தங்கச்சியையே ஓரங்கட்டும் ஸ்டாலின் எங்க.. எங்க மோடி எங்க.. முதல்வரை சீண்டும் வானதி சீனிவாசன்!
சென்னை: திமுக கட்சி, ஆட்சியில் பெண்களுக்கு அதிகாரம் வழங்காமல், பாஜகவை விமர்சித்து வெற்று அறி்க்கை வெளியிடுவதா? என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 % இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டு, விவாதத்திற்குப் பின்னர் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தோல்வி பயம் காரணமாக மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கும் முடிவை எடுத்துள்ளது பாஜக அரசு என தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பதிலடியாக அறிக்கை விட்டுள்ளார்.

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் வரலாற்று சிறப்புமிக்க சட்ட மசோதாவை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கடந்த 9 ஆண்டுகளாக மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை ஏன் கொண்டு வரவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதுமட்டுமல்லாது, "சாதி வேறுபாடுகளற்ற சமத்துவமும், பாலின சமத்துவமும் நாகரிக சமூகத்தின் அடையாளங்கள். பாலின சமத்துவம் என்பது அனைத்து வகையிலும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு உரிய அதிகாரத்தை வழங்குவதாகும். காலம் கடந்து செய்தாலும், கண் துடைப்புக்காக செய்தாலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை திமுக சார்பில் ஆதரிக்கிறேன்" என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
திமுக கட்சி, ஆட்சியில் பெண்களுக்கு அதிகாரம் வழங்காமல் வெற்று அறி்க்கை வெளியிடுவதா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம்
— Vanathi Srinivasan (@VanathiBJP) September 20, 2023
நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் வரலாற்று சிறப்புமிக்க சட்ட மசோதாவை, பிரதமர் நரேந்திர மோடி… pic.twitter.com/uUMBkl4Olc
ஆனால், ஸ்டாலின் தலைவராக உள்ள திமுகவிலும், அவர் முதலமைச்சராக உள்ள தமிழக அரசிலும் பாலின சமத்துவமும் இருக்கிறதா என்றால், மனசாட்சி உள்ள யாரும் இல்லை என்றே சொல்வார்கள். கருணாநிதியால் அரசியலில் அடையாளப்படுத்தப்பட்ட கனிமொழி, பெண் என்பதாலேயே திமுகவில் ஓரங்கப்பட்டுள்ளனர். ஆட்சிக்கும், கட்சிக்கும் தலைமை தாங்கும் அளவுக்கு திறமை இருந்தும், அவருக்கு பத்தோடு பதினொன்றாக துணைப் பொதுச் செயலாளர் பதவிதான்.
அதுபோல, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மகள் இருந்தும், மகனைத்தான் அரசியலுக்கு கொண்டு வந்து திமுக இளைஞரணிச் செயலாளராக, அமைச்சராக ஆக்கியுள்ளார். ஜனநாயகத்திற்கும், சமத்துவத்திற்கும் எதிரான வாரிசு அரசியலில்கூட, பெண்களை ஒதுக்கி விட்டு ஆண் வாரிசுக்கு மட்டுமே மகுடம் சூட்டியவர்கள்தான் இன்று பாலின சமத்துவம் பற்றி பேசுகிறார்கள். எல்லாம் வெறும் பேச்சு மட்டுமே.
முதலமைச்சரையும் சேர்த்து 35 பேர் கொண்ட திமுக அமைச்சரவையில் இருவர் மட்டுமே பெண்கள். அமைச்சரவை பட்டியலில் 35-வது இடத்தில் அதுவும் கடைசி இடத்தில் இருப்பவர் பெண் அமைச்சர் கயல்விழி. அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். இப்படி அமைச்சரவையில் பெண்களுக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்காமல், பட்டியலின பெண் அமைச்சரை கடைசி இடத்தில் வைத்துவிட்டு, கொஞ்சமும் கூசாமல், பாலின சமத்துவம் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அமைச்சரவையில் 11 பெண்கள் உள்ளனர். நிதி போன்ற முக்கிய துறைகளின் அமைச்சர்களாகவும் பெண்கள் உள்ளனர். மாநில ஆளுநர்களாகவும் பெண்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். பாலின ரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு அரசியல் அதிகாரம் அளிப்பதுதான் பாலின சமத்துவம். பெண்களுக்கு தேவையானதை அவர்களே செய்து கொள்ளும் அதிகாரத்தை அளிப்பது சமூக நீதி. இவற்றை செய்யாமல், பாலின சமத்துவம், சமூக நீதி என பேசிக் கொண்டே, பெண்களுக்கான அதிகாரத்தை மறுக்கிறது திமுக.
திமுக என்பது வாரிசு, ஊழலில் திளைக்கும் கட்சி. வாரிசு என்றாலே அங்கு ஆணாதிக்கம் வந்துவிடும். பெண்களுக்கு உரிமை மறுக்கப்படும். எனவே, மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்ததால், இந்திய வரலாற்றில் மகத்தான இடத்தை பிடித்ததோடு, மக்கள் தொகையில் சரி பாதியாக உள்ள பெண்களின் மனங்களையும் பிரதமர் மோடி வென்றுள்ளார். இதை பொறுக்க முடியாமல் வழக்கம்போல, வன்மத்தை கக்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். முடிந்தால் திமுக கட்சி, ஆட்சியில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவமும், அதிகாரமும் வழங்கட்டும். அவர் என்னதான் செய்தாலும், 2024ல் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவதை தடுக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி












Click it and Unblock the Notifications