• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இந்த திமுகதான் இப்படி இருக்கு.. பேசாம சூர்யா கரை வேட்டி கட்டிக்கலாம்.. காயத்ரி ரகுராம் பாய்ச்சல்

Google Oneindia Tamil News

சென்னை: திமுகதான் தான் சொல்ல வேண்டியதை சொல்ல முடியாமல் தடுமாறினால், சூர்யா முட்டுக் கொடுக்க வந்து விடுகிறார்... சூர்யா குடும்பத்தினர், இனிமேலாவது திமுக கரை வேட்டிக் கட்டிக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.. நீட் தேர்வு பற்றி சூர்யா நிஜத்தை தான் பேசுகிறாரா? இல்லை, மண்டபத்தில் யாரோ எழுதி கொடுத்ததை அறிக்கையாக வெளியிட்டு விட்டாரா?" என்று பாஜகவின் காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பி உள்ளார்.

  Surya குடும்பம் DMK கரை வேட்டி கட்டிக்கலாம் - Gayathri Raguramm | Oneindia Tamil

  இந்த வருடம்இந்தாண்டு நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் துவக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருந்தார்.. இதுதான் தற்போது விவகாரமாக எழுந்துள்ளது.

  காரணம், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வே இல்லாமல் செய்வோம்" என்று தேர்தலுக்கு முன்பு திமுக வாக்குறுதி அளித்திருந்தது.. இப்போது அரசின் செயல்பாடு வேறுவிதமாக உள்ளதால், இது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இதற்கு ஆதரவு, எதிர்ப்பு என மாறி மாறி விவாதங்களும் எழுந்து வருகின்றன.

  விசிக தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறு.. காயத்ரி ரகுராமிற்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன்! விசிக தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறு.. காயத்ரி ரகுராமிற்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன்!

  அறிக்கை

  அறிக்கை

  இப்படிப்பட்ட சூழலில்தான் நடிகர் சூர்யாவின் அறிக்கை முக்கியத்துவம் பெற்றது.. "டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்த, ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவில், நீட் நுழைவு தேர்வு வாயிலாக தீ வைக்கப்பட்டது... அது ஏற்படுத்திய காயத்தின் வடு, காலத்திற்கும் மறையாது. மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வு ஆபத்தானது" என்று அறிக்கை விட்டு தெரிவித்திருந்தார்.

  காயத்ரி

  காயத்ரி

  சூர்யாவின் இந்த அறிக்கை மேலும் அனலை ஏற்படுத்தியது.. பாஜகவினர் வழக்கம்போல் சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில், அக்கட்சியின் கலை இலக்கிய பிரிவு தலைவர் காயத்ரி ரகுராமும் சூர்யாவை விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து அடுத்தடுத்த ட்வீட்களை போட்டு பதிலடியும் தந்துள்ளார்..

  காலேஜ்

  காலேஜ்

  அதில், "அரசு பள்ளியில் படித்து, உயர் கல்வி பெறும் மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியே ஆயுதம்" என்று சூர்யா சொல்லி இருக்காரே, அவர் எந்த அரசு பள்ளியில் படித்தார்? ஆரம்பத்தில் இருந்தே அவர் ஆங்கில வழியில் பயிற்றுவிக்கும், தனியார் பள்ளியில்தானே படித்தார்.. டிகிரியைகூட லயோலா காலேஜில்தான் முடித்தார்.. அப்படி இருப்பவருக்கு, அரசு பள்ளி மாணவர்களின் நிலை குறித்து என்ன தெரியும்?

  மண்டபம்

  மண்டபம்

  சமூக நீதிக்கு எதிரானது என்று நீட் தேர்வு பற்றி சொல்கிறாரே, உண்மையிலேயே இவர் நிஜத்தை தெரிந்து கொண்டுதான் பேசுகிறாரா, இல்லை, மண்டபத்தில் யாராவது எழுதி கொடுத்ததை அப்படியே அறிக்கையாக வெளியிட்டு விட்டாரா? நீட் தேர்வு வரும் முன்பு, பணம் படைத்தவர்கள் மட்டுமே, டாக்டர் பட்டப்படிப்பு படிக்க முடியும் என்ற நிலைமை இருந்தது.

  எம்பிபிஎஸ்

  எம்பிபிஎஸ்

  50 லட்சத்தில் இருந்து, 1 கோடி ரூபாய் வரை கட்ட வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டுமே, எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு இருந்தது... ஆனால், நீட் தேர்வு வந்த பிறகே இந்நிலைமை மாறியுள்ளது... கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை மாணவர்கள் அதிகமானோர் இன்னைக்கு மருத்துவ படிப்பில் சேர்கிறார்கள்.. அதற்கான புள்ளி விபரங்கள் கூட என்கிட்ட இருக்கு.. நீட் தேர்வால் ஆபத்து என்பதற்கான ஆதாரங்களோடு சூர்யா வரட்டும்... கல்வியாளர்கள் மத்தியில், 2 பேரும் விவாதிக்கலாம்..

  வாக்குவாதம்

  ஒருவேளை என் வாதம் அங்கு எடுபட்டுவிட்டால், நீட் தேர்வு குறித்து பேசுவதை, நடிகர் சூர்யா விட்டு விட வேண்டும்... திமுகதான் சொல்ல வேண்டியதை சொல்ல முடியாமல் இப்படி தடுமாறினால், சூர்யாவும் அதற்கு முட்டுக்கொடுக்க வந்து விடுகிறார்... இதுக்கு சூர்யா குடும்பத்தினர், இனிமேல், திமுக கரை வேட்டி கட்டிக் கொள்வது பொருத்தமாக இருக்கும். நீட் தேர்வை என்னவோ சினிமா ஷூட்டிங் நடத்துவது போல சூர்யா நினைத்துகொண்டிருக்கிறார். அந்த மாயையில் இருந்து அவர் விடுபட வேண்டும்...

  கண்டனம்

  நீட் தேர்வை எதிர்கொள்ள தயாராக இருக்கும் அரசு பள்ளி மாணவர்கள், சூர்யா வீட்டுக்கு சென்று, நீட் தேர்வு குறித்து வகுப்பு எடுக்கும் சூழல் உருவாகும்.. அதற்கு ஏற்பாடு செய்யப்படும்... சூர்யாவின் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் படிப்பவர்கள், நீட் தேர்வுக்கு தயார் படுத்தப்படுகின்றனர்... அங்கு சென்று நீட் தேர்வு ஆபத்து என்று குரல் கொடுப்பாரா சூர்யா? பொய் தகவல்களை சொல்லி, தமிழக மாணவர்கள் வாழ்க்கையில் சூர்யா விளையாடக்கூடாது... மீறினால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

  English summary
  BJP Gayathri Raguramm replied to Actor Surays about Neet Statement
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X