Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“ஹா ஹா ஹா! பயம்..” சிபிஐ அனுமதியை ரத்து செய்த தமிழ்நாடு அரசு - பாஜக நாராயணன் கொடுத்த ரியாக்சன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய புலனாய்வுத் துறையான (CBI)-க்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்று இருக்கும் நிலையில், பயந்துவிட்டதாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்து உள்ளார்.

சிபிஐ, என்.ஐ.ஏ, வருமான வரித்துறை, அமலாக்கத் துறை போன்ற மத்திய விசாரணை நிறுவனங்களை மத்திய பாஜக அரசு அரசியல் லாபத்துக்காக தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடங்கி பலரை இந்த நிறுவனங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து உள்ளன.

BJP Narayanan said that Tamilnadu govt feared by cancelling permission to CBI

டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியா, மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக், மேற்கு வங்க அமைச்சர் உள்ளிட்டோரும் இதேபோல் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் சகோதரியும் விசாரணைக்கு ஆஜராகி வருகிறார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உறவினரும் திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகருமான அபிஷேக் பானர்ஜியும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வளையத்தில் இருக்கிறார். இந்த நிலையில் கேரளா, மேற்குவங்கம், தெலுங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப், மிசோரம் போன்ற மாநிலங்கள் சிபிஐக்கு வழங்கிய பொது அனுமதியை ரத்து செய்து இருந்தன.

BJP Narayanan said that Tamilnadu govt feared by cancelling permission to CBI

கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. தமிழ்நாடு தலைமை செயலகத்திலும் அமலாக்கத்துறை 13 மணி நேரம் சோதனை மேற்கொண்டது. இந்த நிலையில் நேற்று இரவு சோதனை முடிந்த பின் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதில், "மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946, (Delhi Special Police Establishment Act. 1946 (Central Act XXV of 1946)}-ன் பிரிவு 6-ன்படி வகுக்கப்பட்டுள்ளது.

கடந்த 1989 மற்றும் 1992ஆம் ஆண்டுகளில், மேற்படி சட்டத்தின் கீழ், சிலவகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டு இருந்த பொதுவான முன் அனுமதியை, இன்று தமிழ்நாடு அரசு திரும்பப்பெற்று ஆணையிட்டு உள்ளது. இதன்படி, மத்திய புலனாய்வுத் துறை, தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக. தமிழ்நாடு அரசின் முன்அனுமதியை பெற்று, விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

BJP Narayanan said that Tamilnadu govt feared by cancelling permission to CBI

இதுபோன்ற ஆணையினை ஏற்கெனவே மேற்குவங்கம், ராஜஸ்தான், கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலுங்கானா போன்ற பல்வேறு மாநிலங்கள் பிறப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது." என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இதுபற்றி கருத்து தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "மத்திய புலனாய்வுத் துறை (CBI)-க்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு; தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் முன் அனுமதியை சிபிஐ பெறவேண்டும்" - செய்தி. ஹா ஹா ஹா ! பயம். மடியில் கனமிருந்தால் வழியில் பயம் ஏன்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+