“திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவோம்".. கந்த சஷ்டி கவசம் பாடி வழிபட்ட அண்ணாமலை! வீடியோ
சென்னை: பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று தமது வீட்டில் கந்த சஷ்டி கவசம் பாடி முருகனுக்கு பூஜை செய்தார். இதுதொடர்பான வீடியோவை பகிர்ந்து, “திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என உறுதி ஏற்று “கந்த சஷ்டி கவசம்” பாடி முருகனை போற்றுவோம்.” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் மகாதீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி முருக பக்தர்கள் பேரவை சார்பில் இன்று 23 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை தமிழகம் முழுவதும் கந்த சஷ்டி பாராயணம் செய்ய உள்ளனர். இதையொட்டி, அனைவரும் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும் என தமிழக பாஜக கேட்டுக்கொண்டுள்ளது.

சஷ்டியும் கிருத்திகையும் இணைந்து வரும் சிறப்பான நன்னாளான இன்று அதாவது பிப்ரவரி 23 ஆம் தேதியன்று, அருள்மிகு முருகப் பெருமானுக்காக ஆறு தீபங்கள் மற்றும் நாம் சார்ந்த பகுதியின் நன்மைக்காக ஒரு தீபம் என நம் வீடுகளில் மொத்தம் ஏழு விளக்குகளில் தீபமேற்றி, கந்தசஷ்டி கவசத்தை நாம் பாராயணம் செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என பக்தர்கள் சார்பாக பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அதனை திமுக அரசு நிறைவேற்றவில்லை, திமுகவிற்கு பாடம் புகட்டும் விதமாகவும் தங்களது உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவும் பக்தர்கள் அனைவரும் தங்களது வீடுகளில், வீட்டு வாசலில் விளக்கேற்றி 23ம் தேதி கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், பாஜகவினர், தங்களது வீடுகளில் கந்த சஷ்டி கவசம் பாடி வழிபட்டு வருகின்றனர். பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று தமது வீட்டில் கந்த சஷ்டி கவசம் பாடி முருகனுக்கு பூஜை செய்தார். இதுதொடர்பான வீடியோவை பகிர்ந்து, “கந்த சஷ்டி கவசம்” பாடி முருகனை போற்றுவோம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சக்திவேல் ஏந்திய குமரனுக்கு உகந்த திதியான சஷ்டியும், கந்தனுக்கு உகந்த நட்சத்திரமான கார்த்திகையும் இணைந்துள்ள இன்றைய நாளில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்ற உறுதியை ஏற்று “கந்த சஷ்டி கவசம்” பாடி முருகனை போற்றுவோம்.
— K.Annamalai (@annamalai_k) February 23, 2026
அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும்… pic.twitter.com/sQThNwkYXk
அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “சக்திவேல் ஏந்திய குமரனுக்கு உகந்த திதியான சஷ்டியும், கந்தனுக்கு உகந்த நட்சத்திரமான கார்த்திகையும் இணைந்துள்ள இன்றைய நாளில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்ற உறுதியை ஏற்று “கந்த சஷ்டி கவசம்” பாடி முருகனை போற்றுவோம்.
அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கந்த சஷ்டி கவசம் பாடி, முருகப்பெருமானின் பேரருள் உலக மக்கள் அனைவருக்கும் கிடைத்திட மனதார பிரார்த்திப்போம். சஷ்டி பாடுவோம் தீபம் ஏற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications