அண்ணாமலை மீது அமித் ஷா கோபம்.. பதவி காலி? ஜூன் 4க்கு பின் இதுதான் நடக்கும்.. சீக்ரெட்டை உடைத்த தலை
சென்னை; அண்ணாமலை பதவி காலியாகும் என்று கணிப்பு உள்ளது, அண்ணாமலை தோல்வி தெரிந்தே.. 1 லட்சம் வாக்குகளை காணவில்லை என்கிறார். ஜூன் 4ம் தேதி பலர் காணாமல் போய் விடுவார்கள். அதில் அண்ணாமலையும் ஒருவர் என்று மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் முடிவிற்காக கட்சிகள் காத்து இருக்கின்றன. இந்த நிலையில்தான் பாஜகவில் நடக்கும் மோதல்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி: அதில், பாஜகவில் லோக்கல் நிர்வாகிகள் பணம் சம்பாதிக்கவே வந்தனர். அதனால்தான் மேலிடம் கொடுத்த பணத்தை தேர்தல் செலவுக்கு பயன்படுத்தாமல் செலவு செய்துள்ளனர். மாவட்ட தலைவர்கள் வரை மேலிட பணம் வந்துள்ளது. ஆனால் கீழே பணம் செல்லவில்லை. கீழே எங்கும் பணம் கொண்டு செல்லப்படவில்லை. மாவட்ட தலைவர்களே பொய்யாக பூத் கமிட்டி உருவாக்கி தங்கள் வீட்டுக்கு உள்ளேயே பணம் வைத்துக்கொண்டனர்.
போஸ்டர் அடிக்கும் அளவிற்கு நிலைமை இதனால் மோசமாகிவிட்டது. இரவோடு இரவாக பணம் அவர்களுக்கு வந்துவிட்டது. மேலிடம் வரை மோசடி நடக்கிறது. 1000 கோடி ரூபாய் வந்துள்ளதாக கூறுகிறார்கள். 30 தொகுதிகளுக்கு 1000 கோடி ரூபாய் சென்றுள்ளது. ஆனால் இந்த பணம் கீழே செல்லவில்லை. ஒவ்வொரு இடங்களுக்கு செல்லும் போது பாதி பாதியாக அடித்துவிட்டு சென்றுள்ளனர். மாவட்ட செயலர்கள் மொத்தமாக அடித்துவிட்டு கீழே கொடுக்காமல் வைத்துள்ளனர்.
தமிழிசை விசாரணை; இதை பற்றி தமிழிசையும் விசாரித்துள்ளார். அமித் ஷாவிடம் புகார் சென்றுள்ளது. அண்ணாமலையிடம் அமித் ஷா கோபத்தில் உள்ளார். பலர் பணம் அடித்தது பற்றி புகார் சென்றுள்ளது. அவர்களிடம் பணம் இல்லை. தேர்தலை எதிர்பார்த்தே இவர்கள் இருந்தனர். இப்போது பணம் வந்துவிட்டது. அந்த பணத்தை இவர்கள் அடித்துவிட்டனர். பலருக்கும் கடன் இருந்தது. அரசியல் செய்ய பணம் தேவைப்பட்டது. இதைத்தான் விளக்கமாக அவர்கள் கொடுத்துள்ளனர்.
ஒவ்வொரு வேட்பாளருக்கு 10 கோடிதான் சென்றுள்ளது. ஒவ்வொரு வேட்பாளருக்கும் 20- 25 கோடி ரூபாய் செல்லவில்லை. அப்போது மேலிடமே பாதியை அடித்துள்ளது. வேட்பாளர்கள் பாதியை அடித்துள்ளனர். மீதியை மாவட்ட நிர்வாகிகள் அடித்துள்ளனர். அண்ணாமலைக்கு இதில் தொடர்பு உள்ளது. 1000 ரூபாய் எப்போதும் வராது. எப்போதாவதுதான் வரும். மழை மாதிரி இப்போதுதான் பணம் வருகிறது. அதனால் அடித்துவிட்டனர்.
அண்ணாமலைக்கு சிக்கல்: பணம் வருகிறது. இதை விட்டால் வேறு வழியில்லை. பணம் வரும் என்றுதான் பாஜகவிற்கு இவர்கள் வந்தனர் . அவர்கள் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தது இல்லை. அதனால் பணம் இல்லை . பாஜகவில் பலருக்கும் கடன் இருந்தது. அரசியல் செய்ய பணம் தேவைப்பட்டது. இதைத்தான் விளக்கமாக அவர்கள் கொடுத்துள்ளனர்.
அண்ணாமலை பதவி காலியாகும் என்று கணிப்பு உள்ளது. ஆனால் டெல்லியில் பாஜகவே காலியானால் அண்ணாமலை ஆவதில் என்ன இருக்கிறது. குஜராத்தில் மோடி பார்ம் ஹவுஸ் கட்டி ரெடியாக இருக்கிறது. அங்கே மோடி போய் செட்டில் ஆகி விடுவார். அண்ணாமலை தோல்வி தெரிந்தே.. 1 லட்சம் வாக்குகளை காணவில்லை என்கிறார். ஜூன் 4ம் தேதி பலர் காணாமல் போய் விடுவார்கள். அதில் அண்ணாமலையும் ஒருவர் என்று மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை கிரீன் சிக்னல் கொடுப்பாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு!












Click it and Unblock the Notifications