சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"25 சீட்".. அப்டி அழுதாரே.. கொஞ்சமாவது மானம் இருக்கா.. விடாமல் வரிந்து கட்டிக் கொண்டு வந்த குஷ்பு

பாஜகவின் குஷ்பு, காங்கிரஸ் கட்சியை சரமாரி விமர்சித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு மானம் இருக்கா? என்று யோசித்து பார்த்துட்டு ராகுல் பேச வேண்டும் என்று குஷ்பு கூறியுள்ளது பெரும் அதிர்வலையை காங்கிரஸ் தரப்பில் ஏற்படுத்தி வருகிறது.

நேற்றைய தினம் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்யும்போது, "மானம் உள்ள தமிழர்கள் பலர் காலில் விழமாட்டார்கள்" என்று விமர்சித்திருந்தார். ராகுல் யாரை சொல்கிறார், எதற்காக சொல்கிறார் என்று அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இதற்கு அதிமுக தரப்பில் யாரும் எதிர்வினையாற்றவில்லை.. பெரிதாக எடுத்து கொள்ளவும் இல்லை.. உண்மையை சொல்ல போனால், ராகுல் இவ்வளவு டீப்பாக போய் யாரையும் விமர்சித்தது இல்லை.. பெரும்பாலும் பாஜக தலைமையுடன் மட்டுமே விமர்சனங்களை நிறுத்தி கொள்வார்.. இந்த முறை, அதிமுக தலைமையை சீண்டியது யாரும் எதிர்பாராதது.. அதனை அதிமுக கண்டுகொள்ளாமல் அதைவிட எதிர்பாராதது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

ஆனால், இதற்கு சம்பந்தமே இல்லாமல் குஷ்பு வந்து தன்னுடைய கருத்தை சொல்லி உள்ளார்... கூட்டணியில் உள்ளவர்களை பற்றி குறை சொல்லி இருந்தாலும், காங்கிரஸ் என்றதுமே குஷ்பு வரிந்து கட்டி கொண்டு வந்துள்ளார்.. ராகுல் உண்மை தெரியாமல் பேசி இருப்பார்ன்னு நினைக்கிறேன்.. மொதல்ல அவரது கட்சிக்கு மானம் இருக்கிறதா என்று யோசித்து பார்த்து விட்டு பேச வேண்டும்.. தமிழக காங்கிரஸ் தலைவர் அன்னைக்கு அழுதாரே.. அதை மறந்துட்டாரா?

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

கூட்டணி பேசப்போகும்போது திமுக அவமரியாதை செய்துவிட்டதாக வேதனையாக சொன்னாரே, அது ராகுலுக்கு தெரியவில்லையா? அழுதும், கெஞ்சியும், அத்தனை அவமானங்களையும் தாங்கி தானே 25 சீட்களை வாங்கினாங்க? இதற்கு அப்பறமும் காங்கிரசுக்கு மானம் இருக்கா? அப்படி கொஞ்சமாவது மானம் இருந்திருந்தால், அழவைத்த திமுகவோடு கூட்டணி வைக்க மாட்டோம்ன்னு சொல்லி வெளியே வந்திருக்கணும்..

மரியாதை

மரியாதை

அப்படி வந்திருந்தால் மரியாதை உள்ள கட்சி, மானம் உள்ள கட்சின்னு மக்கள் பாராட்டி இருப்பாங்க.. ஆனால் தங்கள் தன்மானத்தை இழந்துவிட்டு தமிழர்களிடம் மானம் இருக்கிறதா? என்று கேட்டால் யாராவது சிரிக்க மாட்டாங்களா? என்ன செய்றது? பாவம் ராகுல் இப்படித்தான் சிறுபிள்ளைத்தனமாக தெரியாமல் எதையாவது பேசுவார்... அவரது பேச்சுக்கு பதில் சொல்வதே டைம் வேஸ்ட் பண்றது போலதான் என்றார்.

கண்ணீர்

கண்ணீர்

இதற்கு முன்பும் குஷ்பு காங்கிரஸை நிறைய விமர்சித்து இருக்கிறார்.. ராகுலின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் கட்சியை விட்டு போவதாகவும் பகிரங்கமாக சொல்லி விட்டு வெளியேறினார்.. ஆனால், இந்த முறை சற்று ஓவரான காட்டத்தை குஷ்பு காட்டியது அனைவருக்குமே கொஞ்சம் ஷாக்தான்.. குஷ்பு கேட்டவை அனைத்தும் தமிழகத்தில் நடந்த சம்பவங்கள்தான்.. சீட்டுக்காக காத்திருந்ததையும், கண்ணீர் விட்டதையும், யாரும் கவனிக்காமல் இல்லை..

3 மாதம்

3 மாதம்

3 மாதத்துக்கு முன்புகூட உதயநிதி பேசும்போது, "திமுக வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை நாம் கூட்டணிக் கட்சிக்கு கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்காமல், இனி திமுகவே போட்டியிட வேண்டும்" என்று தலைமையை கேட்காமல் பேசி கூட்டணியையே அதிர வைத்தார்.. ஆனால், உதயநிதியின் இந்த பேச்சை பெரிது படுத்தப்போவதில்லை என்று அழகிரி அப்போதே சொல்லிவிட்டார்.. இது பெருந்தன்மை என்று எடுத்து கொண்டாலும், தேசிய கட்சியில் இருந்து கொண்டு, தனித்து போட்டியிடும் துணிவை இதுவரை காங்கிரஸ் பெறவில்லை என்பது வேதனை..

தலைவர்

தலைவர்

அதைவிட இப்போது வந்த கமலுடன் கூட்டணி அமைக்க, மறைமுக பேச்சுவார்த்தைகளை நடத்தியது அதைவிட வேதனை.. நியாயப்படி பார்த்தால் கமல்தான் காங்கிரசுடன் பேசியிருக்க வேண்டும்.. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு கட்சியின் மாநில தலைவர் கண்ணீர் விடுவது, அந்த கட்சியின் பலவீனத்தையே மேலும் பிரதிபலித்துவிட்டது..

சரியே

சரியே

இதுபோதாதென்று, சீட் தந்ததும் சத்தியமூர்த்திபவனில் வழக்கம்போல மண்டை உடைந்து, உருண்டு புரண்ட கோஷ்டி மோதலும் மிச்ச மானத்தை வாங்கிய சம்பவங்கள் ஆகும்.. குஷ்பு கேட்டது சரியே என்றாலும், ராகுல் சொன்னதுபோல, அந்த கட்சியினர் யார் காலிலும் விழாமல் இல்லை.. காலில் விழும் கலாச்சாரத்தை துவக்கியதுதே அதே கட்சிதான் என்பதையும் தமிழகம் அறிந்த ஒன்று.. அதனால் ராகுல் சொன்னதும் சரியே.. குஷ்பு பேசியதும் சரியே...!

English summary
BJP Khushboo responds to Rahulgandhi's speech
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X