ஜெயில்ல போட லிஸ்ட் கேட்ட திமுக எம்பி.. பகீர் பட்டியலை வெளியிட்ட பாஜக காயத்ரி.. சீறும் "சிறுத்தைகள்"
சென்னை: திருமாவளவன், ஆர்எஸ் பாரதி, தயாநிதி மாறன் மற்றும் லியோனி ஆகியோரை கைது செய்து உள்ளே வையுங்கள் என திமுக எம்பி செந்தில்குமாருக்கு பாஜக காயத்ரி ட்வீட் போட்டுள்ளார்.
பாஜகவில் உள்ள நிர்வாகிகள் பலர் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி சிறைக்கு செல்கிறார்கள். கல்யாணராமன், டாக்டர் சுப்பையைா, மாரிதாஸ், கிஷோர் சாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
வடஇந்தியாவில் சர்ச்சையிலேயே புரண்டு வளர்ந்தவர்கள் போல் சர்ச்சைக்குரிய பேச்சுகளையே பேசுகிறார்கள். இதனால் மாநில அரசு அவர்கள் மீது கைது நடவடிக்கை, வழக்குப் பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.
அந்த வகையில் மத கலவரத்தை தூண்டும் விதமாக பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி பேசியிருந்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதி பொங்கியப்பன் விசாரணை நடத்தினார்.

சவுதாமணி
அப்போது விசாரணையில் சவுதாமணி பதிவிட்ட வீடியோவால் மதக்கலவரம் தூண்டப்படும் என்பதை உறுதி செய்த காவல் துறையினர் அவர் மீது கலகம் செய்ய தூண்டி விடுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்தவொரு நபரையும் கலகம் செய்யத் தூண்டுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ வழக்குப் பதிவு செய்துள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

முன்ஜாமீன் மனு
இதையடுத்து சவுதாமணியின் முன்ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதையடுத்து அவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சவுதாமணியின் கைதுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். காயத்ரி ரகுராம் கூறுகையில் சவுதாமணி கைது திமுக அரசின் பழிவாங்கும் செயல். இதை நான் கண்டிக்கிறேன். திமுகவின் இலக்கு எளிதானவர்களை நோக்கியே இருக்கிறது என தெரிவித்திருந்தார்.

திமுக எம்பி
இதற்கு திமுக எம்பி செந்தில்குமார் வெளியிட்ட ட்வீட்டில் சரி நீங்களே உங்களுக்கு தெரிஞ்ச ஒரு கஷ்டமான இலக்கை சொல்லுங்க, உங்க ஆசைக்கு உள்ளே தூக்கி வச்சிட்டா போச்சு என கிண்டலாக தெரிவித்துள்ளார். உடனே இதற்கும் காயத்ரி பதில் அனுப்பியுள்ளார். அவரது ட்வீட்டில் திருமாவளவன் (தேசத்திற்கு எதிராகவும், இந்துவுக்கு எதிராகவும் மற்றும் பெண்களுக்கு எதிராக ), சமூக நீதிக்கு எதிராக பேசிய ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன் மற்றும் லியோனி.. என பெரிய லிஸ்ட்டையே தெரிவித்துள்ளார்.

காயத்ரிக்கும விசிகவுக்கும் மோதல்
காயத்ரிக்கும் விடுதலைச் சிறுத்தை கட்சிக்கும் ஏற்கெனவே ஏழாம் பொருத்தம். டிவிட்டரில் சதா முற்றல் மோதல்தான். தற்போது இந்த ட்வீட்டிற்கும் "சிறுத்தைகள்" கண்டனம் தெரிவித்து காயத்ரியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஏற்கெனவே ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய காயத்ரி என்னா மிஸ்டர் திருமாவளவன் என கிண்டலாக அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை! பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி











Click it and Unblock the Notifications