Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஒற்றை வார்டு பாஜக.." 3வது பெரிய கட்சி என்று சொல்ல என்ன தகுதி உள்ளது? கே.எஸ்.அழகிரி ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 3வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது என அதன் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மூன்றாவது பெரிய கட்சி என்று கூறுவதற்கு பாஜகவுக்கு எந்த தகுதியும் கிடையாது என அவர் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்று அடுத்த கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்வதில் பிஸியாக உள்ளது.

இதுஒருபுறம் இருக்க அதிமுக தோல்விக்கான காரணம் குறித்து ஆராய துவங்கியுள்ளது. பாஜக தனித்து களம் இறங்கி மாநகராட்சிகளில் 22, நகராட்சிகளில் 56, பேரூராட்சிகளில் 230 வார்டுகளில் வென்றுள்ளன.

தமிழக மக்களின் அன்பு

தமிழக மக்களின் அன்பு

இந்நிலையில் தான் தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். அதாவது, நேற்றைய தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நிருபர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‛‛நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதுவரை வெல்லாத இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியானது பிரதமர் நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்துகிறது. தமிழக மக்கள் பாஜகவை ஏற்று கொண்டுள்ளனர். நினைத்த வெற்றியை அடைந்துவிட்டோம். தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது'' என்றார்.

காங்கிரஸ் கண்டனம்

காங்கிரஸ் கண்டனம்

இதற்கு காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

 அமோக வெற்றி

அமோக வெற்றி

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது. கடந்த மக்களவை, சட்டமன்றம், ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் எத்தகைய பெருவெற்றியை தமிழக மக்கள் வழங்கினார்களோ, அதைவிட கூடுதலாக அமோக ஆதரவோடு வெற்றியை அளித்திருக்கிறார்கள். இதன்மூலம், வெற்றி மேல் வெற்றியை தமிழக மக்கள் வழங்கியதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வாக்காளர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

 ராஜிவ் கண்ட கனவு

ராஜிவ் கண்ட கனவு

இந்த வெற்றிக்கு கடுமையாக உழைத்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கும் நன்றி. தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் கடந்த 9 மாதங்களாக நடைபெற்று வருகிற மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சிக்கு நற்சான்றுகள் வழங்குகிற வகையில் இந்த வெற்றி அமைந்திருக்கிறது. தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்கிற பணி முழுமையான வெற்றி பெற வேண்டுமானால், உள்ளாட்சி அமைப்புகளில் அமரர் ராஜிவ்காந்தி கண்ட கனவின்படி நல்லாட்சி அமைவது அவசியமாகும். அந்த வகையில் மாநில அரசின் திட்டங்களை நிறைவேற்றி முழுமையான பயன் மக்களைச் சென்றடைகிற வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் இணக்கமான சூழல் உருவாகி இருக்கிறது. இதன்மூலம், தமிழகம் வரலாறு காணாத வகையில் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி பீடுநடை போடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

 ராகுல் கூறியது உறுதியானது

ராகுல் கூறியது உறுதியானது

கடந்த மக்களவை கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி , 'தமிழகத்தில் பாஜக நுழைய முடியாது' என்று அறுதியிட்டு கூறியதை தமிழக மக்கள் உறுதியிட்டு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். பாஜகவை தமிழக மக்கள் மீண்டும் நிராகரித்து புறக்கணித்திருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்களை கடுமையாகப் பாதிக்கிற நீட் தேர்வை ஆதரிக்கிற ஒரே கட்சியான பாஜகவுக்கு தமிழக வாக்காளர்கள் உரிய பாடத்தை புகட்டியிருக்கிறார்கள்.

 பாஜக கூற்று ஏற்க முடியாது

பாஜக கூற்று ஏற்க முடியாது

நடைபெற்று வரும் அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து பாஜக தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போதைய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக வெற்றி பெற்றிருக்கிறது என்று அடிப்படை ஆதாரமற்ற கருத்தை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் போட்டியிட்டு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, 16 இடங்களில் போட்டியிட்டு 13 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைவிட பெரிய கட்சி என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்கமுடியாத வாதமாகும். நடைபெற்று வரும் அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து பாஜக தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போதைய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக வெற்றி பெற்றிருக்கிறது என்று அடிப்படை ஆதாரமற்ற கருத்தை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் போட்டியிட்டு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, 16 இடங்களில் போட்டியிட்டு 13 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைவிட பெரிய கட்சி என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்கமுடியாத வாதமாகும்.

 தகுதி கிடையாது

தகுதி கிடையாது

மேலும் 2011 உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு பெற்ற இடங்களை விட தற்போது 2022 தேர்தலில் 0.7 சதவீத இடங்களை மட்டுமே அதிகமாக பெற்ற பாஜக, மூன்றாவது பெரிய கட்சி என்று கூறுவதற்கு எந்த தகுதியும் கிடையாது. அதுமட்டுமல்லாமல், நடைபெற்ற தேர்தலில் 10 மாவட்டங்களில் வெற்றி கணக்கையே தொடங்காத பாஜக, காங்கிரஸ் கட்சியோடு ஒப்பிடுவதற்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால், 2011ல் தனித்து போட்டியிட்டபோது 2.07 சதவீத இடங்களை பெற்ற காங்கிரஸ் கட்சி, தற்போது 2022 மாநகராட்சி தேர்தலில் 59.34 சதவீத இடங்களையும், நகராட்சி தேர்தலில் 4.4 சதவீத இடங்களிலிருந்து தற்போது, 38.32 சதவீத இடங்களையும் கூடுதலாக பெற்று மகத்தான வெற்றியை ஈட்டியிருக்கிறது. எனவே, காங்கிரஸ் கட்சியோடு பாஜகவை ஒப்பிடுவதை இனியாவது அண்ணாமலை நிறுத்தி கொள்ள வேண்டும்.

 எதிர்காலம் இல்லை

எதிர்காலம் இல்லை

தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரிகிற பாஜக எதிர்ப்புகளை எந்த காலத்திலும் அவர்களால் எதிர்கொள்ள முடியாது. ஏனெனில், தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமாக பாஜக செயல்பட்டு வருவதால் எதிர்காலமே இல்லாத கட்சியாக பாஜக விளங்கி வருகிறது. இதனால்தான் இக்கட்சியோடு கூட்டணி வைக்க அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியும் தயாராக இல்லை.

 அதிமுக படுதோல்வி

அதிமுக படுதோல்வி

தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் படுதோல்வியை அடைந்திருக்கிறார்கள். குறிப்பாக, அதிமுகவின் கோட்டை என்று கூறப்பட்ட கொங்கு மண்டலமே படுதோல்வியைக் கண்டிருக்கிறது. இது ஒரு மாயை என்பதை தேர்தல் நிருபித்திருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.

 கட்சிகள் நிராகரிப்பு

கட்சிகள் நிராகரிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு பேராதரவு அளித்த வாக்காளர்கள், அதிமுக, பாஜகவை நிராகரித்ததைப் போல பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்திருக்கிறார்கள். தவறான பரப்புரை மூலம் குறிப்பாக, இளைஞர்களை தவறாக வழிநடத்திய கட்சிகள் படுதோல்வி அடைந்திருப்பது மக்கள் நலன் சார்ந்த ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கிற சூழல் இன்றைக்கு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது.

 முன்னேற்றத்தில் முதல்வர்

முன்னேற்றத்தில் முதல்வர்

இனி வரும் காலங்களில் தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்கிற மகத்தான பணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் மக்கள் வழங்குவார்கள் என்பது இந்தத் தேர்தல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+