செந்தில் பாலாஜி குறித்து சர்ச்சை ட்வீட்: பாஜக செல்வகுமார் அதிரடியாக கைது.. அண்ணாமலை கண்டனம்
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக பாஜகவின் தொழில் பிரிவு துணைத் தலைவர் செந்தில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்தும் இரு சமூகங்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலும் செல்வகுமார் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி செந்தில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக பாஜக தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் இன்று காலை 8.15 மணி அளவில் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக பாஜக தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார், தனது சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, செந்தில் பாலாஜி உள்பட பலரை கடுமையாக விமர்சித்து வந்தார்.

குறிப்பாக செந்தில் பாலாஜி குறித்து செல்வகுமார் போட்ட ட்வீட் பதிவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. செந்தில் பாலாஜி குறித்து செல்வகுமார் நேற்று வெளியிட்ட பதிவில், செந்தில் பாலாஜியிடம் மட்டுமே 1.0 லட்சம் கோடிக்கு மேல் சொத்து இருக்கும். அவர் கமிஷன் கறப்பதில், திருடுவதில் வல்லவர். நீயும் திருடு எனக்கும் பங்கு கொடு என்ற டீலிங் அடிப்படையில்தான் அவர் அமைச்சராக்கப்பட்டுள்ளார் என்று கூறியிருந்தார்.
இன்னொரு பதிவில், கோவைக்கு பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி வந்த பிறகு அனைத்து விதமான போதை பொருட்கள் விற்பனையும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டு இளைஞர்களின் வாழ்வு சீரழிக்கப்படுகிறது.

போதைபொருட்கள் விற்பனையை தடை செய்து மக்களை போதை பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டிய கடமை கஞ்சாபாலாஜியின் துறைக்கே. ஆனால், அமைச்சரோ தன்னுடைய கரூர் கம்பெனி கூடுதலாக சம்பாதிக்க போதை பொருட்கள் விற்பனையை ஊக்குவித்து வருகிறார் என்று பாஜக ஐடிவிங் தலைவர் செல்வகுமார் குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக பாஜகவின் தொழில் பிரிவு துணைத் தலைவர் செந்தில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவலை பாஜகவைச் சேர்ந்த அமர்பிரசாரத் ரெட்டி டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். பாஜக ஐடிவிங் நிர்வாகிகள் பலரும், செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர்.

இநநிலையில் தமிழக பாஜக தொழில்துறை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் செல்வகுமார் அவர்களைக் கைது செய்துள்ள
திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட் போட்டிருக்கிறார. ஆளுங்கட்சியின் தவறுகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களைக் கைது செய்வதன் மூலம் ஆளுங்கட்சிக்கு எதிரான குரல்களை அடக்கி, கருத்துச் சுதந்திரத்தை முடக்கி விடலாம் என்று கனவு காண்கிறது திறனற்ற திமுக அரசு. இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சுபவர்களில்லை என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு











Click it and Unblock the Notifications