Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீலகிரி, கோவை தான் டார்கெட்.. டிச.27ல் தமிழகம் வரும் ஜேபி நட்டா.. முக்கிய தகவலை கூறிய சுதாகர் ரெட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவை மற்றும் நீலகிரி தொகுதிகளின் நாடாளுமன்ற பணிகளை மேற்கொள்ளும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டா வருவதாக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். ஜேபி நட்டாவின் தமிழக பயணம் முழுக்க முழுக்க கட்சியின் வளர்ச்சிக்காக மட்டுமே செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு கமலாலயத்தில் அவரது படத்திற்கு பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், நடிகை மதுவந்தி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சுதாகர் ரெட்டி கூறுகையில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாஜ்பாயின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகிறோம். கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாஜ்பாய் ஆட்சி

வாஜ்பாய் ஆட்சி

தனது ஆட்சி காலத்தில் வாஜ்பாய் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி காட்டியுள்ளார். ஆத்ம நிர்பர் பாரத்திற்கு வலிமையான அடித்தளமிட்டவர் வாஜ்பாய். அவரது பாதையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவில் ஊழலற்ற ஆட்சியை வழங்கியவர் வாஜ்பாய். அரசியலிலும் சொந்த வாழ்க்கையிலும் யாரையும் எதிரியாக பார்க்காதவர். அவருக்கு எதிரிகளே கிடையாது. இலவச கல்வி உள்ளிட்ட மக்களுக்கான திட்டங்களை செய்து காட்டியவர் என்று தெரிவித்தார்.

குடும்ப ஆட்சி

குடும்ப ஆட்சி

தொடர்ந்து தமிழகத்தில் நடக்கும் திமுக ஆட்சி குறித்து சுதாகர் ரெட்டி கூறுகையில், தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது. குடும்பத்தால் நடத்தப்படும் ஆட்சியாக இருந்து வருகிறது. ரவுடியிசமும், குண்டாயிசமும் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. கடந்த முறை பொங்கல் பரிசு வழங்கியதில் ஊழல் செய்யப்பட்டு, தரமற்ற பொருட்களை திமுக அரசு மக்களுக்கு வழங்கியது. ஆனால் இம்முறை பொங்கல் பரிசில் கரும்பு கூட இடம்பெறவில்லை என்று விமர்சித்தார்.

அதிமுகவுடனான நட்பு

அதிமுகவுடனான நட்பு

தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா வாகனம் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தின் நிலை இப்படிதான் இருக்கிறது என்று தெரிவித்தார். பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு, நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். இதனை பல முறை எங்களின் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறிவிட்டார். அதிமுகவுடனான கூட்டணி தொடர்ந்து வருகிறது. அதிமுகவை பொறுத்தவரை அவர்களுக்குள் என்ன பிரச்சினை இருந்தாலும், அவர்கள் எங்களின் நண்பர்கள் என்று தெரிவித்தார்.

தமிழகம் வரும் ஜேபி நட்டா

தமிழகம் வரும் ஜேபி நட்டா

தொடர்ந்து ஜேபி நட்டாவின் தமிழக பயணம் குறித்த கேள்விக்கு, டிசம்பர் 27ம் தேதி ஜேபி நட்டா தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்துவதற்காக மட்டும் தான் ஜேபி நட்டா வருகிறார். அதிலும் குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பணிகளை பூத் வரை மேற்கொள்ளும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஏராளமான புகார்கள் உள்ளன. அவரும் பதவி விலகவில்லை, முதலமைச்சரும் அவரை பதவியில் இருந்து நீக்கவில்லை என்று தெரிவித்தார்.

நீலகிரி, கோவை

நீலகிரி, கோவை

ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவை எதிர்த்து மத்திய இணையமைச்சர் எல்.முருகனை பாஜக களமிறக்கப் போவதாக தகவல் வெளியாகியது. அதேபோல் கோவை தெற்கு தொகுதி வானதி சீனிவாசன் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் கோவை மற்றும் நீலகிரி தொகுதிகளை குறிவைத்து பாஜக பல்வேறு திட்டங்களை தீட்டி வருவது தெரிய வந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+