தனி மெஜாரிட்டிக்கு வாய்ப்பு இல்லை? பாஜகவிற்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்? அதிரும் தாமரை கேம்ப்
சென்னை: உளவுத்துறை ரிப்போர்ட் படி பாஜகவிற்கு சாதகம் இல்லை. தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லை என்று ரிப்போர்ட் சென்றதாக கூறப்படுகிறது, என்று மூத்த பத்திரிகையாளர் துரை கருணா தெரிவித்துள்ளார்.
2024 லோக்சபா தேர்தலில் கடந்த 2 வாரமாக இஸ்லாமியர்களை தாக்கி மோடி பேச தொடங்கி உள்ளார். ஊடுருவல்காரர்கள் என்பது தொடங்கி குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என்பது வரை பல விஷயங்களை சுட்டிக்காட்டி மோடி பேசி வருகிறார்.

உதாரணமாக நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள்.
இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. "அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது,தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள்.
கடுமையான சர்ச்சை: இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தர போகிறீர்களா. இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள்., என்றெல்லாம் பேசி வருகிறார். இந்த நிலையில்தான் தற்போது திடீரென அம்பானி - அதானி பற்றியும் மோடி பேச தொடங்கி உள்ளார்.
மோடியின் இந்த பிரச்சனை மனநிலை மாற்றத்திற்கு பாஜகவிற்கு சென்ற உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்றுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் துரை கருணா ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார். அதில், பாஜக தேர்தலுக்கு முந்தைய காலகட்டங்களில் உறுதியாக பேசினர். மிகுந்த நம்பிக்கையோடு பேசினார்கள். 3ம் முறை வெல்வோம் . 400 இடங்களில் வெல்வோம் என்றெல்லாம் பேசினார்கள். அதற்கு ஆதரவாக இருப்பது போல 12 கருத்து கணிப்பு நிறுவனங்கள் ரிப்போர்ட் வெளியிட்டன. தனிப்பெரும்பான்மை கிடைக்கும். 300+ இடங்கள் கிடைக்கும் என்று ரிப்போர்ட் வெளியிட்டன. ஆனால் உண்மை அப்படி இல்லை போல.
உளவுத்துறை ரிப்போர்ட் படி பாஜகவிற்கு சாதகம் இல்லை. தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லை என்று ரிப்போர்ட் சென்றதாக கூறப்படுகிறது. இரண்டு கட்டத்தில் 100 இடங்களை வெல்வோம் என்று அமித் ஷா கூறுகிறார். 200- 300 இடங்களை வெல்வோம் என்று பாஜக நம்புகிறது. கடந்த முறை தோல்வி அடைந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த ஆர்எஸ்எஸ் களமிறங்கி உள்ளது. இதை வைத்து 300+ இடங்களை வெல்வோம் என்று பாஜக நம்புகிறது.
ஆனால் இப்படி இருந்தும் கூட மோடி வெற்றி மட்டுமே முக்கியம் என்று.. எந்த கட்டுப்பாடும் இல்லாமல்.. மோசமாக பேசி வருகிறார். மத ரீதியாக, இன ரீதியாக பேசி வருகிறார். ஒரு நாட்டின் பிரதமர் இப்படி எல்லாம் பேச கூடாது. ஆனால் அதை மீறி அவர் பேசிக்கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் இதெல்லாம் எடுபடாது. ஆனால் வடக்கில் இதை ஏற்றுக்கொள்வார்கள்.
மிக மோசமாக மத ரீதியாக, இன ரீதியாக மோடி பேச தொடங்கிவிட்டார். இது அவருக்கு பலன் அளிக்குமா? மோடிக்கு பயன் கொடுக்குமா என்றெல்லாம் பார்க்க வேண்டும். வடக்கில் திமுகவிற்கு எதிரான மனநிலை உள்ளது. சனாதன கருத்து காரணமாக வடக்கில் திமுகவிற்கு எதிரான மனநிலை நிலவுகிறது. இதன் காரணமாகவே இஸ்லாம் - இந்து பற்றி மோடி பேசுகிறார், என்று மூத்த பத்திரிகையாளர் துரை கருணா தெரிவித்துள்ளார்.
-
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications