தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்!
சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்கு பின் விஜயுடன் கூட்டணி வைப்பதற்கான ஆலோசனைகளை பாஜக செய்து வருகிறதாம். இதற்கான திட்டங்களை இப்போதே பாஜக வகுத்து உள்ளதாம்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது. ஆளுங்கட்சியான திமுக ஒருபுறம் 'மீண்டும் நாங்களே' என முழங்க, எதிர்க்கட்சியான அதிமுகவோ 'மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சி' என மல்லுக்கட்டுகிறது. ஆனால், இந்த முறை யாருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்பதுதான் கமலாலயத்தின் கணிப்பாக இருக்கிறதாம்.

"எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது!"
டெல்லியில் இருந்து வரும் தகவல்கள்படி, தமிழகத்தில் ஒரு 'தொங்கு சட்டசபை' (Hung Assembly) அமையவே அதிக வாய்ப்புள்ளதாக பாஜக மேலிடம் கருதுகிறது. இதைப் பகிரங்கப்படுத்தும் விதமாகத்தான் நேற்று புதுச்சேரியில் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே பேசிய பேச்சும் அமைந்திருக்கிறது.
"தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், தேர்தலுக்குப் பிறகு விஜய்யுடன் பேசி என்.டி.ஏ (NDA) கூட்டணி ஆட்சியை அமைப்போம். திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது!" - அத்வாலேவின் இந்த ஸ்டேட்மென்ட் சாதாரணமானதல்ல, இது பாஜகவின் 'போஸ்ட் எலக்சன்' ஸ்கெட்ச் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
கூட்டணி கணக்கு: TVK + BJP + AIADMK?
பாஜகவின் கணக்குப்படி, தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஒரு மெகா கூட்டணியை உருவாக்கத் திட்டம் தயாராகி வருகிறதாம்.
விஜய்யின் TVK: இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் வாக்குகளைப் பிரித்து கிங் மேக்கராக உருவெடுக்கும்.
எடப்பாடியின் AIADMK: எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்து, அவருக்குப் பின்பலமாக இருப்பது.
பிஜேபியின் பங்களிப்பு: இந்த இரு துருவங்களையும் இணைத்து ஒரு நிலையான ஆட்சியை வழங்குவது.
விஜய் சம்மதிப்பாரா?
தற்போது விஜய், பிஜேபியை "கருத்தியல் எதிரி" என்றும், திமுகவை "அரசியல் எதிரி" என்றும் விக்ரவாண்டி மாநாட்டில் சாடியிருந்தார். ஆனால், இப்போதெல்லாம் விஜய் பாஜகவை அடிப்பது இல்லை. தேர்தல் முடிவுகள் ஒருவேளை பாஜக கணிப்பது போல யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத சூழலை உருவாக்கினால், "ஆட்சி அதிகாரம்" எனும் துருப்புச் சீட்டை வைத்து விஜய்யை வளைக்க பாஜக காய் நகர்த்தும் என்கிறார்கள். ஏற்கனவே பாஜகவின் பழைய தலைகள் பலர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இருக்கிறார்கள். இதனால் அவர்களை வைத்து கூட்டணியை உறுதி செய்யலாம் என்று டெல்லி நினைக்கிறதாம்.
ராமதாஸ் அத்வாலேவின் பேச்சு, ஒரு ட்ரையல் ரன் (Trial Run) போலத்தான் பார்க்கப்படுகிறது. "விஜய் எங்களுடன் வருவார்" என அவர் அழுத்திச் சொல்வது, தேர்தல் களத்தில் ஒரு புதிய விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
ஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்தி ஓட்டுகளும், அதிமுகவின் வாக்கு வங்கியும், விஜய்யின் புது ரத்தமும் இணைந்தால் 'தாமரை' தமிழகத்தில் மலருமா அல்லது இந்தக் கணக்குகள் காகிதப் புலியாகவே நிற்குமா?
விஜய்யின் வேட்பாளர் பட்டியலில் இருக்கும் இள ரத்தங்கள், பல தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுகவின் வெற்றி வாய்ப்பைக் கிள்ளும் என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்திருக்கிறதாம். அதனால்தான் டெல்லி இப்போது விஜய் பக்கம் அதிகம் சாய்ந்திருக்கிறது!
மே 2026-ல் தெரிந்துவிடும்!












Click it and Unblock the Notifications