'ஏன் அப்படி ஒரு சந்தேகம்'.. 'கொங்குநாடு' கேள்விக்கு எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் 'காட்டமான' பதில்
"நம்ம ஊரு பக்கத்தில் வல்லநாடு இருக்கிறது. தேனி பக்கத்தில் வருஷநாடு இருக்கிறது, மணப்பாறை அருகே வளநாடு இருக்கிறது.. அதெல்லாம் மாநிலமாக பிரிக்கலாமா?" எதற்கு அவங்களுக்கு பயம், பயமே தேவையில்லை எல்லாம் தமிழ்நாடு தான் என்று பாஜக எம்எல்ஏநயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
Recommended Video
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை பிரித்து கொங்கு நாடு தனி மாநிலம் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் இதுபற்றி மத்திய அரசு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மாநில அரசும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதேநேரம் கொங்குநாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாஜக மாநில செயலாளர் கரு.நாகராஜன் கொங்கு நாடு தனி மாநிலம் உருவாக்குவது தொடர்பான பரிசீலனை மத்திய அரசிடம் தொடக்க நிலையில் உள்ளது என்று கூறினார். அந்த பகுதி மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை என்றும் கூறினார்.

விதைபோடவில்லை
இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், கொங்குநாட்டுக்கு ஒரு விதையும் போடவே இல்லை, கொங்குநாடு தமிழ்நாட்டில் தான் உள்ளது என்றார். சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது முழு உருவச் சிலைக்கு நெல்லை சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பாஜக சட்டமன்ற குழுத் தலைவருமான நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார்.

வருசநாடு
பின்னர் நயினார் நாகேந்திரனிடம் 'கொங்குநாடு' விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது நயினார், "நம்ம ஊரு பக்கத்தில் வல்லநாடு இருக்கிறது. தேனி பக்கத்தில் வருஷநாடு இருக்கிறது, மணப்பாறை அருகே வளநாடு இருக்கிறது.. அதெல்லாம் மாநிலமாக பிரிக்கலாமா? எதற்கு அவங்களுக்கு பயம். பயமே தேவையில்லை. எல்லாமே தமிழ்நாடு தான்.

அரசின் கடமை
ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆந்திரா இரண்டாக பிரிந்து உள்ளது. , உத்தரப் பிரதேசம் இரண்டாக பிரிந்து உள்ளது. மாநிலங்களை இரண்டாக பிரிப்பது மாநில மக்களின் எதிர்பார்ப்பையும், நோக்கத்தையும் உணர்த்துகிறது. மாநில மக்களுடைய எதிர்பார்ப்பு அவ்வாறாக இருக்கும் என்றால் அதை செய்ய வேண்டியது அரசின் கடமை என்றார்.

குறுகிய கண்ணோட்டம்
அப்போது செய்தியாளர்கள் கொங்கு நாட்டுக்கான விதை போடப்பட்டு உள்ளதா? என்று கேட்டார்கள். அதற்கு பதில் கூறிய நயினார் நாகேந்திரன், "ஏன் அப்படி ஒரு சந்தேகம். அப்படி எந்த ஒரு விதையும் போடவே இல்லை. கொங்குநாடு தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. அது உங்களுக்கு தெரியும் ஏற்கனவே இங்கு ஒன்றிய அரசு என தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாமே குறுகிய கண்ணோட்டத்தோடு போய்க்கொண்டிருக்கிறது" என்று காட்டமான பதில் அளித்தார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications