"டாப்ல" பாஜக.. அதுவும் உலகளவில்.. முக்கியமான வெளிநாட்டு கட்சி பாஜக.. அமெரிக்காவே சொல்லிடுச்சு.. செம
உலகளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டு கட்சியாக பாஜக திகழ்வதாக அமெரிக்கா கூறுகிறது
சென்னை: உலகளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டு கட்சியாக பாஜக திகழ்கிறது என்று பிரபல அமெரிக்க பத்திரிகையான வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை பல்வேறு கட்சிகள் உள்ளன.. மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் என்று எத்தனையோ உள்ளன.. ஆனால், பல்வேறு கட்சிகள் தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் இந்த கட்சிகள் மட்டும் மக்களால் பரவலாக அறியப்பட்ட தேசிய கட்சிகளாக உள்ளன..
அதிலும் காங்கிரஸ் அதல பாதாளத்திலும், கம்யூனிஸ்ட் வலுவிழந்தும் போய்க் கொண்டிருக்கிறது.. பழமையான கட்சியான காங்கிரஸ், ராஜஸ்தான், சத்தீஸ்கர், இமாச்சல் ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறது..

வால்டர்
பெரும்பாலான மாநிலங்களை பாஜகவிடமும், ஆம் ஆத்மியிடமும் பறிகொடுத்து விட்டது. அதேபோல, கம்யூனிட்ஸ்ட் கேரளாவில் வலுவாக உள்ளது.. எனவே, பாஜக முக்கியமான தேசிய கட்சியாக தற்சமயம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.. இந்த நிலையில்தான், உலகின் முக்கியமான கட்சியாக பாஜக திகழ்வதாக அமெரிக்க பத்திரிகை பாராட்டு தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபலமான பத்திரிகைகளில் ஒன்று வால் ஸ்டிரீட் ஜர்னல்... இந்த பத்திரிகையில், வால்டர் ரஸ்செல் மீட் என்பவர் ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார். அதில், பாஜகவை புகழ்ந்து தள்ளியுள்ளார்..

ஜப்பான்
குறிப்பாக, "இந்தியாவில் ஆளும்கட்சியாக இருக்கும் பாஜக, அமெரிக்காவின் தேசிய நலன்களின்படி பார்க்கும்போது, உலகளவில் மிக முக்கியம் வாய்ந்த கட்சியாக விளங்குகிறது. எனினும், அக்கட்சி குறைவாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அதேசமயம், 2014, 2019 ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்ற பாஜக 2024-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றியை மறுபடியும் பெறும் முனைப்பில் இருக்கிறது. பாஜக ஆட்சியில் இந்தியா ஒரு முன்னணி பொருளாதார சக்தி படைத்த நாடாக வெளிப்பட்டு வருகிறது. இந்தோ - பசிபிக் பிராந்திய பகுதியில் அமெரிக்காவின் செயல் திட்டத்திற்கு உறுதுணையாக, ஜப்பானுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறது. ஆனாலும் பாஜக, குறைவாகவே மக்களால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது..

உறுதுணை
முன்னணி பொருளாதார சக்தி படைத்த நாடாக இந்தியா உருவாகி வருகிறது. இந்தோ - பசுபிக் பிராந்திய பகுதிகளில் அமெரிக்காவின் செயல் திட்டத்திற்கு இந்திய அரசு உறுதுணை ஆக பணியாற்றி வருகிறது.. இன்னும் பாஜகவை பலர் சரியாக புரிந்து கொள்ளவில்லை. காரணம், இந்தியர்கள் அல்லாத பலரும் அரசியல் மற்றும் கலாசாரத்தில் வளர்ந்து வரும் பாஜகவின் வரலாறு பற்றி அறிந்திருக்கவில்லை. 100 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டை வழிபடுத்தி செல்லும் ஆற்றல் கொண்ட கட்சி பாஜக என்றும் பிரதமர் மோடியின் திறமையை இன்னும் ஒரு சில நாடுகள் ஏன் அங்கீகரிக்கவில்லை என தெரியவில்லை. 20 கோடி மக்களை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் பாஜக அரசு இஸ்லாமியர்களின் வலிமையான ஆதரவு பெற்று ஆட்சி அமைத்து வருகிறது.. ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் பங்கு இந்த கட்சியில் முக்கியம் வாய்ந்தது. கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் இந்தியாவின் வடகிழக்கில் பாஜகவின் சமீபத்திய, குறிப்பிடத்தக்க அரசியல் வெற்றிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பூரிப்பு + ஹேப்பி
ஜாதி வேற்றுமைக்கு எதிராக போராடுவதற்கான முயற்சிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் பங்கு முக்கியம் வாய்ந்தது.. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர்களுடனான எனது தீவிர, தொடர் சந்திப்புக்கு பிறகு, அவர்களது சில விமர்சனங்களுக்கு பிறகு, அமெரிக்கர்கள் மற்றும் மேற்கத்திய நாட்டினர் பொதுவாக, ஒரு சிக்கலான மற்றும் சக்திவாய்ந்த இயக்கம் பற்றி புரிந்துகொள்ள முன்வர வேண்டும் என்று என்னை நானே சமரசப்படுத்தி கொண்டேன்" என்று அதில் வால்டர் ரஸ்செல் மீட் எழுதியிருக்கிறார். உலகின் மிக முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டு கட்சியாக பாஜக திகழ்வதாக அமெரிக்க பத்திரிகை பாராட்டு தெரிவித்துள்ளதை கண்டு, பாஜகவினர் பூரித்துபோயுள்ளனர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications