7 தொகுதிகள்.. தமிழ்நாட்டில் பாஜகவின் டார்கெட் "இந்த" இடங்கள்தான்? ரெய்டுக்கு பின் உள்ள ஷாக் காரணம்!
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தடுத்து டெல்லி ரெய்டுகளை விடுத்து வரும் நிலையில் பாஜக முக்கியமான 7 தொகுதிகளை டார்கெட் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
கொங்கு மண்டலத்தில் திமுகவின் மிக முக்கியமான அமைச்சராக கருதப்பட்டவர் செந்தில் பாலாஜி. லோக்சபா தேர்தலில் கொங்கு மண்டலம் முழுக்க திமுக வெல்ல இவர் பெரிய காரணமாக இருந்தார். அதன்பின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

கரூரில் வரிசையாக அடுத்தடுத்து திமுக ஸ்வீப் செய்ய பெரிய காரணம் இவர்தான். அதேபோல் கோவையில் பொறுப்பு அமைச்சராக இருந்தார். அங்கே திமுகவிற்கு எம்எல்ஏ இல்லை என்றாலும் செந்தில் பாலாஜியின் சிறப்பான பணிகள் காரணமாக திமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வென்றது.
அதற்கு செந்தில் பாலாஜியின் கடுமையான பணிகள்தான் காரணம்., கடந்த லோக்சபா தேர்தலுக்கு பின்பாக கோயம்புத்தூர் உள்ளிட்ட கொங்கு மண்டலம் முழுக்க திமுக வேகமாக வளர்ந்து உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலம் முழுக்க திமுகதான் வென்றது. இதற்கு செந்தில் பாலாஜியின் வியூகம் மிக முக்கிய காரணம். முக்கியமாக கோயம்புத்தூரில் திமுகவின் வெற்றியை செந்தில் பாலாஜிதான் உறுதி செய்தார். அதன்பின் கூட மொத்தம் 50 ஆயிரம் நிர்வாகிகள் மாற்று கட்சியில் இருந்து திமுகவில் இணைந்தனர்
இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை டார்கெட் செய்தது. அதன்படி சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளானார். அதோடு அமலாக்கத்துறை மூலம் கைதும் செய்யப்பட்டார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இன்னொரு பக்கம் திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் எம்பி கவுதம சிகாமணி ஆகியோர் நேற்று அமலாக்கத்துறை ரெய்டுக்கு உட்படுத்தப்பட்டனர். கவுதம சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதியிலிருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் பொன்முடி மற்றும் கவுதம சிகாமணி இருவரும் அமலாக்கத்துறை மூலம் விசாரிக்கப்பட்டார். நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடுகளில் அமலாக்கத்துறை மூலம் ரெய்டு நடத்தப்பட்டது.
காலை 7 மணிக்கு தொடங்கிய ரெய்டு இரவு 12 மணி வரை தொடர்ந்தது. இன்னொரு பக்கம் 9 மணி அளவில் ரெய்டுக்கு இடையே பொன்முடி விசாரணை நடத்தப்படுவதற்காக அழைத்து செல்லப்பட்டார். கைது செய்யப்பட்டார் என்று கருதப்பட்ட நிலையில் அவரை விசாரணை செய்வதற்காக என்று மட்டும் அமலாக்கத்துறையினர் அழைத்து சென்றனர்.
இப்படி இரண்டு முக்கிய அமைச்சர்கள் ரெய்டுக்கு உள்ளான நிலையில் பாஜக முக்கியமான 7 தொகுதிகளை டார்கெட் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. கொங்கு மண்டலத்தில் சில தொகுதிகளையும், வடக்கு மற்றும் தென் மண்டலத்தில் சில தொகுதிகளையும் பாஜக குறி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கோவை, கரூர், நீலகிரி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் பாஜக களமிறங்கும் வாய்ப்புகள் உள்ளன. கள்ளக்குறிச்சி ஐஜேகே பாரிவேந்தர் பாஜக கூட்டணியில் களமிறங்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில்தான் அதே தொகுதி எம்பி கவுதம சிகாமணி குறி வைக்கப்பட்டு உள்ளார் என்று கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி - கரூர், மற்றும் கோவை, கள்ளக்குறிச்சிக்கு கவுதம் சிகாமணி குறி வைக்கப்பட்டது போல இனி வேலூர், கன்னியாகுமரி, நீலகிரி, ராமநாதபுரம் தொகுதிகளுக்கு பாஜக டார்கெட் செய்யும். இதனால் தென் மாவட்டங்களில் ரெய்டுகளில் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications