“முத்திருச்சே”..மமகவுடன் கூட்டணி “மதவாதம்”! திமுக எம்எல்ஏவுடன் பாஜக நாராயணன் சூடான வாக்குவாதம்
சென்னை: முதலமைச்சர் முக ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பேசியதை வைத்து அவரை விமர்சித்த பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதிக்கும், திமுக எம்.எல்.ஏ பரந்தாமனுக்கும் இடையே ட்விட்டரில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
பீகாரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ அந்தக் கட்சி தலைமையில் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். கூட்டணியாக அமைக்க முடியவில்லை என்றால் தொகுதிப் பங்கீடுகளை மட்டும் செய்து கொள்ளலாம். அதுவும் முடியவில்லை என்றால் பொது வேட்பாளர் அறிவித்துக் கொள்ளலாம்.

தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியாது. அரசியல் கட்சிகளுக்கு இடையே குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும். இதுபோன்று எழும் பிரச்னைகளைச் சரிசெய்ய ஒருங்கிணைந்த பாஜகவை வீழ்த்துவதை அனைத்துத் தலைவர்களும் ஒற்றை இலக்காகக் கொண்டு இருக்கிறார்கள். பாஜகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்." என்று பேசி உள்ளார்.
இதனை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்ட நாராயணன், "காங்கிரஸ் தலைமையில் கூட்டணி கிடையாது. அதிக இடம் கேட்டு தொல்லை செய்பவர்களுக்கு தொகுதி பங்கீடு மட்டுமே. அதுவும் முடியவில்லையென்றால் பொது வேட்பாளர் (திமுக வேட்பாளர்). ஆக மொத்தம் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் திமுகவிற்கு அடிமையாக இருக்க வேண்டும். அதானே ஸ்டாலின் அவர்களே?" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த எழும்பூர் திமுக எம்.எல்.ஏ. ஐ பரந்தாமன், "அடிமைத்தனம், முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், இவையெல்லாம்
பாஜக கடைப்பிடிப்பது! #UnitingIndia2024 கூட்டணிக்கு இது இல்லை. எங்களுக்கு இருப்பது எல்லாம் மதச்சார்பின்மை, சமூகநீதி, ஜனநாயகம்." என்று குறிப்பிட்டார்.
உடனே நாராயணனோ, "மனித நேய மக்கள் கட்சியுடன் கூட்டணி வைப்பது மதசார்பற்ற தன்மையல்ல, 'மதவாதம்'! வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த கொடியவர்களை இதுவரை தண்டிக்காதது 'சமூக அநீதி'! திமுக வை விமர்சிப்பவர்களை சிறையிலடைப்பது 'ஜனநாயக படுகொலை, ஃபாசிஸம்' இதுவே திராவிட மாடல்?" என்று விமர்சித்தார்.
மனித நேய மக்கள் கட்சியுடன் கூட்டணி வைப்பது மதசார்பற்ற தன்மையல்ல, 'மதவாதம்'!
— Narayanan Thirupathy (@narayanantbjp) June 24, 2023
வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த கொடியவர்களை இதுவரை தண்டிக்காதது 'சமூக அநீதி'!
தி மு க வை விமர்சிப்பவர்களை சிறையிலடைப்பது 'ஜனநாயக படுகொலை, ஃபாசிஸம்'
இதுவே திராவிட மாடல்? https://t.co/Io2t3TcUqk
இதற்கு பதிலளித்த பரந்தாமன், "இந்திய குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் சாமி தரிசனம் செய்து முடித்து வெளியே வந்தவுடன் ஜலம் விட்டு கோயிலை கழுவியது. இந்தியாவின் வலிமையே ஜனநாயகம். ஜனநாயகத்தின் வலிமையே பாராளுமன்றம். இந்தியாவின் பாராளுமன்றத்தின் தலைமையே குடியரசுத்தலைவர் அவரை அழைக்காமலேயே பாராளுமன்றத்தை பண்டாறங்களுடன் திறந்தது. பாஜகவின் சனாதன மாடலா? நாராயணன் சார்?" என்று கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications