“கன்னித்தன்மை”.. தீட்சிதர் குழந்தைகளிடம் இருவிரல் டெஸ்ட்! ஆளுநர் பகீர் தகவல் - பாஜக நாராயணன் கேள்வி
சென்னை: சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு 2 விரல் பரிசோதனை செய்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்திய நிலையில் தமிழ்நாடு பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி பல்வேறு கேள்விகளை டிஜிபி சைலேந்திர பாபுவிடம் எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது, "சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை செய்ததாக பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் பரப்பப்பட்டு வருகின்றன என்றும், அவை உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் ஆகும் என்றும் தமிழக காவல் துறை தலைவர் (டிஜிபி) அவர்கள் கூறியுள்ளது வியப்பளிக்கிறது.

சட்டவிரோதமாக, மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளவர் தமிழகத்தின் தலைவர் அல்லது தமிழகத்தை ஆட்சி செய்பவரான மேதகு ஆளுநர். ஆனால், டிஜிபி அவர்கள் ஆளுநருக்கு பதிலளிக்காமல் ஊடகங்கள் பரப்புவதாக சொல்வது விசித்திரமாக உள்ளது வியப்பளிக்கிறது.
மேலும், "சட்ட ஆலோசகரின் அறிவுரைப்படி, இரண்டு சிறுமியர் மட்டும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களிடம், பெண் டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அவர்களை இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை" என்றும் கூறியுள்ளார் டிஜிபி அவர்கள். குழந்தை திருமணம் நடந்ததாக அளிக்கப்பட்ட புகாருக்கு பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுத்ததோடு நில்லாமல், குழந்தைகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியது ஏன்?

குழந்தைகளை வீட்டிலிருந்து வெளியே அழைத்து சென்றது ஏன்? அதற்கு அனுமதி அளித்தது யார்? அந்த குழந்தைகள் தாங்கள் தாக்கப்பட்டதாகவோ அல்லது துன்புறுத்தப்பட்டதாகவோ புகார் அளித்தனரா? அப்படி புகார் அளிக்கப்பட்டிருந்தால் அதன் முதல் தகவல் அறிக்கை எங்கே? குழந்தை திருமணம் நடத்தியதற்கு மருத்துவ பரிசோதனை செய்ய சட்டத்தில் இடமிருக்கிறதா? உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி குழந்தைகளை எந்த விதமான சோதனைக்கும் உட்படுத்தக்கூடாது என்பது தெரியாதா?
அப்படி வீடு புகுந்து அந்த குழந்தைகளை அழைத்து சென்ற காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? முறையான காரணம் இல்லாமல் குழந்தைகளை மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் யார்? அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? சிறு குழந்தைகளை மன உளைச்சலுக்கு உள்ளாக்க வேண்டிய அவசியம் என்ன?
சட்ட விரோதமாக அந்த குழந்தைகளை அழைத்து சென்று பரிசோதனை செய்திருந்தால், அழைத்து சென்ற காவல்துறையினர் மற்றும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மீது POCSO சட்டம் பாய வேண்டுமா இல்லையா? மேலும், கடந்த 25/10/2022 அன்று இரு தீட்ஷிதர் குடும்பங்கள், காவல்துறையினர் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்ற விதிமுறைகளை மீறி குழந்தைகளை விசாரணை மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்துவது குறித்து கடிதம் எழுதியுள்ளதை டிஜிபி மறுப்பாரா?

இன்று மறுப்பு தெரிவிக்கும் டிஜிபி அவர்கள், அந்த கடிதங்ககளின் குற்றச்சாட்டுக்கு அப்போதே மறுப்பு தெரிவிக்காதது ஏன்? குழந்தைகளின் தாயாரை இரவு 11.30 மணி வரை காவல் நிலையத்தில் வைத்திருந்ததாக அவர்கள் குறிப்பிட்டதை மறுப்பாரா டிஜிபி? ஆறு மாதங்களுக்கும் மேலாக அந்த குடும்பங்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காதவர் நேற்று திடீரென அதை மறுப்பதற்கென்ன காரணம்?
குற்றச்சாட்டு கடுமையானது என்பதோடு குற்றச்சாட்டை முன் வைத்தவர் ஆளுநர் என்பதாலும், இந்த விவகாரத்தை இன்று சில அமைச்சர்களும் மறுத்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணையை உறுதி செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்த டிஜிபி அவர்கள் தயாரா? அதுவரை பாதிக்கப்பட்ட அந்த பெண் குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். உண்மைகள் வெளிவர வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications