மதம் என்ன? மேயர் பிரியாவை சீண்டிய பாஜக! முதல்வருக்கு போன உளவுத்துறை மெசேஜ்? பறந்து வரும் சப்போர்ட்!
சென்னை: சென்னை மேயர் பிரியாவின் மதம் குறித்து பாஜகவினர் சிலர் இணையத்தில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரத்தில் பிரியாவிற்கு தேவையான ஆதரவுகளை ஆளும் தரப்பு வழங்கும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
Recommended Video
சென்னை மேயராக திமுக கவுன்சிலர் பிரியா கடந்த வாரம் பதவி ஏற்றார். சென்னையின் முதல் தலித் மேயர், இரண்டாவது பெண் மேயர் என்று பல அடையாளங்களோடு இவர் பதவி ஏற்று இருக்கிறார். வடசென்னையில் இருந்து முதல்முறையாக ஒருவர் மேயராக பொறுப்பேற்று இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல்நாள் இவர் செய்தியாளர் சந்திப்பில் சரியாக பேசாதது பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இருப்பினும் அடுத்தடுத்த பேட்டிகளில் சிறப்பாக பேசி, தன் மீதான விமர்சனங்களுக்கு சிறப்பாக பதில் அளித்தார்.

பதிலடி
தெளிவாக சென்னை குறித்து, இவர் வைத்த திட்டங்கள், கோரிக்கைகள் கவனம் பெற்றன. இந்த நிலையில்தான் திடீரென பிரியாவிற்கு எதிராக மத ரீதியான விமர்சனங்களை பாஜகவினர் சிலர் இணையத்தில் முன்னெடுக்க தொடங்கி உள்ளதாக புகார் வைக்கப்படுகிறது. அவர் கிறிஸ்துவர், கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டார் என்று பாஜகவினர் சிலர் இணையத்தில் புகார்களை அடுக்கி வருகின்றனர்.

விசாரணை
இதனால் சென்னை மேயர் ப்ரியாவின் மதம் குறித்த சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. இந்த விவகாரத்தை பாஜக கிண்டி கொண்டிருக்கும் நிலையில், ப்ரியாவின் பூர்வீகம், சாதி, மத சான்றிதழ்கள், அடையாளங்கள் என பலவற்றை சேகரித்து வருகிறது. அவர் என்ன மதத்தை சேர்ந்தவர் என்பதை வெளியிடும் வகையில் பாஜகவினர் சிலர் இதை கிண்டி கிளறிக்கொண்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

உளவுத்துறை தகவல்
இந்த விசயத்தை உளவுத்துறை மூலமாக தெரிந்து கொண்ட முதலவர் ஸ்டாலின், மேயர் பதவிக்கு ப்ரியாவை சிபாரிசு செய்த அமைச்சர் சேகர்பாபுவை அழைத்து விசாரித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. என்ன பிரச்சனை.. ஏன் இப்படி மதத்தை பற்றி இழுக்கிறார்கள் என்று கேட்டு இருக்கிறார். அப்போது, அதெல்லாம் ஒன்றுமில்லை. ப்ரியா தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்தான். கிறிஸ்துவ மதத்தில் பற்று உண்டு . மற்றபடி, அந்த மதத்திற்கு அவர் மாறவில்லை.

சேகர் பாபு பதில்
பொழுது போகாமல் எதையாவது பாஜகவினர் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று விளக்கமளித்திருக்கிறார், சேகர்பாபு. இதை ஏற்றுக்கொண்ட முதல்வர்.. சரிதான்.. பிரியாவை மேயராக கொண்டு வந்ததில் பாஜகவில் பலருக்கு விருப்பம் இல்லை. இதனால் இப்படி பரப்புவார்கள். கண்டுகொள்ள வேண்டாம் என்று பாசிட்டிவ்வாக பேசி இருக்கிறாராம். அதே சமயம் சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ''பிரியாவின் சான்றிதழ்களையும், வேட்பு மணுவில் இணைக்கப்பட்ட அஃபிடவிட்டுகளையும் ரெடியாகி வைத்துக்கொள்ளுங்கள் '' என்று உத்தரவிட்டுள்ளாராம் முதல்வர் ஸ்டாலின்.

உறுதுணை
மேலும் மேயர் பிரியா இப்போதுதான் முதல்முறை உயர் பதவியை பெற்றுள்ளார். அவர் சுதந்திரமாக செயல்படட்டும். அதே சமயம் எதிர்க்கட்சிகள் அவர் மீது வைக்கும் வன்மமான புகார்களுக்கு எதிராக திமுக உறுதியாக நிற்க வேண்டும். அவருக்கு உறுதியாக நாம் இருக்க வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு உத்தரவு போடப்பட்டுள்ளதாம். அதாவது இந்த பிரச்சனையில் மேயர் பிரியாவிற்கு உறுதுணையாக நிர்வாகிகள் இருக்க வேண்டும் என்று தலைமை உத்தரவிட்டு இருக்கிறதாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications