காங்கிரஸ் பெயரை சொல்லாத தீர்மானம்.. பாஜக வெளிநடப்பு.. திமுக இரட்டை நிலை.. வானதி சீனிவாசன் சுளீர்
சென்னை: காவிரி நதிநீர் தீர்மானத்தில் கர்நாடகா அரசு என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் காங்கிரஸ் கட்சியின் பெயரை சொல்லாமல் விட்டது ஏன் என்றும் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி தீர்மானம் முழுமையாக இல்லை என்று கூறி சட்டசபையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். காவிரி நீர் உரிமையை காப்பதில் திமுக அரசு எப்போது உறுதியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தண்ணீர் திறந்து விட கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்ற தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்தார். முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்கள் பேசினர். எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் பேசினர்.
இந்த நிலையில் காவிரி தனி தீர்மானத்தில் காங்கிரஸ் கட்சியின் பெயரை குறிப்பிடாமல் கர்நாடகா அரசு என்று மட்டும் கொண்டு வந்தது ஏன் என்று பாஜக எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ள தீர்மானம் முழுமையாக இல்லை என்று கூறி பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், கர்நாடகா மாநில அரசிடம் இருந்து சட்டப்பூர்வமான உரிமையை விவசாயிகளின் நலனை பாதுகாக்கின்ற வகையில் காவிரி நதி நீரை பெற்றுத்தர முடியாமல் இயலாமையை மறைக்க முயல்கிறார். அணை பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்ற போது அதை எதிர்த்து விட்டு இப்போது இரட்டை நிலைப்பாடு எடுப்பது ஏன். இந்த தீர்மானம் முழுமையான தீர்வை நோக்கி நகராமல் இருக்கிறது.
தமிழக மக்களின் நலனை சமரசம் செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு. தமிழகத்தின் நீர் உரிமைக்காக என்றும் நாங்கள் குரல் கொடுப்போம். கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்த போது எந்த சிக்கலும் வரவில்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த போது மட்டும் சிக்கல் வருவது ஏன்? காவிரி நீரை பெற்றுத்தர முடியாமல் மக்கள் ஏமாற்றுகின்றனர். தீர்மானம் முழுமையாக இல்லாததை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
நான்தான் எல்லாம் என்று சொல்பவர்களுக்கு தண்ணீர் பெற்றுத்தர கெப்பாசிட்டி இல்லை என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். பாஜக கூறியுள்ள சில அம்சங்களை தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications