தொக்காக சிக்கிய பாஜக நிர்வாகி அஞ்சலை.. கந்து வட்டி கேட்டு கொலை மிரட்டல்.. பெண் தாதா கைது!
சென்னை: சென்னை புளியந்தோப்பில் கந்துவட்டி கேட்டு மிரட்டிய புகாரில் பாஜக பெண் நிர்வாகியும், ரௌடியுமான அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வரும் மாஜர் கான் என்பவரிடம் ரூ. 4 லட்சம் கடனாக கொடுத்துள்ளார் அஞ்சலை. 4 லட்சம் கடனுக்கு இதுவரை 8 லட்சம் பணத்தை திரும்பப் பெற்றுள்ள நிலையில் மேலும் 9.5 லட்சம் கேட்டு அஞ்சலை, மாஜர் கானை மிரட்டியதாக கூறப்படுகிறது.

வாங்கிய பணத்திற்கு மேல் டபுள் மடங்காக வட்டியுடன் கட்டிவிட்டேனே மீண்டும் ஏன் பணம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார் மாஜர்கான். இதையடுத்து அஞ்சலை அவரது வீட்டிற்கு அடியாட்களை அனுப்பி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து, மன உளைச்சல் அடைந்த மாஜர் கான் இது தொடர்பாக போலீசில், அஞ்சலை மீது புகார் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, கந்துவட்டி கேட்டு மிரட்டிய புகாரில் அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளார். அஞ்சலை பாஜக மகளிர் அணியில் பொறுப்பு வகித்து வருகிறார்.

வட சென்னை பகுதியில் பிரபலமான பெண் தாதாக்களில் ஒருவர் தான் இந்த புளியந்தோப்பு அஞ்சலை. அஞ்சலை மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கஞ்சா விற்பனை உள்ளிட்ட விவகாரங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
புளியந்தோப்பு அஞ்சலைக்கு, வட சென்னை மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராக பதவி வழங்கியுள்ளது தமிழக பா.ஜ.க. பா.ஜ.க தொடர்ந்து ரவுடிகளை கட்சியில் இணைத்து பொறுப்பு வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்தச் சூழலில் தான் கந்து வட்டி புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார் பெண் ரௌடி புளியந்தோப்பு அஞ்சலை. அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தால் புளியந்தோப்பு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications