சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இடித்துரைக்கும் கருத்துகளை ஏற்றுக் கொள்ளாத மன்னன் விரைவில் கெட்டழிவான்...சொல்கிறார் அண்ணாமலை

கருத்துச் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் தி.மு.க அரசு தொடர்ந்து செயல்பட்டால், அதைப் பார்த்துக் கொண்டு பா.ஜ.க அமைதியாக இருக்காது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இல்லானும் கெடும் என்ற வள்ளுவர் வாக்கை, உணர்ந்து விமர்சனங்களை, அரசு தன்னை செம்மைப்படுத்திக்கொள்ள பயன்படுத்த வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கருத்துச் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் தி.மு.க அரசு தொடர்ந்து செயல்பட்டால், அதைப் பார்த்துக் கொண்டு பா.ஜ.க அமைதியாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

பாஜக இளைஞரணி செயலாளர் வினோஜ் பி.செல்வம் தனது டுவிட்டர் பதிவில், மக்களிடையே மதத்தின் அடிப்படையில் வெறுப்பையும், பகைமையையும் உருவாக்கி பொது அமைதியை குலைக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து வினோஜ் பி.செல்வம் மீது 3 சட்டப் பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

BJP leader Annamalai support to Vinoj P. Selvam

இந்த நிலையில் வினோஜ் பி செல்வத்துக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுத்தால் அவருக்கு கட்சி துணை நிற்கும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக காவல்துறை தன்னுடைய பெருமையையும் கண்ணியத்தையும் துறந்து தி.மு.கவின் கைப்பாவையாக செயல்படுவதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு மற்றும் ஒரு உதாரணமாக சமீபத்தில் எல்லா பத்திரிக்கைகளிலும், 130க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள், இடிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தியை மேற்கோள்காட்டி, சுதந்திரத்துக்கு முன்பு கூட இப்படி அடக்குமுறை நடந்ததில்லை.

உள்ளாட்சியிலாவது நல்லாட்சி மலர வேண்டும் என்று பாஜகவின் இளைஞரணி தலைவர் வினோஜ் பி. செல்வம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில் எந்தவிதமான கண்ணியக் குறைவான வாசகங்களோ, மதக் கலவரம் தூண்டும் செய்திகளோ இல்லை. ஆக அவர்கள் செய்யும் தவறை பொதுமக்கள் சுட்டிக் காட்டுவதை தி.மு.க விரும்பவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

அதைவிட வினோஜ் பி. செல்வம் ட்விட்டர் பதிவையும் வழக்குப் பதிவையும் மேற்கோள்காட்டி இதுபோல பதிவிடும்போது மக்களை கைது செய்வோம் என்று சென்னைப் பெருநகர காவல்துறை ஆணையம் கடிதம் வெளியிட்டுள்ளார். இது அச்சுறுத்தலா அல்லது அத்துமீறலா?

ஒரு கருத்தியலை, கருத்தியலால் எதிர்கொள்ளாமல் தன் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி, காவல்துறை ஏவிவிட்டு அண்ணல் அம்பேத்கரால் ஒவ்வொரு இந்தியனுக்கும் வழங்கப்பட்ட அடிப்படை உரிமையான கருத்து சுதந்திரத்துக்கு தடை போட நினைப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை

இடித்துரைக்கும் கருத்துகளை ஏற்றுக் கொள்ளாத மன்னன் விரைவில் கெட்டழிவான் இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இல்லானும் கெடும்' என்ற வள்ளுவர் வாக்கை, உணர்ந்து விமர்சனங்களை, அரசு தன்னை செம்மைப்படுத்திக்கொள்ள பயன்படுத்த வேண்டும்.

மாறாக, கருத்துச் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் தி.மு.க அரசு தொடர்ந்து செயல்பட்டால், அதைப் பார்த்துக் கொண்டு பாஜக அமைதியாக இருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
BJP leader Annamalai support to Vinoj P. Selvam BJP leader Annamalai support to Vinoj P. Selvam. Vinoj P. Selvam booked by Chennai police for defamatory post on Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X