டார்ச்சர் தாங்க முடியல..டாஸ்மாக்கால் தலைவலி! பண்டிகை நாட்களில் மொத்தமாக பூட்டு போடும் சிஎம் விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றி கழக ஆட்சியில் டாஸ்மாக் மது கடைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தீபாவளி பண்டிகை அன்று சட்டம் ஒழுங்கு பிரச்சனை, தமிழக வெற்றிக்கழக அரசுக்கு புதிய தலைவலியாக அமைந்தது. 10க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மது போரை தான் இதற்கு காரணம் எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் பண்டிகை நாட்களிலும், அதற்கு முந்தைய நாளும் டாஸ்மாக் மது கடைகளை முழுமையாக மூட தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறையின் கீழ் டாஸ்மாக் மது கடைகள் செயல்பட்டு வருகிறது. முன்பு தனியார் வசம் இருந்த மதுக்கடைகள் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.

TASMAC Holiday Tamil Nadu Government

7000 என்ற எண்ணிக்கையில் இருந்த டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது சுமார் 4000 என்ற அளவில் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சி காலங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை ஏராளமான ஊழல் நடைபெற்றதாகவும், தமிழக வெற்றி கழக அரசு அமைந்தால் அதில் நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என தமிழக வெற்றிக்கழக தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது.

டாஸ்மாக்

ஆட்சி மாற்றமும் அரங்கேறிய நிலையில் முதல் கட்டமாக பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள், பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருந்த 700-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. பாட்டிலுக்கு 10 ரூபாய் முறை ஒழிக்கப்பட்டு எம்ஆர்பி உடன் சேர்க்கப்பட்டது. மேலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, கடைகளை நிர்வகிக்க தனித்தொகை, காப்பீடு என பல வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

அரசுக்கு தலைவலி

இருந்தபோதும் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் இருப்பதாக கூறி டாஸ்மாக் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க டாஸ்மாக் என்பது அரசுக்கு தலைவலி தரும் துறையாக மாறி வருகிறது. டாஸ்மாக் விற்பனையில் குளறுபடிகள் இருப்பதாக கூறி அவற்றை மூட முயற்சிப்பதாகவும், தனியார் மதுக்கடைகளை தமிழக அரசு ஊக்குவிப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.

அமைச்சர் விக்னேஷ்

அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே சமீபத்தில் தீபாவளி பண்டிகையின் போது மது விற்பனை குறித்து பேசிய விக்னேஷ், இது பெருமைப்பட வேண்டிய விஷயம் அல்ல வெட்கப்பட வேண்டிய விஷயம் எனக் கூறியிருந்தார்.

தீபாவளி பண்டிகை

கடந்த காலங்களில் தீபாவளி பண்டிகைக்கு டார்கெட் வைத்து மது விற்பனை செய்யப்படும் இந்தாண்டு அதுபோன்று இல்லை என சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் தீபாவளி பண்டிகையின் போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொலை சம்பவங்கள் அரங்கேறின. முதலில் 8, 10, 12 என அந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது அரசு மீதான கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இந்த கொலை சம்பவங்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தன.

சட்டம் ஒழுங்கு

பெரும்பாலான கொலைகள் மது போதையில் நடந்ததாகவே சொல்லப்படுகிறது. இதை அடுத்து முதல்வர் விஜய் நேற்று தமிழக சட்டமூலங்கு தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பண்டிகை நாட்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை தடுக்க பண்டிகை நாட்களிலும் அதற்கு முந்தைய நாட்களிலும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டாஸ்மாக் விடுமுறை

ஏற்கனவே திருவள்ளுவர் தினம், சுதந்திர தினம், குடியரசு தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி ஆகிய 8 நாட்கள் மட்டும் விடுமுறை அளிக்கப்படும் நிலையில், அரசு விடுமுறை தினங்களில் டாஸ்மாக் கடைகளை மூடலாம் என்ற உத்தரவு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+