கனிமொழி.. உதயநிதி.. கலாநிதி.. ஆதாரம் எங்கே? சிக்கிக்கொண்ட அண்ணாமலை? டெல்லிக்கு பறந்த புகார்கள்!
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுகவின் டாப் தலைவர்கள் அடுத்தடுத்து மான நஷ்ட வழக்கு தொடுத்து வருகின்றனர்.
பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து திமுகவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்தார். திமுகவினரின் சொத்து பட்டியல்கள் என்று குறிப்பிடப்படும் எக்ஸல் சீட் ஒன்றை அவர் வெளியிட்டார்.

அதேபோல் முதல்வர் ஸ்டாலின் மீதும் சில புகார்களை அண்ணாமலை பிரஸ் மீட்டில் அவர் வைத்தார். திமுக மீது சரமாரி புகார்களை வைத்தார்.
திமுக அமைச்சர்களின் சொத்து மதிப்பு என்றும் சிலவற்றை காட்டினார். இதையடுத்து பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்புச்செயலார் ஆர்எஸ் பாரதி அளித்த பதிலில், அண்ணாமலைக்கு 15 நாட்கள் அவகாசம் , அதற்குள் திமுக சொத்துக்கான பத்திரங்களை வெளியிடுங்கள் என்று என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்எஸ் பாரதி சவால் விடுத்து உள்ளார்.
செய்தியாளர்கள் நேரத்தை அண்ணாமலை வீணடித்துவிட்டார். சாலமன் பாப்பையா பட்டிமன்றம் போல காமெடியாக இருந்தது அண்ணாமலை பேச்சு . அண்ணாமலை பேச்சு சிரிப்பை வரவழைத்தது.
அவர் எல்லாம் எப்படி ஐபிஎஸ் ஆனார், எப்படி பாஸ் ஆனார் என்ற கேள்வி வருகிறது. தேர்தலில் போட்டியிட்டவர்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்பது விதி.
திமுக சார்பாக போட்டியிட்டவர்களும் சொத்து விவரங்களை வெளியிட்டனர். அதில் பொய் சொல்லி இருந்தால் நடவடிக்கை எடுக்கும் விதி முறை இருக்கிறது. அண்ணாமலை என்ன மோடி மீது குற்றச்சாட்டு வைக்கிறாரா? என்ன இது? அவர் இப்படி பேசலாமா?
அவதூறு பரப்பிய அண்ணாமலை கண்டிப்பாக நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். முதல்வர் ஸ்டாலின் மீது அண்ணாமலை புகார் வைத்து இருக்கிறார். 2006-2011 ஆட்சியில் மெட்ரோ பணியில் ஊழல் என்று கூறி உள்ளார். 2014ல் இருந்து மோடி தானே ஆட்சியில் இருக்கிறார். அவர் மீது கண்டிப்பாக நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களுக்கு சுற்றுப் பயணம் செய்வார், என்று கூறினார்.
திமுக சொத்து:
இதையடுத்து திமுகவின் சொத்து மதிப்பு என்று அண்ணாமலை வெளியிட்ட ஆவணங்களுக்கு 48 மணி நேரத்தில் ஆதாரம் காட்ட வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கப்படும். 500 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு அவர் மீது வழக்கு தொடுக்கப்படும், என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்எஸ் பாரதி மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுகவின் டாப் தலைவர்கள் அடுத்தடுத்து மான் நஷ்ட வழக்கு தொடுத்து வருகின்றனர்.
ஆர்எஸ் பாரதி வழக்கு இல்லாமல் அண்ணாமலை மீது மேலும் சில வழக்குகள் பதியப்படும் என்று கூறப்படுகிறது.
உதயநிதி வழக்கு

சொத்து பட்டியல் விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு 48 மணி நேரம் கெடு விதித்து அமைச்சர் உதயநிதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ரூ 2039 கோடி சொத்து சேர்த்ததாக ஒரு அவதூறு தகவலை தெரிவித்துள்ளீர்கள்
அதற்கு ஆதாரம் இருந்தால் காட்ட வேண்டும். இல்லையென்றால் நிபந்தனையற்ற மன்னிப்பை அண்ணாமலை அடுத்த 48 மணி நேரத்திற்குள் கேட்க வேண்டும். இல்லையெனில் ரூ 50 கோடி நஷ்ட ஈட்டை கொடுக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.
கனிமொழி வழக்கு :

இதில் கனிமொழி எம்பி மீதும் அண்ணாமலை புகார்களை வைத்து இருந்தார். இந்த நிலையில் கனிமொழி அளித்த பேட்டியில், திமுகவினர் குறித்து அவதூறாக பொய் பரப்பிய அண்ணாமலைக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. நானும் என் தரப்பில் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு நோட்டீஸ் அனுப்புவேன் என்று கூறி உள்ளார்.
கலாநிதி
இது ஒரு பக்கம் இருக்க.. அண்ணாமலை தனது பேட்டியில், தனது வீட்டு வாடகை அனைத்தையும் நண்பர்கள்தான் கட்டுவதாக கூறி இருந்தார். இதற்கு எதிராகவும் திமுக எம்பி கலாநிதி வீராசாமி முக்கியமான புகார் ஒன்றை அளித்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்.பி கலாநிதி வீராசாமி கடிதம் எழுதி புகார் அளித்துள்ளார். அதில், வருமான வரிச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்.பி கலாநிதி வீராசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
நண்பர்களிடம் இருந்து மாதம் 7 முதல் 8 லட்சம் வரை வீட்டு செலவுகளுக்கு பணம் பெறுவதாக அண்ணாமலை கூறியுள்ளார். ஆனால் இதை அவர் வருமானத்தில் காட்டவில்லை. அதனால் வருமான வரிச்சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை வைத்துள்ளார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications