ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு வரவேற்பு.. அடுத்து தயாநிதி மாறன்தானா?- எச்.ராஜா கேள்வி
சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது என்று, பாஜக தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
அன்பகத்தில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி கூட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு நீதிபதி பதவிகளை பெற்று தந்ததில், திமுக முக்கிய பங்காற்றியதாக கூறினார். மேலும் ஒரு சர்ச்சைக்குரிய வார்த்தையை தெரிவித்தார்.

இது தொடர்ந்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து, இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான், எச்.ராஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. அடுத்து தயாநிதிமாறன் in Waiting list?. என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தலைமைச் செயலாளரை சந்தித்த திமுக எம்பிக்கள் குழு தங்களை அவர் உரிய வகையில் மரியாதையாக நடத்தவில்லை என்று புகார் கூறியது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதிமாறன், தங்களை தாழ்த்தப்பட்டவர் போல தலைமைச் செயலாளர் நடத்தியதாக தெரிவித்தார். இதற்கு திமுகவின் தோழமை கட்சிகளே, அதிருப்தி வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து இந்த பேச்சிற்கு வருத்தம் தெரிவிப்பதாக தயாநிதிமாறன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் ராஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு முக்கியத்துவம் பெறுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications