சர்ச்சையை கிளப்பிய ஆளுநர் வெளிநடப்பு! சப்போர்ட்டிற்கு வந்த நாராயணன் திருப்பதி! என்ன சொன்னார் பாருங்க
சென்னை: சட்டசபையில் ஆளுநர் தேசிய கீதம் ஒலிக்கப்படுவதற்கு முன்பு வெளியேறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே ஆளுநருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ள பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, முதல்வர் ஜனநாயகத்திற்கு விரோதமாகச் செயல்படுவதாகச் சாடியுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் என்பதால் மரபுப்படி ஆளுநர் உரையுடன் இன்று தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது.
ஆளுநர் ரவி பேசத் தொடங்கும் போதே சட்டசபையில் கூச்சம் குழப்பம் நிலவியது. ஆளுநர் சமீபத்தில் தமிழ்நாட்டிற்குப் பதிலாகத் தமிழகம் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

சட்டசபை
அதற்கு எதிராக அவையில் இருந்த திமுக கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும், ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பும் செய்தனர். இதற்கிடையே ஆளுநர் தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையைப் படிக்காமல், அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளைத் தாமாகச் சேர்த்தும் பேசி உள்ளதாகச் சர்ச்சை கிளம்பியது. குறிப்பாகத் தமிழ்நாடு அரசு என்ற வார்த்தைக்குப் பதிலாக இந்த அரசு என்று பயன்படுத்தியுள்ளார். அதேபோல திராவிட மாடல் என்ற வார்த்தையையும் அவர் பயன்படுத்தவில்லை.

வெளியேறிய ஆளுநர்
இது தவிரப் பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர்கள் இருந்த பத்தியையும் அவர் படிக்காமல் விட்டது சர்ச்சையைக் கிளப்பியது. ஆளுநர் உரைக்குப் பின்னர் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் தாமாக முன்வந்து பேசிய வார்த்தைகளை அக்குறிப்பில் பதிவேற்றக்கூடாது என்றும் அவைக் குறிப்பில் அரசு தயாரித்துக் கொடுத்த உரை மட்டுமே இடம் பெறும் என்றும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஆளுநர் ரவி அவையில் இருந்து எழுந்து சென்றார். ஆளுநரின் இந்த செயலுக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நாராயணன் திருப்பதி
அதேநேரம் பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஆளுநர் ரவி செய்தது தவறில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் செய்ததே தவறு என்றும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டரில், "ஆளுநரின் உரையை எதிர்த்து ஆளும் திமுகவின் கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளார்களே? காலை உணவு அளிக்கக் கூடாது என்று எதிர்ப்பது ஏன்" என்று ட்வீட் செய்துள்ளார்.

ஜனநாயக விரோதம்
அதேபோல அவர் தனது மற்றொரு ட்வீட்டில், "உண்மைக்குப் புறம்பானதை ஆளுநர் பேச வேண்டிய அவசியமில்லை. ஆளுநர் அவையில் இருக்கும் போதே அவருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவது ஜனநாயக விரோதம்" என்று பதிவிட்டுள்ளார். இதேபோல பாஜகவைச் சேர்ந்த பலரும் கூட ஆளுநர் அவையில் இருக்கும் போதே முதல்வர் ஸ்டாலின் இப்படிப் பேசியது தவறு என்றே பதிவிட்டு வருகின்றனர்.

பாஜக
முன்னதாக இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், "ஆளுநரை வைத்து திமுகவின் சித்தாந்தத்தைப் புகழ்பாட வைக்க நினைக்கிறார்கள். அரசு சொல்வதை மட்டுமே பேச வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஆளுநருக்கு இல்லை. சட்டப்பேரவையில் ஆளுநரை அழைத்து அசிங்கப்படுத்தி உள்ளனர். இதுதான் ஜனநாயக மரபா.. ஆளுநரை அவமதிக்கும் கட்சிகள் ஜனநாயகத்திற்கு விரோதமான கட்சிகள்" என்று தெரிவித்தார்.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications