"விபூதியை" தரையில் கொட்டினீங்களே.. "விபச்சாரி மகனா".. ஆ.ராசாவிற்கு எதிராக போலீசுக்கு ஓடிய பாஜக லீடர்
ஆ ராசா மீது நடவடிக்கை கோரி, தமிழக பாஜக சார்பில் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது
சென்னை: இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய ஆ.ராசாவை திமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. அத்துடன் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி டிஜிபியிடமும் புகார் தந்துள்ளார்.
ஆ.ராசா பேசிய வீடியோ ஒன்றை மாநில தலைவர் அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்..
இதற்கு பாஜக தரப்பு கேள்வி எழுப்பி வருகிறது... அத்துடன் அண்ணாமலை உட்பட பல்வேறு இந்து மத தலைவர்கள் இதற்கு கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

விபச்சாரி மகன்
அதில், "தனித் தமிழ்நாடு கேட்டார் பெரியார். ஆனால், பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட திமுக அதில் இருந்து விலகி ஜனநாயகத்துக்காக, இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்... சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன். இந்துவாக, இருக்கும் வரை நீ தீண்ட தகாதவன். எத்தனை, பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்" என்று ராசா பேசியிருக்கிறார்.. இதற்கு தமிழக பாஜக, போலீசில் புகார் தந்துள்ளது.. இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ராசா - சதி பேச்சு
"ஆ.ராசா மதியிழந்து, தகுதியிழந்து, தரம் தாழ்ந்து, தமிழகத்திலே சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது திட்டமிட்ட சதி பேச்சு. தான் எடுத்த உறுதிமொழிக்கு எதிரான ஒரு போக்கை அவர் கடைப்பிடித்து வருகிறார்.. நீ இஸ்லாமியனாக பிறந்தால், நல்ல தாய் பெற்ற மகன்.. நீ கிறிஸ்துவனாக இருந்தால் நல்ல தாய் பெற்ற மகன்.. ஆனால் நீ இந்துவாக இருந்தால் விபச்சாரியின் மகன் என்று பொதுமேடையில் சுட்டிக்காட்டி பேசுகிறார்.. இதைவிட ஒரு கேவலம் இந்து மக்களுக்கு, ஆன்மீகம் தழைத்த இந்த பூமிக்கு, தமிழக மக்களுக்கு, பக்தர்களுக்கு, கடவுளை வணங்குபவர் ஒவ்வொருவருக்கும் இதைவிட வேறு அவமானம் இருக்க போவதில்லை..

சஸ்பெண்ட்
தமிழக முதல்வர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.. ஆ.ராசா மன்னிப்பு கேட்டாலும் நாங்கள் விடமாட்டோம்.. மறுபடியும் அவர் தேர்தலை சந்திப்பார்.. அதையும் நாம வேடிக்கைதான் பார்க்கபோகிறோம்.. திமுகவை விட்டே அவரை நீக்க வேண்டும்.. இல்லாவிட்டால் ஸ்டாலின் சொல்லித்தான் அவர் இப்படி பேசுகிறார் என்று அர்த்தம் கொள்ளப்படும்.. வடமாநிலங்களில், பாஜகவில் ஒருசிலர் இப்படி பேசுகிறபோது, அவர்களை அங்கு சஸ்பெண்ட் செய்துவிடுகிறார்கள்.. இதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்..

விபூதி திருநீறு
அதனால், திமுக இதை வேடிக்கை பார்க்க கூடாது.. தேவர் ஐயா கோயிலில் போய் விபூதியை வாங்கி தலையில் போட்டுக் கொண்டதும், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு போய் குங்குமத்தை அழித்ததும், இவர் பேசுறதும், இதையெல்லாம் ஒன்று சேர்ந்து நடக்கிறதா? என தெரியவில்லை.. இதை கண்டித்து டிஜிபியிடம் புகார் தந்துள்ளோம்.. மாநில தலைவர் அண்ணாமலையின் அறிவுறுத்தல்படி, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.. வடஇந்தியா, தென்னிந்தியா என்று பிரிக்க முடியாது.. முட்டாள் பசங்க, பம்பாயிலும் பிள்ளையார் இருக்கார், பிள்ளையார்பட்டியிலும் பிள்ளையார் இருக்கார்.. கல்கத்தாவிலும் காளி கோயில் இருக்கு. தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் காளி கோயில் இருக்கு..

கரு.நாகராஜன்
மக்களை ஏமாற்றி பிழைத்ததெல்லாம் போதும்.. நீ அரசியல் மட்டும் செய்.. மக்களுக்கு என்ன செய்றேன்னு சொல்லு.. மக்கள் பணத்தை கொள்ளையடிக்காதே.. மின்சார கட்டணத்தை உயர்த்திட்டாங்க.. தேர்தலில் சொன்னதையும் எதையும் செய்யல.. இதெல்லாம் நாங்கள் சொல்லிவிடக்கூடாது என்று, இப்படியெல்லாம் பேசி மக்களை குழப்பறாங்க..நாட்டை குழப்பறாங்க.. கடவுளை நிந்திப்பவன் என்னைக்குமே நல்லா வாழ முடியாது.." என்றார் கரு. நாகராஜன்.












Click it and Unblock the Notifications