"சட்டவிரோதம்.." பெரியார் சிலை, கனிமொழி அவதூறு வழக்கு தீர்ப்பை எதிர்த்து.. எச்.ராஜா மேல்முறையீடு!
சென்னை: பெரியார் சிலையை உடைப்பு குறித்தும் திமுகவின் கனிமொழி தொடர்பாகவும் அவதூறாகப் பேசிய வழக்கில் எச்.ராஜாவை சென்னை சிறப்பு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. இந்த இரு வழக்குகளிலும் தலா 6 மாதம் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்திருந்தது. இதற்கிடையே இந்த தண்டனையை எதிர்த்து ஹெச் ராஜா இப்போது மேல்முறையீடு செய்துள்ளார்.
இப்போது பாஜக தமிழக ஒருங்கிணைப்புக் குழு தலைவராக இருப்பவர் எச். ராஜா.. கடந்த காலங்களில் இவரது பேச்சுக்கள் பல முறை சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.

எச் ராஜா: அப்படி தான் கடந்த 2018ஆம் ஆண்டு பெரியார் சிலையை உடைப்பேன் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அது அப்போது தமிழ்நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல திமுக எம்பி கனிமொழி தொடர்பாகவும் சில அவதூறு கருத்துகளைத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக திமுக, காங்கிரஸ், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், அதை ரத்து செய்யக் கோரி எச். ராஜா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இருப்பினும், அந்த மனுவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், மூன்று மாதங்களில் இரண்டு வழக்குகளின் விசாரணையை முடிக்கச் சென்னை எம்.பி., எம்.எல்.ஏ. மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
எச் ராஜா வாதம்: அதைத் தொடர்ந்து இந்த வழக்கு மீதான விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயவேல் முன்பு நடந்தது. அப்போது எச் ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என கூறியதற்கான ஆதாரங்கள் இல்லை.. திமுக எம்பி கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து.. கனிமொழி நேரடியாகப் புகார் அளிக்காத நிலையில், யாரோ தந்த புகார் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் எச். ராஜாவை விடுவிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.
சிறைத் தண்டனை: இருப்பினும், இந்த வாதத்தை ஏற்க மறுத்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, எச்.ராஜா மீதான குற்றச்சாட்டை போலீசார் நிரூபித்து இருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், சமூக வலைத்தளங்களில் எச்.ராஜாவின் பக்கத்திலேயே சர்ச்சை கருத்து வெளியிடப்பட்டது என்றும் குறிப்பிட்டார். எனவே எச்.ராஜாவை குற்றவாளி என அறிவித்த சிறப்பு நீதிமன்றம், அவருக்கு இரு வழக்குகளிலும் தலா 6 மாதம் சிறைத் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேல்முறையீடு: இருப்பினும், அப்போதே நமது ஒன் இந்தியா தளத்திற்குப் பிரத்தியேகமாகப் பேட்டியளித்திருந்த எச். ராஜா, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே தன் மீது வழக்குப் போடப்பட்டதாகவும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்றும் குறிப்பிட்டு இருந்தார். அதன்படியே இப்போது இரு வழக்குகளிலும் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அவர் மேல் முறையீடு செய்துள்ளார். நேரடி சாட்சியங்களும் ஆதாரங்களும் இல்லாத நிலையில், விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்தது சட்ட விரோதமானது என்று கூறி மேல்முறையீடு செய்துள்ளார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications