“60 பொதுத்துறை நிறுவனங்களை விற்க ரெடியாகிட்டாங்க.. திசைதிருப்ப இது..”- டி.ராஜா பகீர் குற்றச்சாட்டு!
சென்னை: பா.ஜ.க அரசு, 60 பொதுத்துறை நிறுவனங்களை விற்க திட்டமிட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நேற்று டி.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பா.ஜ.க தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல எனத் தெரிவித்துள்ளார்.

டி.ராஜா
சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, "சி.பி.ஐ கட்சியின் அகில இந்திய அளவிலான 24-வதுமாநாடு, அக். 14 முதல் 18 வரை ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் நடைபெறவுள்ளது.
பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்-ன் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராகப் போராட்டங்களை அறிவிப்பதற்கும், அதற்கான மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையைத் திரட்டுவதற்கும் தொடக்கமாக இந்த மாநாடு அமையும் எனத் தெரிவித்தார்.

போராட்டம்
பாஜக ஆட்சியில் கடுமையான பிரச்சனைகளாக உருவெடுத்திருக்கும் விலைவாசி உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றுக்கு எதிராக மக்களின் கருத்தை ஒன்று சேர்க்க வேண்டும் என்பதற்காக மே 25 முதல் 31-ம் தேதி வரை நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, பார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிசக் கட்சிஆகிய 5 கட்சிகள் இணைந்து அறிவித்திருக்கிறோம்.

பொதுத்துறை நிறுவனங்கள்
மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பா.ஜ.க அரசு தயாராக இல்லை. மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை மூடி மறைக்க மதவெறி அரசியலை பின்பற்றுகிறார்கள். 60 பொதுத்துறை நிறுவனங்களை விற்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. நிதி ஆயோக்கின் அதிகாரிகள் குழு 60 பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கு அடையாளம் கண்டுள்ளது.

மக்கள் தத்தளிப்பு
பணவீக்கத்தால் மக்கள் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரம் தேக்கமடைந்துள்ளது. மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, பாஜக அரசு மதவாத அரசியலை பயன்படுத்தி ஞானவாபி மசூதி பக்கம் மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிக்கிறது.

நாட்டுக்கு நல்லதல்ல
பா.ஜ.க தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல. பா.ஜ.க ஆட்சியை அகற்ற, இடதுசாரி கட்சிகள், மதச்சார்பற்ற கட்சிகள் என அனைவரும் இணைந்து ஒன்றுபட்டு போராட வேண்டும். பா.ஜ.க அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக பல்வேறு இயக்கங்களை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளோம் என டி.ராஜா தெரிவித்துள்ளார்.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
மேற்கு வங்க மறு தேர்தலில் அசத்தி காட்டிய பாஜக! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை












Click it and Unblock the Notifications