"ஐய்யோ, கதவு மூடிடுச்சே!" இனிப்பு தர போய்.. வந்தே பாரத்தில் மாட்டிய பாஜக பிரமுகர்! கடைசில என்னாச்சு
சென்னை: சென்னை டூ கோவை வந்தே பாரத் ரயில் நேற்று தொடங்கப்பட்டது. அதற்குப் பொதுமக்கள் பெரிய வரவேற்பு கொடுத்த நிலையில், பாஜக பிரமுகர் இதில் மாட்டிக் கொண்ட நிகழ்வும் நடந்துள்ளது.
இந்தியாவில் எப்போதுமே ரயில் பயணத்திற்குத் தனியாக சுட்டி இருக்கவே செய்யும். விழா நேரங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய உடன் சில நொடிகளில் விற்றுத் தீர்வது எப்போதும் ரயில் டிக்கெட்களாகவே இருக்கும்.
விலையும் குறைவு, கழிப்பறை, உணவு என பல்வேறு வசதிகள் இருப்பதால் மக்களும் பலரும் ரயில்களையே பயன்படுத்த விரும்புகிறார்கள். இதன் கரணமாகவே ரயில்களுக்கு எப்போதும் மவுசு இருக்கிறது.

வந்தேர பாரத்: இருப்பினும், இந்தியாவில் தொழில்நுட்ப ரீதியாக ரயில்கள் பின்தங்கிய இருக்கிறது என்ற விமர்சனம் இருந்து கொண்டே இருந்தது. குறிப்பாக வேகம் மற்றும் வசதிகளை ஒப்பிடும் போது, மற்ற நாடுகளைக் காட்டிலும் நாம் பின்தங்கி இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதற்குப் பதிலளிக்கும் வகையில் புத்தம் புது ரயிலாக இந்தியன் ரயில்வே வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தியது.
முதலில் டெல்லி- கான்பூர்- அலகாபாத்- வாரணாசி வழித்தடத்தில் பிப்ரவரி 15, 2019ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. அதன் பிறகு மெல்ல பல்வேறு வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இப்போது 10க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இந்த வந்தே பாரத் இயக்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே சென்னை- பெங்களூர்- மைசூர் இருக்கும் நிலையில், நேற்று சென்னை கோவை வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ஏகப்பட்ட வசதிகள்: அதிவேக ரயிலான இது முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இது பெரம்பலூர் தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. முற்றிலும் குளிர்சாதன வசதி, அதிவேக வைபை, பயோ டாய்லெட் என பல்வேறு வசதிகளை இந்த ரயில் கொண்டிருக்கிறது. மேலும், எதிர்புறம் 50 மீட்டர்கள் வரை ரயில் வந்தால் தானியங்கி முறையில் கண்டறிந்து நிறுத்தும் வசதியையும் இந்த ரயில் கொண்டிருக்கிறது.

நேற்று இந்த ரயிலைப் பிரதமர் மோடி சென்னையில் இருந்து தொடங்கி வைத்தார். முதல் நாளான நேற்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இந்த ரயிலில் பயணித்தனர் சென்னை - கோவை வழித்தடத்தில் இந்த ரயில் இயங்கும் நிலையில், இடையில் சேலம், ஈரோடு, திருப்பூர் வழித்தடத்தில் மட்டுமே நின்று செல்ல இருக்கிறது. இருப்பினும், முதல் நாள் பொதுமக்கள் இந்த ரயிலைப் பார்க்க வழியில் பல நிறுத்தங்களில் இது நின்று சென்றது.
பாஜக பிரமுகர்: வழியில் அனைத்து ரயில் நிலையங்களிலும் வந்தே பாரத் ரயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பைக் கொடுத்தனர். அதன்படி வந்தே பாரத் குடியாத்தம் ரயில் நிலையத்தில் நின்றது. அங்கே கூடியிருந்த மக்கள் வந்தே பாரத் ரயிலுக்குப் பூக்களைத் தூவி வரவேற்றனர். அப்போது அங்கே பாஜக மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி பயணிகளை வரவேற்றார். மேலும், அங்கே இருந்த பயணிகளுக்கு அவர் இனிப்புகளையும் வழங்கினார்.
வந்தே பாரத் ரயிலில் தானியங்கி கதவுகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். கார்த்தியாயினி உள்ளே இருந்த பயணிகளுக்கு இனிப்புகளைக் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென அவர் இறங்கும் முன்பே தானியங்கி கதவுகள் மூடிக் கொண்டது. இதனால் அவர் சற்று பதற்றமடைந்தார். ரயிலும் மெல்லச் செல்ல தொடங்கியதால் அவருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

கடைசியில் என்னாச்சு: இதையடுத்து அருகே இருந்த ரயில்வே காவலர்களிடம் சொல்லி ரயிலை நிறுத்த வைத்து இறங்கிக் கொண்டார் இருப்பினும், சக பாஜக தொண்டர்களால் உடனடியாக இறங்க முடியவில்லை. இதனால் அவர்கள் அடுத்து ரயில் நிற்கும் இடம் வரை உள்ளேயே செல்ல வேண்டி இருந்தது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications