குறைந்தபட்ச தெளிவுகூட இல்லை! ரயில்வே பட்ஜெட் குறித்து சு.வெங்கடேசனுக்கு வானதி சீனிவாசன் சுளீர் பதில்
சென்னை: சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக ரயில்வே பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் இது குறித்து x தளத்தில் எழுப்பிய கேள்விக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தற்போது பதிலளித்துள்ளார்.
ரயில்வே பட்ஜெட் குறித்து x தளத்தில் கேள்வி சு.வெங்கடேசன் எம்பி பதிவிட்டிருந்ததாவது, "மக்களவையில் இரயில்வே துறையின் வரவு செலவு அறிக்கை மீதான எனது பேச்சு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக தலைவர் வானதி சீனிவாசன், நான் உணர்ச்சி பொங்க பேசி கட்டுக்கதைகள் மூலம் தமிழக மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மரியாதைக்குரிய வானதி சீனிவாசன், இரயில்வே பட்ஜெட்டை பாஜக அரசுதான் ஒழித்தது. இது உண்மையா இல்லையா?

வருடந்தோறும் 12 கோடி பேர் பலன் பெற்ற மூத்த குடிமக்களுக்கான பயணச்சலுகையை பாஜக அரசுதான் ஒழித்தது. இது உண்மையா, இல்லையா?
இவ்வளவு விபத்துகள் நடந்த பின்பும் பாதுகாப்புக்கான கவச் எந்திரம் என்ற சொல்லே இல்லாமல், அதற்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விபரமே இல்லாமல் பொது பட்ஜெட் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இது உண்மையா, இல்லையா? இரயில்வேயின் ஒவ்வொரு திட்டத்துக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள் அடங்கிய "பிங்க் புத்தகம்" இப்பொழுது வரை வெளியிடப்படவில்லை. இது உண்மையா, இல்லையா?
ஆவணங்களை வெளியிடாமலே இரயில்வே துறையின் விவாதங்களை நடத்தி முடித்துவிட்டது மோடி அரசு. இது உண்மையா, இல்லையா?
இந்த ஆண்டு இரயில்வேக்கு 2 லட்சத்து 55,000 கோடி ஒதுக்கப்பட்டதாக கூறுகிறீர்களே, அதில் தமிழகத்தின் அகலப்பாதை திட்டத்துக்கு எவ்வளவு? இரட்டை பாதை திட்டத்துக்கு எவ்வளவு? புதிய வழித்தடங்களுக்கு எவ்வளவு? மின்மயமாக்கலுக்கு எவ்வாளவு? இந்த ஒதுக்கீட்டு விபரங்கள் அடங்கிய பிங்க புத்தகம் எங்கே? இந்த எளிமையான கேள்விகள் தான் எங்களுடையது. இதில் கட்டுகதைகளும், மக்களை ஏமாற்றும் முயற்சியும் எங்கே இருக்கிறது?
முழுமையான ஆவணங்களை வெளியிடுங்கள். தமிழ்நாட்டு மக்கள் உண்மைகளை தெரிந்து கொள்ளட்டும்.
தமிழகத்தின் 10 புதிய பாதை திட்டங்களுக்கும் மூன்று முக்கிய இரட்டை பாதை திட்டங்களுக்கும் கடந்த காலத்தில் வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதனை நான் சுட்டிக்காட்டிய பின் 2023 -24 பட்ஜெட்டில் 50 கோடி 100 கோடி என்று ஒதுக்கப்பட்டது. ஆனால் அது பாதுகாப்பு நிதி என்று கூறி திரும்பப் பெறப்பட்டது. இறுதியாக கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது பூஜ்ஜியம் தான்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2024-25 இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் புதிய திட்டங்களுக்கு 150 கோடி ஒதுக்கப்பட்டது. அது தேர்தலுக்காக செய்யப்பட்ட வெற்று அறிவிப்பா? அல்லது உண்மையான ஒதுக்கீடா என்பது பிங்க் புத்தகம் வந்தால் தெரிந்துவிடும்.
தேர்தலுக்காக வந்த பாஜக அமைச்சர்கள் மதுரை எய்ம்ஸ்கான வேலையெல்லாம் முடிந்து கட்டிடப்பணி துவங்கிவிட்டது என்று கூறினார்கள். ஆனால் இன்று மக்களவையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் திரு நட்டா அவர்கள் ஒப்பந்தத்தில் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விரைவில் சரிசெய்யப்பட்ட பின்னர் பணிகள் துவக்கப்படும் என்கிறார்.
வானதி சீனிவாசன் அவர்களே! இரயில்வே துறையில் தமிழ்நாட்டின் உரிமை, பயணிகளின் பாதுகாப்பு, ஊழியர்களின் நலன், இவைகளுக்காக தொடர்ந்து நாங்கள் குரல்கொடுப்போம். அவைகள் மக்களை ஏமாற்றும் முயற்சி அல்ல. ஏமாற்ற நினைப்போரை அம்பலப்படுத்தும் முயற்சி" என்று விமர்சித்திருந்தார்.
இதற்கு தற்போது வானதி சீனிவாசன் x தளத்தில் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, "உண்மைக்கு புறம்பான கருத்துக்களைக் கூறி, தமிழக மக்களைக் குழப்ப முயற்சிக்கும் உங்கள் செயலுக்கு, 'பொய்' என்ற சொல்தான் மிகப்பொருத்தமானது.
நிதி வெளிப்படைத்தன்மை, செயல்பாட்டுத் திறன் மற்றும் கொள்கை சீரமைப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில், 2017 -ல் யூனியன் பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்ட இரயில்வே பட்ஜெட்டை, "இரயில்வே பட்ஜெட்டை பாஜக அரசு ஒழித்துவிட்டது" என்று கூறும் உங்கள் வார்த்தைகளுக்கு "பொய்" என்ற சொல்லைத் தவிர பொருத்தமான சொல் வேறு என்ன இருக்கிறது?
வார்த்தைக்கு வார்த்தை "பிங்க் புத்தகம்" எங்கே என்று கேட்கும் உங்களுக்கு, 2024-25 ஆம் ஆண்டிற்கான "பிங்க் புத்தகம்", இடைக்கால பட்ஜெட்டுக்குப் பின் பிப்ரவரி 2, 2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது என்ற தகவல் தெரியாமல் போனது சற்று ஆச்சரியம்தான்.
மேலும், இரயில்வே அமைச்சகத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் எவ்வித மாற்றங்களும் இல்லாததால், இடைக்கால பட்ஜெட்டின் போது வெளியிடப்பட்ட "பிங்க்" புத்தகமே, ஜூன் மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டிற்கும் பொருந்தும், என்ற குறைந்தபட்ச தெளிவு கூட இல்லாத உங்களுக்கு, பிங்க் புத்தகத்தின் இந்த லிங்க் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். https://indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?lang=0&id=0,1,304,366,539,3001
அடுத்ததாக, "கவச் எந்திரத்திற்கு எவ்வித ஒதுக்கீடும் செய்யவில்லை" என்ற உங்களின் பொய்யான போலிக் கருத்திற்கு பதிலளிக்கும் விதமாக, 2024-25 நிதியாண்டில் 'கவச்' எந்திரத்திற்காக, ரூ.1,112.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும், விளக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
மேலும், 2024-25 நிதியாண்டில் இரயில்வே துறைக்காக ரூ.2.55 லட்சம் கோடி நிதியும், அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கு அதிகபட்சமாக ரூ.6,362 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், "அவையனைத்தும் வெறும் வெற்று அறிக்கை" என்ற உங்களின் ஆதாரமற்ற கூற்று, தமிழக மக்களைக் குழப்பும் செய்கையே தவிர வேறில்லை.
அதை நிரூபிக்கும் விதமாக, தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட இரயில்வே திட்டங்களில் சிலவற்றைக் காண்போம்,
1. 6 வந்தே பாரத் இரயில்கள்
2. 77 அம்ரித் பாரத் நிலையங்கள்
3. மணியாச்சி-நாகர்கோவில் மற்றும் மதுரை-மணியாச்சி-தூத்துக்குடி வழித்தடங்கள்
4. சென்னை கடற்கரையிலிருந்து எழும்பூருக்கான(4.3 கிலோமீட்டர்) வழித்தடத்தை இரட்டிப்பாக்கும் பணி.
5. மணியாச்சி - நாகர்கோவில் (102 கிமீ), மதுரை - மணியாச்சி - தூத்துக்குடி (160 கி.மீ.) மற்றும் கன்னியாகுமரி-திருவனந்தபுரம் (86.56 கி.மீ.) போன்ற மூன்று கேஜ்(gauge) மாற்றும் திட்டங்கள் ஆகியவைகளை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.
இவ்வாறு, தமிழகத்திற்கான இரயில்வே திட்டங்களின் பட்டியல்கள் நீண்டு கொண்டிருக்கையில், மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துவிட்டது என்று நீங்கள் கூறுவது, முற்றிலுமான "கட்டுக்கதைகள்" என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
எனவே, "தமிழர்களுக்கான உரிமைக் குரல்" என்ற பெயரில் நீங்கள் நடத்தும் போலி நாடகத்தை இனியும், தமிழக மக்கள் நம்புதற்கு தயராக இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரயில்வே திட்டங்களுக்காக 6362 கோடி அளவிற்கு தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விவரங்கள் லிங்க் https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2036469" என்று கூறி பிங்க புத்தகத்தின் படங்களையும் இணைத்துள்ளார்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications