பாஜக கூட்டணியில் தேமுதிக? ட்விஸ்ட் கொடுத்த எல் முருகன்.. பெரிதாக திட்டம் போடும் என்டிஏ
சென்னை: தேமுதிக இதுவரை தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்காமல் சஸ்பென்ஸ் காத்து வருகிறது. இதற்கிடையே தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்று மத்திய இணையமைச்சர் எல் முருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் கவனம் பெற்றுள்ளது. இதனால் தேமுதிக எந்தக் கூட்டணிக்குச் செல்லும் என்பதில் மீண்டும் சஸ்பென்ஸ் எழுந்துள்ளது.
தமிழ்நாடு தேர்தலில் கூட்டணி தொடர்பாகப் பல்வேறு கட்சிகளும் தங்கள் முடிவை எடுத்து வருகிறது. இருப்பினும், தேமுதிக இதுவரை தனது முடிவை அறிவிக்கவில்லை. முன்னதாக ஜனவரி 10ம் தேதி நடந்த தேமுதிக மாநாட்டில் கூட்டணி தொடர்பான முடிவை அறிவிப்பதாக பிரேமலதா கூறியிருந்தார். இருப்பினும், அந்த மாநாட்டில் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. இதனால் தேமுதிக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.

தேமுதிக விருப்ப மனு
கூட்டணி குறித்த முடிவை அறிவிக்கும் முன்பே, தேமுதிக விருப்ப மனு விநியோகத்தை ஆரம்பித்தது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் விருப்பமனு விநியோகம் செய்யப்படுகிறது. பிப்ரவரி 12 விருப்பமனு விநியோகம் செய்யப்படும் என தேமுதிக தலைமை அறிவித்துள்ளது. முதல் சில நாட்கள் விருப்பமனு வாங்கப் பலரும் ஆர்வம் தெரிவித்தாலும் இன்று பெரிதாக யாருமே விருப்பமனு வாங்கவில்லை.
பேச்சுவார்த்தை
இது ஒரு பக்கம் இருக்கக் கூட்டணி குறித்து தேமுதிக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. திமுக மற்றும் என்டிஏ என இரு தரப்பில் இருந்தும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தேமுதிக நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. எந்தக் கூட்டணியில் கேட்ட இடங்கள் கிடைக்கிறதோ, அங்குச் சேர தேமுதிக முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
எல் முருகன்
இதற்கிடையே சென்னையில் பாஜக அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல் முருகன் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய எல் முருகன், "என்டிஏ கூட்டணியில் யார் எல்லாம் இருக்கிறோம்.. எங்கள் பலம் என்ன என்பதை மதுராந்தகத்தில் நடந்த கூட்டத்தில் காட்டிவிட்டோம். ஆனால், திமுக கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. திமுக கூட்டணிக்குப் பயம் வந்துவிட்டது.
மேலும், தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை. தேவையான அனைத்து நிதியையும் கொடுத்துவிட்டோம். நிதியைச் செலவழித்த பிறகு அதற்கான சான்றிதழைத் தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மத்திய அரசின் விதிமுறைகளைப் பின்பற்றினால் தான் மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்படுகிறது. அதை விட்டுவிட்டு எங்கள் நிபந்தனைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும் என மாநில அரசு சொல்வதை ஏற்க முடியாது" என்றார்.
முக்கிய பதில்
அப்போது தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "கூட்டணி தொடர்பாகத் தேசியத் தலைமை பேசி வருகிறது. பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, கூட்டணி குறித்து முடிவைத் தேசியத் தலைமை உரிய நேரத்தில் நிச்சயம் அறிவிக்கும்" என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications