அய்யோ பாவம் துரைமுருகன்.. வயதுக்காவது மரியாதை கொடுங்கய்யா.. கிளறி விடும் பாஜக.. அட பழைய கதையாச்சே!
சென்னை: மூத்த அமைச்சர் துரைமுருகன், திமுக கலந்துரையாடல் கூட்டத்தில் மனம் வெதும்பி பேசியிருப்பதாக கூறி, "அய்யோ, பாவம் ஐயா துரைமுருகன்.. அவர் வயதுக்காவது மரியாதை கொடுங்கய்யா!" எனக் கூறியுள்ளார் பாஜக நாராயணன்.
பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "தாயின் மீது ஆணையிட்டு, பெத்த தாயின் வயிற்றின் மீது ஆணையிட்டு, பெத்த அப்பன் மீது ஆணையிட்டு, நம்மையெல்லாம் வளர்த்த அண்ணாவின் மீது ஆணையிட்டு, தலைவர் மீது ஆணையிட்டு, தலைவனுக்கு தலைவனாக, அண்ணாவுக்கு அண்ணாவாக இருக்கிற இந்த தளபதி மீது ஆணையிட்டு, ஒரு சபதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இன்னும் கொஞ்ச நாளைக்கு தேர்தல் முடிகிற வரையில் நான் யாரிடத்திலும் பகைமை காட்ட மாட்டேன், யாரிடத்திலும் போட்டுக் கொடுக்க மாட்டேன், சில வன்நெஞ்சம் படைத்தவர்கள் இன்கம் டாக்ஸ்க்கே நம்மை பற்றி செய்தி சொல்கிற அளவிற்கு சில பேருடைய உள்ளம் மங்கி நன்றி கெட்டு மறந்து போயிருக்கிறது. அதையெல்லாம் நினைத்தால்,சில நேரங்களில், 60, 70 ஆண்டு காலம் இந்த கட்சியில் வாழ்ந்து விட்ட எனக்கு வருத்தமாக இருக்கிறது - தி மு க கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன்.

அய்யோ பாவம், உள்ளம் கலங்கி பேசியிருக்கிறார். திமுகவின் உட்கட்சி பூசலை, துரோகிகளின் கூடாரம் திமுக என்பதை, வன்நெஞ்சம் படைத்தவர்கள் திமுகவினர் என்பதை தெளிவாக கூறும் போது, திமுகவினர் நன்றி கெட்டவர்கள் என்று சொல்லும் போது அவரின் உள்ளக்குமுறலை நம்மால் உணரமுடிகிறது. 60, 70 ஆண்டு காலம் கட்சிக்கு உழைத்தவரை இப்படி போட்டு கொடுத்து விட்டார்களே என்று நெஞ்சம் பதை பதைக்கிறது. இன்கம் டாக்ஸ்க்கே செய்தி சொன்னவர்கள் யாரென்று தெரிந்தும் அவர்களை குறிப்பிட முடியாத அவரின் சோகம் நெஞ்சை பிளக்கிறது. அய்யோ, பாவம் ஐயா துரைமுருகன் அவர்கள். வயதுக்காவது மரியாதை கொடுங்கய்யா!!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுகவின் தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், "எம்.ஜி.ஆர் யாரைக் காட்டினாலும் அவர் எம்.பி, எம்.எல்.ஏ என்ற நிலை இருந்தது. தமிழக அரசியலில் மகத்தான வல்லமை பெற்றிருந்த எம்.ஜி.ஆரையே, லோக்சபா தேர்தலில் ஜீரோ வாங்க வைத்த பெருமை திமுகவைச் சேரும்.
முதலில் நமக்குள் ஒற்றுமை தேவைப்படுகிறது. ஒருவருக்கொருவர் காட்டும் மனக் கசப்பு ஸ்டாலின் உள்பட முன்னணி தலைவர்களாகிய எங்கள் அனைவருக்கும் வேதனையைத் தருகிறது. திமுகவில் உள்ள சிலர் வருமான வரித்துறைக்கு செய்தி சொல்லும் அளவுக்கு வன்நெஞ்சம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். மனக்கசப்பு காட்டாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். தேர்தல் முடியும் வரை யாரிடமும் பகைமை காட்ட மாட்டேன் எனவும், யாரையும் போட்டுக்கொடுக்க மாட்டேன் என்றும் நிர்வாகிகள் உறுதியேற்க வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு துரைமுருகனுக்கு நெருக்கமானவரின் வீட்டில் இருந்து வாக்காளர்களுக்கு அளிக்க வைக்கப்பட்டிருந்ததாகக் கூறி 10 கோடி ரூபாய் அளவுக்கான பணம் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து துரைமுருகன் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடைபெற்றது. இதனை மனதில் வைத்தே அப்போது நிர்வாகிகள் மத்தியில் அப்படி பேசினார் துரைமுருகன்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக திமுக அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டுகள் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. அமைச்சர் துரைமுருகன் பொறுப்பு வகிக்கும், நீர்வளம், கனிம வளத்துறைக்கு தொடர்புடைய இடங்களிலும், மணல் குவாரிகளிலும் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்றது. இந்நிலையில், சில காலமாக சைலண்டாக இருந்து வருகிறார் அமைச்சர் துரைமுருகன்.
இந்நிலையில் தான், அமைச்சர் துரைமுருகன் முன்பு, திமுக கூட்டத்தில் பேசியதை, தற்போது பேசியது எனக் குறிப்பிட்டு எதிக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதனை, பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "பாவம் ஐயா துரைமுருகன்.. வயதுக்காவது மரியாதை கொடுங்கய்யா" எனப் பதிவிட்டுள்ளார்.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications