"டெம்பர் கிளாஸ்".. எடப்பாடி - ஓபிஎஸ் பிரிஞ்சா கதை ஓவர்.. சுதாரித்த டெல்லி.. சீக்ரெட்டை சொன்ன புள்ளி
இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் பல சிக்கல்கள் உள்ளன. முக்கியமாக தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம் கொடுத்துள்ளனர். அதை இன்னும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி என்ற ஸ்கிரீனை பாதுகாப்பதே ஓபிஎஸ் என்ற டெம்பர் கிளாஸ்தான் என்று அரசியல் விமர்சகர் ரிஷி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும், அதை பொதுக்குழு உறுப்பினர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் இடம்பெறலாம். வேட்புமனுவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்து போடட்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்காக மட்டுமே, என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து தற்போது பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் மூலம் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்து அனுப்பிய கடிதங்களை எடுத்துக்கொண்டு அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் டெல்லி சென்றுள்ளார். இந்த விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும். அதிமுக ஒரு அணிக்குள் இருந்தால்தான் திமுகவை எதிர்க்க முடியும். இது பற்றி ஓ பன்னீர்செல்வத்திடம் பேசினேன். ஓ பன்னீர்செல்வத்தின் வேட்பாளரை விட எடப்பாடி தரப்பின் வேட்பாளருக்கு அதிக ஆதரவு உள்ளூரில் உள்ளது. அதனால் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வத்திடம் கேட்டுக்கொண்டேன். ஓ பன்னீர்செல்வம் தனது வேட்பளாரை வாபஸ் வாங்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன், என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜகவின் இந்த நிலைப்பாடு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அரசியல் விமர்சகர் ரிஷி இது தொடர்பாக ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ரிஷி பேட்டி
அவர் அளித்துள்ள பேட்டியில், ஓபிஎஸ் - எடப்பாடி சேர்ந்து இருந்தால்தான் தங்களுக்கு பாதுகாப்பு என்று பாஜக நினைக்கிறது. அதைதான் சிடி ரவி, அண்ணாமலை குறிப்பிட்டார்கள். இவர்கள் சேர வேண்டும். தனியாக இருந்தால் நமக்குத்தான் சிக்கல். நமக்கு லாபம் இல்லை என்று டெல்லி நினைக்கிறது. தமிழ்நாட்டில் கூட சிலர் எடப்பாடிக்கு ஆதரவாக இருந்தாலும் கூட டெல்லி இந்த விவகாரத்திலும் இரண்டு பேருமே ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் இப்போது இருவரும் சேர வேண்டும் என்றும் டெல்லி தரப்பு நேரடியாக, வெளிப்படையாக கோரிக்கை வைத்து இருக்கிறது. எடப்பாடி மட்டும் தனியாக இருந்தால் வெல்ல முடியாது என்று பாஜக நினைக்கிறது.

பாஜக
ஓபிஎஸ்தான் பாஜகவிற்கு மிகவும் நெருக்கம். அதிமுக - பாஜக கூட்டணி என்ற ஸ்கிரீனை பாதுகாப்பதே ஓபிஎஸ் என்ற டெம்பர் கிளாஸ்தான். இந்த கிளாஸை உடைத்துவிட்டு, கூட்டணியை முறிக்கலாம் என்று எடப்பாடி நினைத்தார். அதைதான் தற்போது டெல்லி பாஜக தடுத்து இருக்கிறது. இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று டெல்லி பாஜக கூறி உள்ளது. இருவரும் ஒன்றாக இருந்தே தோல்வி அடைந்துவிட்டனர். தனியாக இருந்தால் வெல்ல முடியாது என்பதால்தான் இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் தங்கள் கூட்டணிக்கும் நல்லதாக இருக்கும் என்று பாஜக நினைக்கிறது.

இரட்டை இலை
இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் பல சிக்கல்கள் உள்ளன. முக்கியமாக தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம் கொடுத்துள்ளனர். அதை இன்னும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் இந்த விவகாரத்தில் கடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை பெற்றுள்ளனர். அந்த பொதுக்குழு உறுப்பினர்கள்தான் கடிதத்தை அனுப்புகிறார்களா? இதில் போர்ஜரி நடக்கவில்லையா என்று கண்டுபிடிப்பது எப்படி? இதை எப்படி கண்டுபிடிப்பார்கள். இன்றுதான் தேர்தல் ஆணையம் இதில் முடிவு எடுக்கும். தேர்தல் ஆணையம் இதை ஏற்றுக்கொள்ளுமா என்பதை பார்க்க வேண்டும்.

தீர்ப்பு
இந்த தீர்ப்பு இரண்டு தரப்பிற்கும் சமமான தீர்ப்புதான். இரண்டு தரப்பிற்கும் சமமான தீர்ப்பாக.. டிரா மேட்ச் போல இந்த தீர்ப்பு வந்துள்ளது. அதனால்தான் எடப்பாடி பழனிசாமி தரப்பும் இந்த தீர்ப்பு காரணமாக அப்செட் ஆகி உள்ளது. இரண்டு பேருமே சேர விரும்பவில்லை போல. ஆனால் இவர்களை கஷ்டப்பட்டு சேர்த்து வைத்துள்ளனர். ஓ பன்னீர்செல்வம் இந்த தீர்ப்பு மூலம் அதிமுகவிற்குள் வந்துவிட்டதாக நினைக்கிறார். ஆனால் இது இடைக்கால தீர்ப்புதான். இது எல்லாம் ஓ பன்னீர்செல்வத்திற்கு இறுதி தீர்ப்பு என்பது பொதுக்குழு வழக்கில்தான் கிடைக்கும். இந்த தீர்ப்பை வைத்து பொதுக்குழு தீர்ப்பை கணிக்க முடியாது.

டிரா
இந்த தீர்ப்பு கிட்டத்தட்ட டிரா செய்த தீர்ப்புதான். ஏற்கனவே தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்கவில்லை. பொதுக்குழு முடிவுகளை ஏற்கவில்லை என்று கூறி உள்ளது. அதை எதிர்க்கும் விதமாக பொதுக்குழு தீர்ப்பு வரும் என்று நினைக்கவில்லை. எடப்பாடி- ஓபிஎஸ் ஆகியோரை பாஜக இணைக்க பார்க்கிறது. ஆனால் எடப்பாடி இதற்கு ஏற்றுக்கொள்ளவே மாட்டார். ஓபிஎஸ்ஸுடன் இணையும்படி பிரஷர் கொடுத்தால், பாஜகவை எதிர்க்க கூட எடப்பாடி துணிந்துவிடுவார் என்றுதான் நான் கருதுகிறேன், என்று அரசியல் விமர்சகர் ரிஷி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications