Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“ஆளுநரின் பையனுக்கு எம்பி சீட்?” பிரஸ் மீட்டில் ஜர்க்கான அண்ணாமலை! சட்டென அலர்ட் செய்த கரு நாகராஜன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலிருந்து ஆளுநர் வெளியேறியது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, சபாநாயகர் அப்பாவு பற்றி பேசுவதற்கு பதில், ஆளுநர் என மாற்றி தவறாக பேசியிருந்தது சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், தமிழக அரசுக்கும், ஆளுநருக்குமான உறவில் தொடர் விரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆளுநரின் ஒவ்வொரு கருத்தும் தமிழக அரசுக்கும், தமிழக அரசியல் தன்மைக்கும் எதிராக இருப்பதாக கூறி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் vs தமிழக அரசு மோதலை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்று வருகிறது.

 BJP leader Annamalai criticized the Governor instead of the Speaker Appavu, causing a stir

ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடரின்போது, ஆளுநர் உரையை வாசிப்பார். உரையை அவர் வாசித்தாலும், அதை தயாரித்து கொடுப்பது தமிழக அரசுதான். கடந்த ஓராண்டில் அரசு செய்த மாற்றங்கள், அதன் பயன்கள், எதிர்கால திட்டம் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றிருக்கும். இந்த உரையை ஆளுநர் வாசிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே, அவருக்கு அனுப்பி வைத்து ஒப்புதல் பெறப்படும். இதனையடுத்துதான் ஆண்டின் முதல் கூட்டத்தில் அந்த உரையை ஆளுநர் வாசிப்பார்.

கடந்த ஆண்டு இப்படி அனுப்பி ஒப்புதல் பெறப்பட்ட உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசித்த போது, திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா போன்ற வார்த்தைகளையும் படிக்காமல் புறக்கணித்திருந்தார். இது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஆண்டாண்டு காலமாக இருந்த சட்டமன்ற மரபை ஆளுநர் மீறுகிறார் என்கிற விமர்சனங்களும் எழுந்தன. இருப்பினும் பாஜக ஆளுநரின் செயலுக்கு விளக்கமளித்து, தமிழக அரசு மீது குற்றம்சாட்டியது.

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற முதல் கூட்டத்தில், "2024ம் ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் உரையை நிகழ்த்துவதை நான் பெரும்பேறாகக் கருதுகிறேன். அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, இப்புத்தாண்டில் நமது மாநிலத்தில் மகிழ்ச்சியும், வளமும், நலமும் தழைத்தோங்க எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் வளர்ச்சி குறித்த இந்த அரசின் உயர்ந்த நோக்கங்களை காலத்தை வென்ற திருவள்ளுவரின் குறள் ஒன்றை குறிப்பிட்டு உரையை தொடங்க விரும்புகிறேன்" என்று திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டிவிட்டு உரையை முழுமையாக படிக்காமல் புறக்கணித்துவிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

இதனையடுத்து ஆளுநர் வாசிக்க மறுத்த உரையை சபாநாயகர் அப்பாவு முழுமையாக வாசித்தார். இறுதியாக "எவ்வளவோ பெரிய வெள்ளம், புயல் ஏற்பட்டுள்ளது. ஒரு பைசா கூட நிதி தரவில்லை. பல லட்சம் கோடி ரூபாய் பிரதமரின் "PM care fund"-ல் உள்ளது. இந்திய மக்கள் கணக்கு கேட்க முடியாத இந்த நிதியில் இருந்து ஒரு ரூ.50,000 கோடி வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமே என்று நான் கேட்கலாமே. சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல" என்று கூறியிருந்தார்.

இப்படியாக அவர் பேசி முடித்ததும், ஆளுநர் ரவி அவையிலிருந்து வெளியே சென்றுவிட்டார். இந்நிலையில், சபாநாயகர் தவறாக பேசியதால்தான் ஆளுநர் அவையிலிருந்து வெளியேறினார் என தமிழக பாஜக விமர்சிக்க தொடங்கியுள்ளது.

இன்று காலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சபாநாயகர் அப்பாவு குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த பேட்டியின்போது, "சபாநாயகர் அப்பாவு நடவடிக்கைகளை பார்த்தால் அவர் குடும்பத்தில் யாருக்கேனும் தேர்தலில் சீட்டை எதிர்பார்ப்பார் என்பதை போலத்தான் இருக்கிறது" என்று கூறுவதற்கு பதில்,

"ஆளுநரின் நடவடிக்கைகளை பார்த்தால் அவர் குடும்பத்தில் யாருக்கேனும் தேர்தலில் சீட்டை எதிர்பார்ப்பார் என்பதை போலத்தான் இருக்கிறது" என்று வாய் தவறி கூறிவிட்டார். பின்னர் உடன் இருந்த பாஜக நிர்வாகி கரு நாகராஜன், "அது ஆளுநர் இல்லை, அப்பாவு" என அண்ணாமலைக்கு விளக்கினார். இதனையடுத்து, அண்ணாமலை பெயரை மாற்றி சொல்லிவிட்டதாக கூறி, அப்பாவு மீது விமர்சனத்தை முன்வைத்தார்.

அண்ணாமலையின் பெயர் மாற்றத்தால் உடன் இருந்த நிர்வாகிகள் சட்டென ஷாக்கான சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+