ஆளுநர் பாதுகாப்பு விவகாரம்.. முதல்வர் ஸ்டாலின் தரும் விளக்கம் ஏற்புடையதல்ல.. பாஜக அண்ணாமலை
சென்னை: ஆளுநருக்கு பாதுகாப்பு குறைபாடு குறித்து முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம் ஏற்புடையதல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
Recommended Video
பிரதமரின் மக்கள் நலத் திட்டங்கள் புதிய இந்தியா என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆளுநருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜக நடக்காத விஷயத்தை அரசியல் ஆக்குவதாக முதல்வர் சட்டசபையில் பேசியது குறித்த கேள்விக்கு,
ஆளுநர் தாக்கப்பட்டாரா இல்லையா என்பதை இன்று காலை நான் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவை பார்த்தால் தெரியும்.

முன்னெச்சரிக்கை
எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு இயந்திரத்தை முதல்வர் இயக்குகிறாரா வேறு யாரும் இயக்குகிறார்களா? கருணாநிதிக்கும் எங்களுக்கும் சித்தாந்த முரண்பாடு இருந்தாலும் இது போன்ற விஷயங்களில் அவர் சமரசம் செய்து கொண்டதில்லை. நேற்று நடந்தது கண்டிப்பாக பாதுகாப்பு குறைபாடு தான் என்றார்.

10.5 சதவீதம்
வன்னியகளுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு, பாஜக அதற்கு ஆதரவாக தான் உள்ளது என்றார். திரைப்பிரபலங்கள் பாஜகவில் சேர்ந்து கட்சி நிகழ்வில் பங்கேற்பது குறித்த கேள்விக்கு, திமுக திரைத்துறையினரை நசுக்கி கொண்டிருக்கிறது. பாஜக அவ்வாறு செய்வதில்லை என்பதால் அவர்கள் கருத்து தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

நடிகர் பாக்யராஜ்
நடிகர் பாக்யராஜ் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்த கேள்விக்கு, பாக்யராஜ் பாஜகவில் சேரவில்லை, அவர் பாஜக ஆதரவாளர் அல்ல மோடி ஆதரவாளர் என தெரிவித்தார். இளையராஜாவிற்கு ஜிஎஸ்டியில் இருந்து சமமன் வந்ததால் தான் மோடியை புகழ்ந்தாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இளையராஜா சொன்னதில் என்ன தவறு என ஆதாரப்பூர்வமாக பேசாமல் அவரை விமர்சிப்பதாக தெரிவித்தார்.

ஆளுநருக்கு எதிராக போராட்டம்
ஆளுநருக்கு எதிராக போராடுவதற்கு மக்களுக்கு அதிகாரம் உள்ளதென்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அறிக்கை குறித்த கேள்விக்கு, இப்போது நடந்ததை நியாயப்படுத்தும் கே.எஸ் அழகிரி எமர்ஜென்சிக்கு பிறகு தமிழகத்தில் திமுகவால் இந்திரா காந்திக்கு நடந்ததையும் நியாயப்படுத்துகிறாரா? முதல்வர் அந்நியன் அம்பி போல செயல்படுகிறார், சட்டசபையில் ஆளுநரை பற்றி ஸ்டாலின் பேசுவதற்கும், வெளியில் திமுக நிர்வாகிகள் ஆளுநர் குறித்து பேசுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது, முதலில் திமுக தான் ஆளுநருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தது பின்னர் கூட்டணி கட்சிகளை முன்னே விட்டு விட்டு ஒதுங்கி கொண்டது என விமர்சித்தார்.
-
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலை பேட்டி.. டிசம்பர் 2025-லேயே விலக முடிவு செஞ்சேங்க.. அப்போ அமித் ஷா சொன்னது என்ன தெரியுமா? -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' இயக்கத்தை நேற்றுதான் தொடங்கினாரா? தீயாகப் பரவிய தகவல்.. உண்மை என்ன? -
அண்ணாமலைய வச்சு மாஸ்டர் பிளான்! பின்னணியில் பிரபலம்.. பாஜகவின் A டீமா? 50% டெல்லி ப்ளூபிரிண்ட் ரெடி -
அங்குட்டு போய் விளையாடுங்கப்பா.. அண்ணாமலை இயக்கம் ஆரம்பித்த அதே நாள்! குறுக்கே வந்த லதா ரஜினிகாந்த் -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
என்னோட 4% வாக்கு வங்கியை 2% மாத்த இன்னொருத்தன் வந்துட்டானா.. அண்ணாமலையால் புலம்பும் சீமான்.. மீம்ஸ்! -
பாஜக, ஆர்எஸ்எஸ் பெயர்கள் இல்லாத புதிய அரசியல் முகமூடி! அண்ணாமலை பிளான் பி! மாணிக்கம் தாகூர் சூசகம் -
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்!












Click it and Unblock the Notifications