கே.டி.ராகவன் பிரச்சனை: அரசன் அன்று கொல்வான்.. தெய்வம் நின்று கொல்லும்.. காயத்ரி அதிர்ச்சி ட்வீட்!
சென்னை: அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என கே டி ராகவன் சம்பவம் குறித்து பாஜகவின் காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில பொதுச் செயலாளரும் வழக்கறிஞராகவும் இருந்தவர் கே.டி.ராகவன். இவர் தன்னிடம் உதவி கேட்டு வந்த பெண்ணை வீடியோ காலில் அழைத்ததாகவும் அப்போது சட்டை இல்லாமல் ராகவன் பேசியதாகவும் அந்த சமயத்தில் பாலியல் ரீதியில் பல சேட்டைகளை ராகவன் செய்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த புகாரை அடுத்து ராகவன் , தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். மேலும் இந்த குற்றச்சாட்டை மறுப்பதாகவும் இதை நீதிமன்றத்தில் தான் சந்திப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

வீடியோ காலில்
இந்த நிலையில் இந்த வீடியோவை வெளியிட்டவர் பத்திரிகையாளர் என கூறிக் கொள்ளும் மதன் ரவிச்சந்திரன் ஆவார். இவர் பெண்களிடம் வீடியோ காலில் பேசுவதாக கூறி ராகவன் பலரிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இது போல் அவர் யார் யாரிடம் நடந்து கொண்டார். அந்த பெண்களை கட்டாயப்படுத்தினாரா என்பது குறித்தெல்லாம் கண்டறிந்ததாக மதன் தெரிவித்தார்.

மாநில தலைவர்
மேலும் பொறி வைத்து பிடிக்கும் நடவடிக்கையில் ஆதாரங்களை திரட்ட 3 முதல் 6 மாதங்கள் வரை பிடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கே டி ராகவன் குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்கு முன்னர் மாநில தலைவர் அண்ணாமலையிடம் அனுமதி கேட்டதாக மதன் தெரிவித்துள்ளார்.
|
பெண்ணுக்கு நீதி கிடைக்க
பெண்ணிற்கு நீதி கிடைக்கும் என்றால் சமூகவலைதளங்களில் வீடியோவை வெளியிடுமாறு அண்ணாமலை கேட்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த வீடியோ குறித்து காயத்ரி ரகுராம் இரு வேறு ட்வீட்களை வெளியிட்டுள்ளார். ஒரு ட்வீட்டில் நான் இன்று காலை எழுந்தவுடன் என் கண்களை என்னால் நம்ப முடியாத அளவுக்கு ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
|
காயத்ரி போட்ட ட்வீட்
அது போல் மற்றொரு ட்வீட்டில் காயத்ரி கூறுகையில் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தின் முன்னிருந்து தப்பினாலும் தெய்வம் தண்டிக்கும். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என தெரிவித்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் ஏன் கே.டி.ராகவனின் பெயரை போட்டு, அவர் மீது தவறிருந்தால் தண்டிக்கப்பட வேண்டும் என கூறவில்லை என்கிறார்கள்.

புகார் கூறினால்...
மேலும் சிலர் தன் கட்சியினர் மீது ஏதாவது புகார் கூறினால் காச் மூச்சுனு கத்தும் காயத்ரி , இப்போது என்ற சாப்ட் டோனில் நியாயம் எல்லாம் பேசுறீங்க என இன்னொருவர் கேட்கிறார். இப்படியாக இந்த வீடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications