• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"லியோனி" கைதாவாரா?.. "காலி நாற்காலியை பார்த்துபேச நான் என்ன பாஜககாரனா".. போலீசுக்கு ஓடிய இந்துமுன்னணி

Google Oneindia Tamil News

சென்னை: திண்டுக்கல் லியோனி மீது, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பான நடவடிக்கை வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

Recommended Video

  BJP-ல இருக்கவங்க கூட Support-க்கு வரல | Gayathri Raguram

  பட்டிமன்ற பேச்சாளராக அறிமுகமாகி, பிறகு பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் திண்டுக்கல் ஐ.லியோனி... இப்போது தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராகவும் உள்ளார்..

  இவரது பேச்சுக்கள் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம்.. அந்த வகையில், திருமாவளவன் 60வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடந்த விழாவில், லியோனியும் பங்கேற்றார்.

  லியோனி கைதாவாரா.. பதவிக்கு சிக்கலா.. அதென்ன டக்குனு இப்படி சொல்லிட்டாரே.. திமுகவுக்கு வந்த சங்கடம்லியோனி கைதாவாரா.. பதவிக்கு சிக்கலா.. அதென்ன டக்குனு இப்படி சொல்லிட்டாரே.. திமுகவுக்கு வந்த சங்கடம்

  லியோனி

  லியோனி

  அப்போது அவர் பேசிய பேச்சில் பெரும்பாலும், பாஜகவை சீண்டி பேசியிருந்ததாக கூறப்படுகிறது.. அதன் சுருக்கம் இதுதான்: "சிறுத்தை விலங்கை திருமாவளவன் ஏன் தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை.. 5 கிமீ தொலைவில் பார்க்கக்கூடிய ஆற்றல் சிறுத்தைக்கு உண்டு.. மணிக்கு 120 வேகத்தில் ஓடும்.. அதுகுட்டி போடும்போது 5 கிலோதான் இருக்கும்..

  கழுகுகள்

  கழுகுகள்

  ஒரு கழுகுகூட தூக்கி செல்லும் எடை குறைவானதுதான் சிறுத்தை. ஆனால், அந்த கழுகுகளிடமிருந்தும், மற்ற எதிர்ப்புகளிடம் இருந்தும், தன்னைத்தானே பாதுகாத்து ஒருங்கிணைக்கக்கூடிய ஆற்றல் சிறுத்தைக்கு உண்டு.. கிராமங்களில் இருக்கும் கிராமப்பெண்கள் திருமணம் முடிந்து வாழ வேண்டும் என்பதற்காக தன்னுடை ய திருமணத்தை தியாகம் செய்து இங்கு உட்கார்ந்திருக்கிறார் திருமாவளவன்.. அவரை ஒரு சாதீயய சங்க தலைவராக என்னால் பார்க்க முடியவில்லை..

   கமெண்ட்கள்

  கமெண்ட்கள்

  இப்போது திருவள்ளுவரையே ஜாதிக்குள் கொண்டு வந்துவிட்டு, பிளான் போட்டுட்டு இருக்காங்க.. மாப்பிள்ளை ஐயர் மாதிரி இருக்கார் இல்ல.. அவர் உட்கார்ந்திருக்கிற சைஸ், யாகம் வளர்க்கிற மாதிரியே இருக்குது இல்லை.. லைட்டா தோளில் நூல் இருக்கு இல்லே.. இப்படியெல்லாம் கமெண்ட்களை போடுகிறார்கள்.. ஆனால், அவர் எதிலுமே அடங்கவில்லை.. இப்படித்தான், தஞ்சாவூரில் 2 பேர் பேசிக்கிறாங்க.. மாப்பிள்ளை, திருவள்ளுவர் நம்ம ஆள் மாப்பிள்ளை.. மறைச்சிட்டாங்க.. நம்ம சாதியை பற்றிதான் திருக்குறளில் 2 முறை சொல்லியிருக்காரு.. அறிவுடையவர் எல்லாம் "உடையார்"

  உடையார்

  உடையார்

  நான் பொதுவாக எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் எவ்வளவு நேரம் பேசுவது என்று கேட்பேன்.. நீங்க எவ்வளவு நேரமாவது பேசுங்க.. நாங்க 10 நிமிஷத்தில் போயிடுவாம் என்று சொல்வார்கள்.. ஆளில்லாமல் வெறும் நாற்காலியை பார்த்து பேசறதுக்கு நான் என்ன பாஜககாரனா?அதிமுககாரனா? " என்று பல்வேறு விஷயங்களை பேசினார் லியோனி.. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து, பாஜக உட்பட இந்து முன்னணி தரப்பு ஆவேசமாகி வருகிறது.

   கமிஷனர் அலுவலகம்

  கமிஷனர் அலுவலகம்

  இதனிடையே, இந்து மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வரும் திண்டுக்கல் லியோனியை கைது செய்ய வேண்டும் என்று பாரத் இந்து முன்னணி இயக்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது... லியோனி பல்வேறு மேடைகளில் தொடர்ந்து இந்து மதத்தைக் குறித்தும், இந்து மத வழிபாடுகளை குறித்தும் அவதூறு கருத்துக்களை பேசி வருவதால் அவரை கைது செய்ய வேண்டும்" என்று பாரத் இந்து முன்னணி இயக்கம் தன் புகாரில் தெரிவித்துள்ளது.

  English summary
  BJP news: Dindigul Leoni slams indirectly BJP and ADMK in Thirumavalavans meeting திண்டுக்கல் லியோனி மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X