Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் தற்போதைய தேசிய கட்சிகள் என காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டு கட்சிகள் உள்ளன. இந்த இரண்டு கட்சிகளுமே நாடாளுமன்ற தேர்தல் என்றாலும் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் என்றாலும் மாநிலங்களில் உள்ள பிராந்திய கட்சிகளோடு கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வது வழக்கம்.

அப்படி கூட்டணி அமைக்கும் போது நாடாளுமன்ற தேர்தல் என்றாலும் சரி சட்டமன்றத் தேர்தல்கள் என்றாலும் சரி மாநில அளவிலான கூட்டணி என்பது அந்தந்த மாநில கட்சிகளின் தலைமையில் தான் அமைக்கப்படும். ஆனால் அண்மைக்கால தேர்தல்களில் மாநிலக் கட்சிகளோடு கூட்டணி அமைக்கும் பாஜக மாநில கட்சிகளையே டம்மியாக்கும் வேலைகளை செய்து வந்திருப்பதற்கு சான்றுகள் உள்ளன.

tamilnadu Election 2026 2026 tamil nadu amit shah

அதிமுக கூட்டணி கட்சிகள்

வட மாநிலங்களில் ஓரளவு வெற்றி பெற்ற தனது இந்த பார்முலாவை தற்போது தென் மாநிலங்களில் புகுத்தி விட பார்க்கிறது பாஜக. கேரளா தவிர்த்து தென் மாநிலங்களில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களில் இந்த யுதியை ஓரளவு வெற்றிகரமாகவே செயல்படுத்தியுள்ளது பாஜக. அடுத்ததாக தமிழகத்தில் இதே யுக்தியை பயன்படுத்த இந்த தேர்தலில் பாஜக திடமாக திட்டமிட்டுள்ளது. பாஜகவின் இந்த திட்டத்திற்கு அதிமுக மறைமுகமாக பலிகடா ஆகியிருக்கிறது என்பதே உண்மை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

பல்வேறு சிக்கல்களால் பாஜகவுடன் கட்டாய கூட்டணி வைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருந்த அதிமுகவை டம்மியாக்கி, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிக் பிரதராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் முயற்சியை பாஜக நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்னெடுத்து வருகிறது. 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் என உரக்க பேசி வந்த பாஜக, அதிமுகவின் எதிர்ப்பால் இப்போது அதை ஓரளவுக்கு அடக்கி வாசித்து வருகிறது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை அதிமுக தான் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் திரை மறைவில் பாஜகவின் கையே ஓங்கி இருக்கிறது என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. தமிழகத்தில் அதிமுக தலைமையில் பேசி முடிக்கப்பட வேண்டிய தொகுதி பங்கீடு உள்ளிட்டு விவகாரங்களை அமித்ஷா முன்னிலையில் டெல்லிக்கு சென்று எடப்பாடி பழனிசாமி பேசி முடிவெடுத்து இருப்பது பாஜகவின் கை ஓங்கி இருப்பதற்கான பட்டவர்த்தனமான சான்று. இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத சிறிய கட்சிகள் எந்த சின்னத்தில் போட்டியிடப் போகின்றன என்பது மிகப்பெரிய பேசுபொருள் ஆகியுள்ளது.

பொதுச்சின்னம் பாஜக

வழக்கமாக மாநிலங்களில் கூட்டணி அமைக்கும் போது அங்கீகரிக்கப்படாத, பொதுச்சின்னம் ஒதுக்கப்படாத சிறிய கட்சிகள் மாநிலத்தில் உள்ள கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது தான் வாக்கம். தமிழகத்தில் இதைத்தான் கலைஞர் காலத்திலும் ஜெயலலிதா காலத்திலும் பின்பற்றி வந்தார்கள். ஆனால் அந்த மரபை இப்போது பாஜக உடைக்க பார்க்கிறது. அதாவது தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடாமல் தாமரை சின்னத்தில் போட்டியிட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் தமிழகத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாமரையின் ஆதிக்கத்தை மேலோங்க வைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ் மாநில காங்கிரசுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜகவின் 27 தொகுதிகளிலும், தமிழ் மாநில காங்கிரஸின் ஐந்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தாமரை சின்னத்திலேயே போட்டியிடுவது என்பது முடிவாகியுள்ளது. இதே போல் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரிவேந்தரின் ஐ ஜே கே, ஏ.சி சண்முகத்தின் புதிய நீதி கட்சி, கே.சி. திருமாறனின் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் மற்றும் ஜான் பாண்டியன் புதிய தமிழகம் ஆகிய கட்சிகளும் தாமரை சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. கூட்டணியில் உள்ள அங்கீகரிக்கப்படாத சிறிய கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடாமல் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் என்ன வந்து விடப் போகிறது என்பது பரவலாக முன்வைக்கப்படும் கேள்வி. இதில் ஒரு அரசியல் நுட்பம் இருக்கிறது.

பாஜகவின் 27, தாமாகாவின் ஐந்து என 32 தொகுதிகளோடு, கூடுதலாக ஐஜேகே, புதிய நீதி கட்சி, தென்னிந்திய பார்வர்ட் பிளாக், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் என 35க்கும் மேற்பட்டோர் வரும் தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிடலாம். இவர்களில் கணிசமானோர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிவிட்டால் அவர்கள் கூட்டணி சார்பில் எந்த கட்சி எம்எல்ஏவாக இருந்தாலும் சட்டமன்றத்தை பொறுத்தவரை அவர்கள் பாஜகவின் லெஜிடிமேட் உறுப்பினர்கள் தான். அதனால் சட்டமன்றத்தில் அவர்கள் பாஜகவின் உத்தரவிற்கு கட்டுப்பட வேண்டியது தார்மீக கடமை. அப்படி பாஜக உத்தரவை மீறும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பாஜகவிற்கு உரிமை வந்து விடும்.

பாஜகவின் குரலாக ஓங்கி ஒலிக்க வைக்க வேண்டும்

2026-ல் திமுகவோ அல்லது அதிமுகவோ எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் மசோதாக்கள் நிறைவேற்றும் விவகாரத்தில் தாமரை சின்ன உறுப்பினர்களின் குரலை பாஜகவின் குரலாக ஓங்கி ஒலிக்க வைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம். இதனால்தான் பாஜக மட்டுமல்லாது தேசிய ஜனநாயக கூட்டணிகள் அங்கம் வகிக்கும் மற்ற சிறிய கட்சி வேட்பாளர்களையும் தாமரை சின்னத்தில் போட்டியிவைப்பதில் பாஜக முனைப்பு காட்டி வைக்கிறது போட்டியிட வைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

ஆக தேசிய ஜனநாயக கூட்டணி விவகாரத்தில் பாஜக சொன்னதை செய்து வருகிறது . வரும் காலத்தில் தமிழகத்தில் தன்னை பிக்பிரதராக தகவமைத்து கொள்வதற்கான அடித்தளம் தான் இந்த தேர்தல் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

- சிறப்பு நிருபர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+