விஜய்யிடம் உட்கட்சி பிரச்சனையை சொல்ல முடியலை.. புலம்பும் தவெக எம்எல்ஏக்கள்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் உட்கட்சி பூசல் தொடர்பாக முதல்வர் விஜய்யின் காதுகளுக்கு எந்த தகவலையும் கொண்டு செல்ல முடியவில்லை என்று பலரும் சோகம் அடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அமைச்சரவை மாற்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஒரு வார்த்தை கூட விஜய் பேசாததும் எம்எல்ஏ-க்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

முதல்வர் விஜய் தலைமையில் தவெக எம்எல்ஏ-க்களின் கூட்டம் ஈசிஆரில் உள்ள தனியார் ரெசார்ட்டில் நடைபெற்றது. தவெகவின் 6 மாத ஆட்சி நிறைவடைந்துள்ள சூழலில், எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சிப்பதாக தகவல் வெளியாகியது. இதன் காரணமாகவே விஜய் திடீரென எம்எல்ஏ-க்கள் கூட்டத்தை கூட்டியதாக கூறப்படுகிறது.

Vijay TVK CTR Nirmalkumar

இந்த கூட்டத்திற்கு முதல்வர் விஜய் மதியம் 3 மணிக்கு பின் வந்துள்ளார். தவெக எம்எல்ஏ-க்களின் கரகோஷத்திற்கு மத்தியில், அனைவருக்கும் வணக்கம் வைத்தவாறு விஜய் கூட்டத்திற்குள் வந்துள்ளார். இதன்பின் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் எம்எல்ஏ-க்கள் தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்குவதை நேரடியாக பேசி இருக்கின்றனர்.

இதன்பின் முதல்வர் விஜய் தனி அறைக்கு செல்ல, எம்எல்ஏ-க்கள் குழு குழுவாக அவரை சென்று சந்தித்துள்ளனர். முதலில் பெண் எம்எல்ஏ-க்களை சந்தித்து அனுப்பி வைத்த விஜய், பின்னர் 3 மாவட்டங்கள் வாரியாக எம்எல்ஏ-க்களை சந்தித்துள்ளார். அதில் சிலரை பாராட்டியும், சிலருக்கு நம்பிக்கை அளித்தும் விஜய் பேசியுள்ளார்.

இந்த எம்எல்ஏ-க்கள் கூட்டத்திற்கு பின் பலரும் சோகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் 6 மாத கால ஆட்சிக்கு பின் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். அதேபோல் உட்கட்சி பூசல் குறித்து நேரடியாக விஜய்யிடம் தனியாக பேச முடியும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் விஜய்யை தனியாக சந்திக்கும் வாய்ப்பே அங்கு கிடைக்கவில்லை.

இதனால் தங்களின் மாவட்டத்தில் அமைச்சர்கள் செய்து வரும் சேட்டைகளை தவெக தலைமைக்கு கொண்டு செல்ல முடியவில்லை என்று தவெக எம்எல்ஏ-க்கள் சோகம் அடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவும் எந்த ஆலோசனையும் நடக்கவில்லை. இது மாவட்டச் செயலாளர்களாக இருக்கும் எம்எல்ஏ-க்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தவெகவில் பதவிக்கு வர வேண்டும் என்றும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் ஏராளமானோர் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தவெக தலைமை அதுதொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதனால் உள்ளாட்சித் தேர்தல் இப்போதைக்கு நடக்காதோ என்ற சந்தேகமும் அவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+