என்ன சார் இது அநியாயம்? திமுக கொடிக்கம்பம் அமைக்க மட்டும் அனுமதியா? கொந்தளித்த பாஜக!
சென்னை: ஆளும் கட்சிக்கு சட்டம் இல்லையா? பாஜக கொடிக் கம்பங்கள் அமைக்க அனுமதி மறுக்கும் அரசு, திமுக கொடிக்கம்பம் நட அனுமதித்தது எப்படி என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு அருகே அண்மையில் புதிதாக அமைக்கப்பட்ட 50 அடி உயர பாஜக கொடி கம்பம், அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டதாக கூறி உடனடியாக அகற்றப்பட்டது. அப்போது நடந்த ரகளையில், ஜேசிபி வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில், பாஜகவினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் தற்போது புழல் சிறையில் உள்ளனர்.

தமிழக அரசால், பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்ட நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நவம்பர் 1ஆம் தேதி முதல் 100 நாட்கள் தினமும் 100 கொடிக்கம்பங்கள் என 10 ஆயிரம் கொடிக் கம்பங்கள் நடப்படும், வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை பனையூரில் பத்தாயிரமாவது பாஜக கொடிக் கம்பம் நடப்படும் என அறிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து பாஜகவினர், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜக கொடி கம்பம் அமைப்பதற்கான ஏற்பாடுகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். அண்ணாமலை அறிவித்தபடி நவம்பர் 1ஆம் தேதியான நேற்று, சென்னை, கோவை உட்பட தமிழ்நாடு பல இடங்களில் பாஜகவினர் கொடிக் கம்பம் அமைக்க முயன்றனர். ஆனால், காவல்துறை அதற்கு அனுமதி மறுத்து, கூட்டம் கூடிய பாஜகவினரை கைது செய்தது.
தினமும் 100 பாஜக கொடிக் கம்பங்களை அமைக்க பாஜகவினர் திட்டமிட்ட நிலையில், முதல் நாளிலேயே அந்த பிளானுக்கு சிக்கல் நேர்ந்துள்ளது. அண்ணாமலை போட்ட சபதத்தை நிறைவேற்ற முடியாத ஆதங்கத்தில் பாஜகவினர் உள்ளனர். இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் ஓரிரு நாட்களுக்கு முன்பாக திமுக கொடிக் கம்பம் அமைக்கப்பட்ட தகவல் பாஜகவினரை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "பாஜக மாநிலத் தலைவரின் இல்லத்தருகே கொடி கம்பம் அமைத்து பாஜக கொடியேற்ற பல முறை அனுமதி கேட்டும் அனுமதி மறுத்த திமுக அரசு, யாருக்கும் எந்த இடையூறும் இல்லாத வகையில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை 300க்கும் அதிகமான காவல்துறையினரை கொண்டு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு பாஜகவினரை கைது செய்து சிறையிலடைத்து.
மேலும், தமிழகம் முழுதும் இன்று பல மாவட்டங்களில் கொடியேற்ற முனைந்த பாஜக நிர்வாகிகளை, தொண்டர்களை கைது செய்து சிறையிலடைத்து வருகிறது திமுக அரசு. பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளையும், அரசு ஆணைகளையும் குறிப்பிட்டு அதனால் அனுமதி மறுக்கப்படுவதாக சொல்கிறது.

மூன்று நாட்களுக்கு முன்னர் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி அன்று சென்னை மயிலாப்பூரில் மக்கள் நடமாடும் முக்கிய பகுதியில் தென் சென்னை தொகுதி பாராளுமன்ற உறுப்பினராலும், மயிலாப்பூர் சட்ட மன்ற உறுப்பினராலும் திமுக சார்பில் கட்சிக் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சிக்கு சட்டம் இல்லையா? நீதிமன்ற உத்தரவு திமுகவிற்கு பொருந்தாதா? சட்டத்தை மதிக்காதா திமுக? இந்த கொடிக்கம்பம் உடனடியாக அகற்றப்பட வேண்டும். சட்டத்தை மீறி கம்பம் அமைத்து கொடியேற்றிய அனைத்து திமுகவினரையும் கைது செய்ய வேண்டும் ஸ்டாலின் அரசு. தங்களை நடுநிலையாக செயல்படுவதாக அழைத்துக் கொள்ளும் சில ஊடகங்கள், இந்த விவகாரம் குறித்து அரசை கண்டிக்குமா? திமுக கூட்டணி கட்சியினர் இது குறித்து வாய் திறப்பார்களா? திமுக அரசின் அராஜகம் இது! ஜனநாயகத்தை சீர்குலைக்கும் அவலம் இது!!" என விமர்சித்துள்ளார்.
-
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது?












Click it and Unblock the Notifications