ஆ.ராசாவுக்கு சிக்கல்? இந்துக்கள் பற்றி பேச்சு! விஷயத்தை லோக்சபாவுக்கு எடுத்த சென்ற பாஜக! பரபர புகார்
சென்னை: இந்து மதம் குறித்த திமுக எம்பி ஆ. ராசா கூறிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஆ. ராசா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அதில் அவர் பேசிய பேச்சு இணையத்தில் சர்ச்சையானது.
அவர் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசிவிட்டதாகவும் அவரது பேச்சால் இந்துக்கள் மனம் புண்பட்டுவிட்டதாகவும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்தன.

என்ன பேசினார்
அந்த நிகழ்ச்சியில் திமுக எம்பி ஆ. ராசா, "இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான். இந்து கிறிஸ்துவனாக இல்லை என்றால், நீ இஸ்லாமியனாக இல்லை என்றால் நீ இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? இந்துவாக இருக்கும் வரை நாம் சூத்திரன்" என்று அவர் பேசி இருந்தார்.

போராட்டம்
இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த பாஜகவினர் ஆ. ராசா இந்து மதத்தைப் புண்படுத்தும் வகையில் பேசிவிட்டதாகவும் இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. தமிழ்நாடு முழுக்க போராட்டம் பாஜகவினர், இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், பல இடங்களிலும் போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

மக்களவையில் புகார்
இந்நிலையில், இந்த விவகாரத்தைத் தமிழக பாஜக இப்போது நாடாளுமன்றத்திற்கும் எடுத்துச் சென்றுள்ளது. பாஜகவின் மாநில ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமார், நாடாளுமன்றத்தில் ஆ. ராசாவுக்கு எதிராகப் புகார் அளித்து உள்ளார். இந்துக்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக மக்களவை சபாநாயகரிடம் கொடுக்கப்பட்ட அந்த புகாரில் கூறப்பட்டு உள்ளது.

தேர்தலில் போட்டியிடத் தடை
தனது புகாரில் அரசியல் ஆதாயத்திற்காக அவர் இந்துக்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சைப் பேசி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள நிர்மல் குமார், லோக்சபாவில் அலுவல் நடத்தை விதி 233A(4)ன் கீழ், இந்துக்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்காக ஆ. ராசாவை எதிர்காலத்தில் எந்தத் தேர்தலிலும் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்து உள்ளார். நாடாளுமன்றத்தில் ஆ.ராசாவுக்கு எதிராகக் கொடுக்கப்பட்டுள்ள இந்த புகார் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஆ. ராசா
பாஜக உள்ளிட்டோர் புகார் அளித்த போதிலும் இந்த விவகாரத்தில் ஆ. ராசா உறுதியாக உள்ளார். நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூட அவர், "இந்துக்களைப் புண்படுத்திவிட்டார். ஆ. ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். மன்னிப்பு கேட்பது பெரிய விசயம் இல்லை. நான் 2ஜியையே பார்த்தவன். இந்த வேலையை என்னிடம் வைத்துக்கொள்ளக்கூடாது.

அடுத்து என்ன
அப்போது இருந்த இந்து மதத்தில் இதெல்லாம் இருந்தது என்றும் இப்போது இல்லை என பாஜகவின் திருப்பதி நாராயணன் சொன்னார். அது சரி. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவியோ சனாதனம் உள்ளது என்கிறார்" என்று கூறி இருந்தார். இந்தச் சூழலில் நாடாளுமன்றத்தில் ஆ.ராசாவுக்கு எதிராகப் புகார் கொடுக்கப்பட்டு உள்ள நிலையில், அடுத்து இந்த விவகாரம் எப்படிச் செல்லும் என்பதைப் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications