்துள்ளாராம். அதேசமயம், மத்திய உளவுத்துறையும் ( ஐ.பி.) ஒரு ரிப்போர்ட் கொடுத்துள்ளதாம். அதில், நிகழ்ச்சி தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகள் செய்துள்ள குளறுபடிகள் விவரிக்கப்பட்டுள்ளதாம். இதற்கிடையே, ஏர் ஷோ சம்பவம் பற்றி தமிழக கவர்னரிடம் அறிக்கைக் கேட்டிருக்கிறதாம் மத்திய உள்துறை அமைச்சகம்.
இந்த கொடூர நிகழ்விற்கு பின் முக்கியமான காரணங்கள் உள்ளன: முதல் விஷயம்.. 13- 15 லட்சம் கூட்டம் என்பது எதிர்பார்க்காதது. இதை திட்ட ரீதியாக எதிர்பார்த்து இருந்தாலும் கூட .. களத்தில் 15 லட்சம் பேரை சமாளிக்க போதிய திட்டமிடல் இல்லாமல் போய்விட்டது. உதாரணமாக அண்ணா சாலையை மெரினாவில் காமராஜர் சாலையுடன் இணைக்கப்படும் எந்த சாலையிலும் பிற்பகல் நேரத்தில் போலீசார் அதிகமாக இல்லை. வாலாஜா தெரு தொடங்கி.. அண்ணா சாலை - காமராஜர் சாலையை இணைக்கும் கிளை சாலை எதிலும் அதிக அளவில் போலீசார் இல்லை.
இதற்கு காரணம் பெரும்பாலான போலீசார் மெரீனாவிலேயே பாதுகாப்பில் இருந்துவிட்டனர். நிகழ்ச்சி முடிந்த உடனே மக்கள் தியேட்டரில் படம் முடிந்து வெளியேறும் மக்கள் போல வெளியேற தொடங்கிவிட்டனர். சிலர் நிகழ்ச்சி முடியும் முன்பே வெளியேற செல்ல தொடங்கிவிட்டனர். எவ்வளவு பாதுகாப்பு இருந்தாலும்.. ஏற்பாடு இருந்தாலும் ஒரே நேரத்தில் இவ்வளவு கூட்டம் ஒன்றாக வெளியேறினால்.. எதையும் சமாளிக்க முடியாது.
மக்கள் 5 பேர் இறக்க காரணம்.. கடுமையான வெயில்.. நீர் இழப்பு.. அதனால் ஏற்பட்ட.. ஹீட் ஸ்ட்ரோக். இது ஏற்பட காரணம்.. மீறினால் தண்ணீர் பந்தல் இல்லை. கடைகளில் மட்டுமே தண்ணீர் காசுக்கு வாங்க வேண்டும். அதற்கும் லைனில் நிற்க வேண்டும். சாதாரண ஏப்ரல் வெயிலுக்கு மோர் பந்தல் வைக்கும் நாம்.. இந்த மெரினா நிகழ்வில் தண்ணீர் வைக்கவில்லை. சென்னையில் நிலவும் கடுமையான வெயில்தான் அனைத்திற்கும் காரணம். நேற்று மெரினாவில் கிட்டத்தட்ட 35 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது. கடுமையான வெயில் காரணமாக பலருக்கும்.. கடுமையான நீர் இழப்பு ஏற்பட்டு உள்ளது. நீர் இழப்பு காரணமாக மக்கள் அங்கே கடுமையாக துடித்து உள்ளனர்.
சிக்கலே ஒருமுறை உள்ளே சென்றால் வெளியே வருவது சிக்கல். அண்ணா சிலையில் இருந்தோ.. மெரினாவில் மற்ற பகுதியில் இருந்தோ அண்ணா சாலைக்கு செல்ல வேண்டும் என்றால் நடந்தே செல்ல வேண்டும். இதில் இன்னொரு சிக்கல்.. இதற்கு குறைந்தது 1 மணி நேரம் ஆகும். கடுமையான கூட்ட நெரிசல் காரணமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக கூட்டத்தில் ஊர்ந்து ஊர்ந்து செல்ல செல்ல வேண்டும். உள்ளே சிக்னல் இல்லை. இதனால் மக்கள் காத்திருக்க விரும்பாமல் ஒரே நேரத்தில் கிளம்பியது பெரிய தவறு. அதோடு சில சாலைகளில் கார்களை உள்ளே விட்டதால்.. அங்கே மக்களும் வெளியேற முடியவில்லை. காரும் வெளியேற முடியவில்லை. கார் வாகனங்கள் டிராபிக்கில் செல்வது போல நடந்து செல்லும் போது கூட ஊர்ந்து செல்லும் அளவிற்கு அங்கே கூட்டம் நிலவியது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications