வீடு, மனை வாங்கியவர்களே கவனியுங்கள்! பத்திரப்பதிவுக்கு இனி ஆன்லைனில் டோக்கன்.. எப்படி பெறுவது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு வீடு அல்லது மனை வாங்குவது என்பது நிறைய பேருக்கு சாதாரண விஷயம் கிடையாது. அதற்காக பல வருடங்கள் பணம் சேர்த்து, தேவையான ஆவணங்களை தயார் செய்து, வாங்குபவர் - விற்பவர் என 2 பேருமே, பத்திரப்பதிவுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருக்கும். குறிப்பாக, எந்த நாளில் பத்திரப்பதிவு செய்யலாம், எப்போது சார் பதிவாளர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிடுவது முக்கியம். இந்நிலையில், பத்திரப்பதிவுக்கான டோக்கனை பொதுமக்களே இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதி தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை எப்படிப் பெறுவது?

தமிழகத்தில் வீடு, மனை வாங்குபவர்கள் பத்திரப்பதிவு செய்வதற்கான டோக்கனை இனி ஆன்லைனிலேயே பெற்றுக்கொள்ளலாம். இதற்காக பதிவுத்துறையின் TNREGINET இணையதளத்தில் பொதுமக்களுக்கான தனி நுழைவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Property Registration Online Token TNREGINET

இதன் மூலம் பத்திரப்பதிவு செய்ய இருப்பவர்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து, அடுத்தடுத்த நடைமுறைகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக, பத்திரப்பதிவுக்கான நாள், நேரத்தைத் தேர்வு செய்து டோக்கன் பெற முடியும்.

ஆன்லைன் வசதி - எப்படி பதிவு செய்வது?

முதலில் www.tnreginet.gov.in என்ற பதிவுத்துறையின் வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும். அங்கு பொதுமக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள நுழைவு வசதியைத் தேர்வு செய்து, அடிப்படை தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு, தங்களது பெயரில் ஒரு பயனர் கணக்கு, அதற்கான பாஸ்வேர்டு போன்றவற்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும். தொடர்ந்து பதிவு செய்ய வேண்டிய ஆவணத்தின் வகையை தேர்வு செய்ய வேண்டும்.

4 நிலைகள் இதுதான்

ஆவணத்தின் வகையைத் தேர்வு செய்த பிறகு, வெப்சைட்டில் கேட்கப்படும் தேவையான விவரங்களை 4 நிலைகளில் பதிவு செய்ய வேண்டும். இந்த விவரங்களை உள்ளீடு செய்ததும், அந்தப் பதிவுக்குத் தேவையான டிராஃப்ட் அதாவது வரைவு பத்திரம் தயாராகிவிடும்.

அதன்பிறகு அடுத்தடுத்த கட்டங்களில் வெப்சைட்டில் கேட்கும் தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறைகள் முடிந்ததும் ஒரு அடையாள எண் உருவாக்கப்படும்.

டோக்கன் கிடைப்பது எப்படி?

இந்த அடையாள எண்ணை பெற்ற பிறகு, பத்திரப்பதிவு செய்ய வேண்டிய நாளையும் நேரத்தையும் தேர்வு செய்யலாம். அதற்கான டோக்கனும் ஆன்லைனிலேயே கிடைத்துவிடும். இதனால் வீடு, மனை வாங்கியவர்கள் பத்திரப்பதிவு செய்வதற்கான நாளையும் நேரத்தையும் முன்கூட்டியே தேர்வு செய்து, அதற்கேற்ப தங்களது மற்ற வேலைகளையும் திட்டமிட்டுக்கொள்ள முடியும்.

ஆன்லைனில் டோக்கன் பெற்றுவிட்டால் பத்திரப்பதிவு முழுவதையும் வீட்டிலிருந்தே முடித்துவிடலாம் என்று நினைக்க வேண்டாம். டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில், ஒதுக்கப்பட்ட நேரத்தில் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் செல்ல வேண்டும். அங்கு பத்திரப்பதிவு நடைமுறைகளை முடித்துக்கொள்ளலாம்.

வசதிகள் என்னென்ன தெரியுமா

இப்படி பொதுமக்கள் இணையதளம் மூலமாகவே பத்திரப்பதிவுக்கான டோக்கனை பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. இந்த ஆன்லைன் டோக்கன் வசதியால் வீடு, மனை வாங்குபவர்களுக்கு பல பயன்களும் கிடைக்கும்.

குறிப்பாக, இனிமேல் பத்திரப்பதிவுக்கான டோக்கனை பெறுவதற்காக அலுவலகத்துக்கு செல்ல வேண்டியதில்லை. வீட்டிலிருந்தே TNREGINET வெப்சைட்டில் விவரங்களை பதிவு செய்து டோக்கனைப் பெற்றுக்கொள்ளலாம்.

அதுமட்டுமல்ல, தங்களுக்கு வசதியான நாளையும் நேரத்தையும் தேர்வு செய்ய முடியும். இதனால் வேலைக்கு செல்பவர்கள், வெளியூரிலிருந்து சொத்து வாங்க வருபவர்கள் தங்களது பயணத்தையும் மற்ற வேலைகளையும் முன்கூட்டியே பிளான் செய்யலாம்..

பத்திரப்பதிவுக்குத் தேவையான விவரங்களை 4 நிலைகளில் பதிவு செய்து வரைவு பத்திரத்தை தயாரிக்கவும், அடையாள எண்ணை பெறவும் முடியும்... அத்துடன், முன்கூட்டியே ஆன்லைன் நடைமுறைகளை முடித்துவிட்டு, டோக்கனில் குறிப்பிடப்பட்ட நேரத்தில் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று பத்திரப்பதிவை ஈஸியாகவே முடித்துக்கொள்ளலாம்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+